611. ஊரீம், தும்மீம் ஆகியவற்றைப்பற்றி 9 குறிப்புகள்
பரிசுத்த வேதாகமத்தில் ஊரீம், தும்மீம் ஆகியவற்றைப்பற்றி ஒரு சில செய்திகள் சொல்லப்பட்டிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
1. இவற்றைச் செய்யுமாறு தேவன் மோசேக்கு எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. நியாயவிதி மார்ப்பதக்கத்தில் இவற்றை வைக்குமாறு தேவன் மோசேக்குக் கூறியிருக்கிறார். (யாத் 28:16,30).
2. ஆரோனுக்கு ஆசாரிய வஸ்திரம் தரிக்கப்பட்ட போது, மோசே ஊரீம், தும்மீம் ஆகியவற்றை நியாயவிதி மார்ப்பதக்கத்தில் வைத்தார். ஆகையினால், இவை ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கவேண்டும் (லேவி 8:8).
3. தேவனுடைய செய்தியைக் கூறுவதற்கும், அவருடைய நியாயத்தீர்ப்பை அறிவிப்பதற்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலிருக்கும் ஊரீம், தும்மீம் ஆகியவை பயன்படுத்தப்பட்டது. ஒன்றில் “”ஆம்” என்றும், மற்றொன்றில் “”இல்லை” என்றும் எழுதப்பட்டிருக்கலாம் என்பது சிலருடைய கருத்து. இதன் வாயிலாகப் பிரதான ஆசாரியர் தேவனிடமிருந்து பதிலைப் பெற்றுக்கொண்டார்.
4. ஊரீம், தும்மீம் ஆகியவற்றைச் செய்தது மோசேயா, தேவனா அல்லது அவர்களுடைய காலத்திற்கு முன்பே இவை வழக்கத்தில் இருந்ததா என்பது தெரியவில்லை.
5. யோசுவாவிற்குத் தேவனுடைய ஆலோசனையைக் கொடுப்பதற்காகப் பிரதான ஆசாரியர் ஊரீமைப் பயன்படுத்தினார். (எண் 27:1823).
6. பிரதான ஆசாரியர் ஊரீம், தும்மீம் ஆகியவற்றை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்று லேவிக்கு ஆலோசனை கூறப்பட்டிருக்கிறது. இக்கட்டான சமயங்களில் இவற்றைப் பயன்படுத்தலாம். (உபா 33:8).
7. பாபிலோன் சிறையிருப்பிற்குப் பின்பு, ஊரீம், தும்மீம் ஆகியவை பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. (எஸ்றா 2:63; நெகே 7:65).
8. இவை கற்களாக இருக்கலாம். மார்ப்பதக்கமும் இவையும் வெவ்வேறானவை. (யாத் 28:30).
9. ஊரீம், தும்மீம் ஆகியவை மூலமாகத் தேவனுடைய பதிலைப் பெறுவதற்கு “”சீட்டுப்போடுதல்” (லேவி 16:8; யோசு 18:610; 1சாமு 14:42; 1நாளா 24:31; 1நாளா 25:8; 1நாளா 26:1314) என்னும் வாக்கியமும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சீட்டுப் போடும்பொழுது சீட்டு “”விழுந்தது” என்று வரும்போது அது தேவனுடைய பதிலைக் குறிக்கிறது. (யோசு 18:11; யோசு 19:10) விழுந்தது என்பதற்கு ஆங்கிலத்தில் பல வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. (யோசு 18:11; யோசு 19:1, யோசு 19:24,32,40; யோசு 21:4)
நீதிமொழிகள் புஸ்தகத்தில் ஊரீம், தும்மீம் ஆகியவற்றைப் பற்றி இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. “”சீட்டு மடியிலே போடப்படும். காரியசித்தியோ கர்த்தரால் வரும்” (நீதி 16:33, நீதி 18:18)
சீட்டு என்பதற்கான எபிரெய வார்த்தை “”கோரல்” என்பதாகும். இதற்கு கல், சீட்டு, பங்கு என்று பொருள். சீட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பதைத் தேவனுடைய சித்தமாகவே கருதினார்கள். தேவனுடைய சமுகத்திற்கு முன்பாக பிரதான ஆசாரியர் ஊரீம், தும்மீம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தேவனுடைய செய்தியைப் பெற்றுக் கொண்டு, அதை இஸ்ரவேல் ஜனத்தாரிடம் கூறினார்.
