பிரசங்க குறிப்புகள் 621-630


621. ஆசரிப்புக்கூடாரத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற 8 பெயர்கள்

1. ஆராதனை செய்யும் ஆசரிப்புக் கூடாரம் (யாத் 27:21; யாத் 28:43; யாத் 29:4,1011)

2. ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலம் (யாத் 39:32; யாத் 40:2,6,29)

3. வாசஸ்தலம் (யாத் 40:28; எண் 1:50)

4. கர்த்தருடைய வாசஸ்தலம் (லேவி 17:4)

5. சாட்சியின் வாசஸ்தலம் (எண் 1:5053)

6. சாட்சியின் கூடாரம் (எண் 17:7)

7. கர்த்தருடைய வாசஸ்தலம் (யோசு 22:19)

8. தேவனுடைய ஆலயமாகிய வாசஸ்தலம் (1நாளா 6:48)

622. பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள தேவனுடைய 14 சரீர உறுப்புக்கள்

1. பின்பகுதிகள் (யாத் 33:23)

2. இருதயம் (ஆதி 6:6; ஆதி 8:21)

3. கைகளும், விரல்களும் (சங் 8:36; எபி 1:10; வெளி 5:17)

4. வாய் (எண் 12:8)

5. உதடுகளும், நாவும் (ஏசா 30:27)

6. பாதங்கள் (எசே 1:27; யாத் 24:10)

7. கண்கள் (சங் 11:4; சங் 18:24; சங் 33:18)

8. காதுகள் (சங் 18:6)

9. தலைமுடி, தலை, முகம், கைகள் (தானி 7:914; தானி 10:519; வெளி 5:17; வெளி 22:46)

10. இடுப்பு (எசே 1:2628; எசே 8:14)

தேவனுக்குச் சரீரப் பிரசன்னம் உள்ளது. (ஆதி 3:8; ஆதி 18:122) அவர் ஓரிடதிலிருந்து மற்றொரு இடத்திற்கு மற்ற நபர்கள் போவதுபோலவே போகிறார். (ஆதி 3:8; ஆதி 11:5; ஆதி 18:15,22,33; ஆதி 19:24; ஆதி 32:2432; ஆதி 35:13; சக 14:5; தானி 7: 914; தீத்து 2:13).

623.தேவனிடமுள்ள 3 காரியங்கள்

1. சத்தம் (சங் 29; வெளி 10:34)

2. சுவாசம் (ஆதி 2:7)

3. முகரூபம் (சங் 11:7)

624.பரிசுத்த வேதாகமத்தில் தேவன் செய்யும் 7 காரியங்கள்

1. வஸ்திரம் தரிக்கிறார். (தானி 7:914; தானி 10:519);

2. போஜனம் பண்ணுகிறார் (ஆதி 18:18; யாத் 24:11)

3. ஓய்வு எடுக்கிறார் (ஆதி 2:14; எபி 4:4)

4. பரலோகத்தில் வாசம்பண்ணுகிறார். (யோவான் 14:13; எபி 11:1016; எபி 13:14; வெளி 21)

5. சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார் (ஏசா 6; தானி 7:914; வெளி 4:15; வெளி 22:36)

6. நடக்கிறார் (ஆதி 3:8; ஆதி 18:18,22,33)

7. ஏறிப்போகிறார் (சங் 18:10; சங் 68:17; சங் 104:3; எசே 1)

625.பரிசுத்த வேதாகமத்தில் உள்ள தேவனுடைய 10 உணர்வுகள்

1. துக்கம் (ஆதி 6:6)

2. கோபம் (1இராஜா 11:9)

3. மனம்வருந்துதல் (ஆதி 6:6)

4. வைராக்கியம் (யாத் 20:5)

5. வெறுப்பு (நீதி 6:16)

6. அன்பு (யோவான் 3:16)

7. பரிதாபம் (சங் 103:13)

8. ஐக்கியம் (1யோவான் 1:17)

9. சந்தோஷம் (சங் 147:10)

10. உணர்வுகள் (கலா 5:2223).

626.தேவனுடைய 13 ஆள்தத்துவ பண்புகள்

1. தனிப்பட்ட ஆவி (சங் 143:10; ஏசா 30:1)

2. சிந்தை (ரோமர் 11:34)

3. ஞானம் (ஆதி 1:26; ரோமர் 11:33)

4. சித்தம் (ரோமர் 8:27; ரோமர் 9:19)

5. வல்லமை (எபே 1:19; எபே 3:7,20; எபி 1:3)

6. சத்தியம் (சங் 91:4)

7. விசுவாசமும், நம்பிக்கையும் (ரோமர் 12:3; 1கொரி 13:13)

8. நீதி (சங் 45:4)

9. உண்மை (1கொரி 10:13)

10. அறிவும், ஞானமும் (ஏசா 11:2; 1தீமோ 1:17)

11. சிந்தனை (ஏசா 1:18)

12. பகுத்தறிவு (எபி 4:12)

13. மாறாத தன்மை (எபி 6:17)

தேவன் தம்மைச் சரீரப்பிரகாரமாகப் பல இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். (ஆதி 18; ஆதி 32:2430; யாத் 24:911; யோசு 5:1315; ஏசா 6; தானி 7:913; எசே 1; அப் 7:5659; வெளி 45) மனுஷன் தேவனுடைய ரூபமாகவும், தேவனுடைய சாயலாகவும் இருக்கிறான். தேவனைக் காணமுடியாது. தேவனுடைய ரூபமாகவும், சாயலாகவும் இருக்கும் மனுஷன் மூலமாக நாம் தேவனை விளங்கிக்கொள்ள வேண்டும் (ரோமர் 1:20).

559. தேவன் இஸ்ரவேல் புத்திரரை தமக்காக வேறுபிரி 12 காரணங்கள்

1. இது தேவனுடைய திட்டம். (உபா 32:8; அப் 17:26) மேசியா வரும்போது, தேவனுடைய இந்தத் திட்டம் நித்திய காலமாக அமுல் செய்யப்படும். (ஏசா 11:11-12; எசே 37; எசே 48; தானி 7:13-14; சக 14:16-21).

2. தேவன் ஆபிரகாமிடம் அவருடைய சந்ததி பெரிய ஜாதியாகும் என்று வாக்குப்பண்ணினார். இந்த உடன்படிக்கைகளையும், வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றுவதற்குத் தேவன் இஸ்ரவேலரை வேறுபிரித்தார். (ஆதி