612. ஊரீம் தும்மீம் பயன்படுத்தப்பட்ட 11 சந்தர்ப்பங்கள்
இஸ்ரவேல் ஜனத்தார் ஊரீம் தும்மீம் ஆகியவை மூலமாக தேவனுடைய செய்தியை பல சந்தர்ப்பங்களில் பெற்றிருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு :
1. கானான் தேசத்திற்குள் யோசுவா இஸ்ரவேல் ஜனத்தாரை வழிநடத்தினார். அப்போது ஊரீம், தும்மீம் ஆகியவை அவருடைய செயல்களை வழிநடத்திற்று (எண் 27:1824).
2. ஆகானுடைய விஷயத்தில் யோசுவா இவற்றைப் பயன்படுத்தினார். (யோசு 7:1418) கிபியோனுடைய விஷயத்தில் இதைப் பயன்படுத்தவில்லை (யோசு 9).
3. கானான் தேசத்தைக் கோத்திரத்தாருக்குப் பங்கு பிரித்துக் கொடுப்பதில் இவை பயன்படுத்தப்பட்டன. (எண் 34:17, யோசு 17:4). சில குறிப்பிட்ட பகுதிகளை யார் பெற்றுக் கொள்ள வேண்டும் என்னும் விசேஷ கட்டளைகளும் இவற்றின் மூலமாகவே இஸ்ரவேல் ஜனத்தாருக்கு வெளிப்படுத்தப்பட்டது. (யோசு 18:410). சீட்டுப்போட்டு தேவனுடைய சித்தத்தைத் தெரிந்து கொண்ட சம்பவங்கள் வேதாகமத்தில் பல இடங்களில் கூறப்பட்டிருக்கிறது. (எண் 26:5556; எண் 33:54; எண் 34:13; எண் 36:23; யோசு 13:6; எண் 14:2; எண் 15:1; எண் 16:1; எண் 17:12,1417; எண் 18:11, 18; எண் 19:1,10,17,24,32,40,51; எண் 21: 410,20,40; நியா 1:3; நியா 20:9)
4. லேவியருக்கு சில பட்டணங்களைத் தெரிந்தெடுப்பதற்கு இவை பயன்படுத்தப்பட்டன. (1நாளா 6:54, 6165)
5. ஆசாரியத்துவத்தின் முறைமைகளில் வந்த பிரச்சனைகள் இவற்றின் மூலமாகத் தீர்த்து வைக்கப்பட்டன. (1நாளா 24:57; 1நாளா 26:9)
6. யோசுவாவிற்குப் பின்பு, கர்த்தரிடம் விசாரிப்பதற்கு இஸ்ரவேல் ஜனத்தார் இவற்றைப் பயன்படுத்தினார்கள். (நியா 1:12; நியா 20:18,2628)
7. இவற்றின் மூலமாகச் சவுல் ராஜாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (1சாமு 10:2022)
8. யுத்தத்தில் இவற்றின் மூலமாகத் தேவனிடம் விசாரித்து சவுல் பதிலைப் பெற்றுக் கொண்டார். (1சாமு 14:3646)
9. சவுல் பாவம் செய்த பின்பு, இவற்றின் மூலமாகத் தேவன் அவருக்குப் பதில் தரவில்லை. (1சாமு 28:6)
10. தாவீது இவற்றின் மூலமாகத் தேவனை விசாரித்து பதிலைப் பெற்றுக் கொண்டார். (1சாமு 22:1015; 1சாமு 30:8; 2சாமு 2:1; 2சாமு 5:19,2325; 1நாளா 14:10,1417)
11. தேவனிடத்தில் விசாரிப்பதற்குத் தாவீது ஒருபோதும் பயப்படவில்லை. (1நாளா 21:30)
613. கர்த்தருடைய 33 நித்திய கட்டளைகள்
ஆசாரிய ஊழியம் ஆரோனுக்கும் அவருடைய குமாரருக்கும் நித்திய கட்டளையாகயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். இதுபோல வேறு சில காரியங்களும் கர்த்தருடைய நித்திய கட்டளையாயிருக்கிறது. அதன் விவரம் வருமாறு :
1. பஸ்கா (யாத் 12:14,24)
2. புளிப்பில்லா அப்பப்பண்டிகை (யாத் 12:17)
3. நித்திய விளக்கு (யாத் 27:21; லேவி 24:3)
4. ஆசாரியருடைய நிர்வாணம் மூடப்படுதல் (யாத் 28:43)
5. ஆசாரியத்துவம் (யாத் 29:9; யாத் 40:15)
6. ஏறெடுத்துப் படைக்கும் படைப்பு (யாத் 29:28; லேவி 10:15; எண் 18:8, 11, 19)
7. பலிகள் (யாத் 29:42)
8. தூபம் எரிதல் (யாத் 30:9)
9. பலிபீடத்தில் பாவநிவாரண பலி (யாத் 30:10)
10. ஊழியம் செய்வதற்கு முன்பாகச் சரீரங்களைக் கழுவுதல் (யாத் 30:21)
11. பரிசுத்த அபிஷேகத்தைலம் (யாத் 30:31)
12. தேவனுக்கும், இஸ்ரவேலருக்கும் நடுவில் ஓய்வுநாள் நித்திய உடன்படிக்கையின் அடையாளம். (யாத் 31:1617)
13. கொழுப்பையும், இரத்தத்தையும் புசிக்கக்கூடாது. (லேவி 3:17)
14. பீடத்தின்மேல் அக்கினி (லேவி 6:13)
15. போஜனபலிகள் (லேவி 6:1820)
16. ஆசாரியருடைய சொந்த பலிகள் (லேவி 6:22)
17. ஆசாரியருடைய பங்குகள் (லேவி 7:3436)
18. தேவனுடைய சமுகத்தில் ஊழியம் செய்யும்போது மதுஅருந்தி வெறித்திருக்கக் கூடாது. (லேவி 10:9)
19. பாவநிவாரண நாள் (லேவி 16: 2934)
20. பிசாசுகளை ஆராதிக்கக்கூடாது. (லேவி 17:7)
21. தேவனுக்கு முதற்கனியின் பலன்கள் (லேவி 23:14)
22. பெந்தெகொஸ்தே நாளை ஆசாரிப்பது. (லேவி 23:21)
23. கூடாரங்களின் பண்டிகை (லேவி 23:41)
24. சமுகத்தப்பம் (லேவி 24:69)
25. லேவியரின் பங்குவீதங்கள் (லேவி 25:34)
26. எக்காளங்களின் பண்டிகை (லேவி 10:8)
27. இஸ்ரவேல் தேசத்தில் சுதேசிக்கும், பரதேசிக்கும் ஒரே பிரமாணம். (எண் 15:15)
28. உப்பின் உடன்படிக்கை (எண் 18:19)
29. லேவியர் ஆசரிப்புக்கூடாரத்தில் சேவை செய்ய வேண்டும். (எண் 18:23; உபா 18:5)
30. கிடாரியின் சாம்பலைப் பற்றிய பிரமாணங்கள். (எண் 19:10)
31. ஆசாரிய ஊழியத்திற்குப் பின்பு வஸ்திரங்களைத் தோய்த்தல். (எண் 19:21)
32. பினெகாசிற்கு நித்திய ஆசாரிய பட்டம். (எண் 25:13)
33. கட்டளைகள் (உபா 7:9; உபா 29:29)
614. கர்த்தர் அபிஷேகம் செய்த 22 சம்பவங்கள்
கர்த்தர் ஆரோனையும் அவருடைய குமாரரையும் அபிஷேகம் பண்ணியதுபோல, வேறு சில நபர்களையும், பொருட்களையும் அபிஷேகம்பண்ணியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு :
1. பிரதான ஆசாரியனாக ஆரோன். (யாத் 28:41; யாத் 29:7; யாத் 30:30; யாத் 40:13; சங் 133:2)
2. ஆசாரியர்களாக ஆரோனுடைய குமாரர்கள். (யாத் 28:41; யாத் 29:29; யாத் 30:30; யாத் 40:15)
3. அடைகள் (யாத் 29:2; லேவி 2:4; எண் 6:15)
4. அதிரசங்கள் (லேவி 7:12)
5. வெண்கல பலிபீடம் (யாத் 29:36; யாத் 40:10; லேவி 8:11; எண் 7:1)
6. வாசஸ்தலம் (யாத் 30:26; யாத் 40:9; லேவி 8:10; எண் 7:1)
7. வெண்கலத்தொட்டி (யாத் 40:11)
8. வாசஸ்தலத்தின் பணிமுட்டுகள் (எண் 7:1)
9. மேசியா (1சாமு 2:10,35; சங் 2:2; சங் 45:7; ஏசா 61:1; லூக்கா 4:18; அப் 10:38)
10. சவுல் (1சாமு 9:16; 1சாமு 10:1; 1சாமு 15:1)
11. தாவீது (1சாமு 16:313; 2சாமு 2:4; 2சாமு 5:3)
12. அப்சலோம் (2சாமு 19:10)
13. சாலொமோன் (1இராஜா 1:3445; 1இராஜா 5:1)
14. ஆசகேல் (1இராஜா 19:15)
15. எலிசா (1இராஜா 19:16)
16. யெகூ (2இராஜா 9:36,12; 2நாளா 22:7)
17. யோவாஸ் (2இராஜா 11:2,12; 2நாளா 23:11)
18. யோவாகாஸ் (2இராஜா 23:30)
19. கோரேசு (ஏசா 45:1)
20. லூசிபர் (எசே 28:14)
21. ஏனோக்கும், எலியாவும் (சக 4:14)
22. பவுல் (2கொரி 1:21)
615. ஒவ்வொரு நாளும் பலிபீடத்தில் நடைபெறும் 12 காரியங்கள்
1. கர்த்தருடைய சந்நிதானத்தில் அடிக்கப்படும் காளை மரிக்கும் இடம். (யாத் 29:1011, 36).
2. கர்த்தருடைய சந்நிதானத்தில் அடிக்கப்படும் காளையின் இரத்தத்தில் ஒருபகுதி பலிபீடத்தின் கொம்புகள்மீது இடப்படும். (யாத் 29:12).
3. கர்த்தருடைய சந்நிதானத்தில் அடிக்கப்படும் காளையின் இரத்தத்தில் ஒருபகுதி போக, மற்ற இரத்தம் முழுவதும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றப்படும்.
4. காணிக்கையாகச் செலுத்தப்படும் காளையின் பகுதிகள் பலிபீடத்தின்மேல் தகித்துப்போடப்படும். (யாத் 29:13).
5. கடாவை அடித்து அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்க வேண்டும். (யாத் 29:16).
6. ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின் மேல் தகித்துவிடவேண்டும். (யாத் 29:1718).
7. இரண்டாவது ஆட்டுக்கடா அடிக்கப்பட்டு, அதின் இரத்தம் ஆரோன்மீதும், அவனுடைய குமாரர்மீதும் அவர்களுடைய வலதுகாது மடல், வலதுகையின் பெருவிரல், வலதுகாலின் பெருவிரல் ஆகியவற்றில் இடப்பட்டு, மற்ற இரத்தம் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கப்பட வேண்டும். (யாத் 29:1921).
8. காணிக்கைகளைப் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் தகிக்கவேண்டும். (யாத் 29:25)
9. பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவின் மாம்சத்தைப் பலிபீடத்தில் வேவித்து, அதை ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே ஆரோனும், அவனுடைய குமாரரும் புசிக்க வேண்டும். (யாத் 29:3133).
10. இரத்தம், சாம்பல் ஆகியவற்றிலிருந்து பலிபீடத்தைச் சுத்தி செய்ய வேண்டும். (யாத் 29:36).
11. பலிபீடத்தைப் பரிசுத்தப்படுத்தும்படி, அதை அபிஷேகம் பண்ண வேண்டும்.
12. புசிக்கப்படாத மீந்திருக்கும் பிரதிஷ்டையின் மாம்சம் மறுநாளில் பலிபீடத்தின்மீது சுட்டெரிக்கப்பட வேண்டும். (யாத் 29:34).
616. நியாயபிமானத்தில் தேவனும் இஸ்ரவேலரும்
ஏழுநாட்களுக்குப் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தம் செய்த பின்பு, அதை வேறுபிரித்து பரிசுத்தமாக்க வேண்டும் (யாத் 29:3637). இதன் பின்பு, ஒவ்வொரு நாளும் பலியிட வேண்டியவைகள் ஆரம்பமாகிறது (யாத் 29:3842; எபி 9:9; எபி 10:12).
கர்த்தர் ஓய்வுநாளைப்பற்றி சொல்லியிருக்கிற பிரமாணம் இஸ்ரவேல் புத்திரரோடு தொடர்புடையது. கர்த்தர் ஓய்வுநாள் பிரமாணத்தை இஸ்ரவேல் புத்திரருக்கு பிரத்தியேகமாக சொல்லியிருக்கிறார். அதன் விவரம் வருமாறு:
1. நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி கூறுவாயாக. (யாத் 31:13).
2. நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்.
3. இது எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.
4. இது உங்கள் தலைமுறைதோறும் அடையாளமாயிருக்கும்.
5. உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி இதை ஆசரிக்க வேண்டும்.
6. உங்களைக் கர்த்தர் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார்.
7. நீங்கள் ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக. (யாத் 31:14).
8. அது உங்களுக்குப் பரிசுத்தமானது.
9. இஸ்ரவேல் புத்திரர் ஓய்வுநாளை ஆசரிக்க வேண்டும். (யாத் 31:16).
10. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்க வேண்டும்.
11. அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும். (யாத் 31:17).
617.ஆரோனிடத்தில் 14 ஆவிக்குரிய பின்மாற்றம்
1. ஜனங்கள் மோசேயைப் பற்றித் தவறாகக் கூறியதை ஆரோன் கவனித்துக் கேட்கிறார் (யாத் 32:1).
2. திரளான ஜனங்கள் விக்கிரகாராதனை செய்ய வேண்டுமென்று கூறியபோது, ஆரோனும் சம்மதம் தெரிவித்து, தன்னுடைய பெயர், புகழை ஸ்தாபிக்க விரும்புகிறார் (யாத் 32:1,22).
3. ஒரு விக்கிரகத்தைச் செய்வதற்கு ஆரோனும் ஜனங்களோடு சம்மதம் தெரிவிக்கிறார் (யாத் 31:2).
4. விக்கிரகத்தை வார்ப்பிக்க ஜனங்களிடத்திலிருந்து பொன்னணிகளைப் பெற்றுக் கொள்கிறார் (யாத் 31:4).
5. ஆராதனை செய்வதற்கு ஜனங்களுக்கு ஒரு பொன்கன்றுக்குட்டியை வார்ப்பிக்கிறார்.
6. பொன்கன்றுக்குட்டிக்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டுகிறார் (யாத் 31:5).
7. கன்றுக்குட்டிக்கு ஒரு பண்டிகையை நியமித்து, கன்றுக்குட்டியைக் கர்த்தரோடு ஒப்பிட்டுக் கூறுகிறார்.
8. கன்றுக்குட்டிக்குச் சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதான பலிகளைச் செலுத்துகிறார்(யாத் 31:6).
9. கன்றுக்குட்டியை ஆராதிக்கும்போது ஜனங்களைப் புசிக்கவும், குடிக்கவும், உட்கார்ந்து விளையாடவும் அனுமதிக்கிறார் (யாத் 32:6,19).
10. கன்றுக்குட்டியைப் பணிந்து கொள்கிறார் (யாத் 31:8).
11. இஸ்ரவேலரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக் கொண்டுவந்த தெய்வங்கள் இவைகளே என்று விக்கிரகங்களைக் குறித்துக் கூறுகிறார்.
12. ஆரோன் தான் செய்த பாவத்தை மற்றவர்கள்மீது சுமத்துகிறார் (யாத் 32:2123).
13. கன்றுக்குட்டி அக்கினியிலிருந்து தானாக வந்தது என்று பொய்கூறுகிறார் (யாத் 31:24).
14. தேவனுடைய கோபத்திற்கு முன்பாக ஜனங்களை நிறுத்திவிடுகிறார் (யாத் 32: யாத் 1114,25).
618. பரிசுத்த வேதாகமத்தில் தேவனுடைய புஸ்தகத்தைப்பற்றி
1. நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் (யாத் 32:32).
2. எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். (யாத் 32:33).
3. ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக. நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக. (சங் 69:28; சங் 109:13).
4. அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படும் உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். (தானி 12:1).
5. உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப் படுங்கள். (லூக்கா 10:20).
6. அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. (பிலி 4:3).
7. ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும். ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என்பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். (வெளி 3:5).
8. ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். (வெளி 13:8; வெளி 17:8).
9. ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது. (வெளி 20:1112).
10. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (வெளி 20:15).
11. ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள். (வெளி 21:27).
12. ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கைத் தேவன் எடுத்துப்போடுவார். (வெளி 22:1819).
619. கர்த்தருடைய ஜீவப்புஸ்தகத்தில் ஆரோனின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது காரணங்கள்
1. ஆரோன் மறுபடியும் பிறந்திருக்கிறார் (உபா 32:18).
2. ஆரோன் பரிசுத்தமானவர் (யாத் 19:6; யாத் 22:31; லேவி 11:4445; லேவி 21:68).
3. ஆரோனின் பெயர் பரலோகத்தில் எழுதப்பட்டிருந்தது. (யாத் 32:3233).
4. ஆரோன் ஒரு தீர்க்கதரிசி. (யாத் 7:1).
5. ஆரோன் பல அற்புதங்களைச் செய்திருக்கிறார் (யாத் 7:117; யாத் 8:6,16; யாத் 11:10; யாத் 12:1; சங் 77:20).
6. பொன்கன்றுக்குட்டியைச் செய்யும் வரையிலும் தேவனுடைய கிருபை ஆரோனோடு கூட இருந்தது. (யாத் 24:14; யாத் 32:1).
7. சீனாய் மலையில் ஆரோன் தேவனைத் தரிசித்து அவரோடு புசித்துக் குடித்தவர் (யாத் 24:111).
620. பரிசுத்த வேதாகமத்தில், “”அகற்றுதல்” என்னும் வார்த்தை 7 சம்பவங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் விவரம்
1. சாபங்கள் (எண் 5:23)
2. வானத்தின் கீழுள்ள பெயர்கள் (உபா 9:14; உபா 29:20; 2இராஜா 14:27)
3. அமலேக்கைப் பற்றிய நினைவு (உபா 25:19)
4. மீறுதல்கள் (சங் 51:1; ஏசா 43:25; ஏசா 44:22)
5. அக்கிரமங்கள் (சங் 51:9)
6. பாவங்கள் (அப் 3:19)
7. மோசேயின் பிரமாணம் (கொலோ 2:1417)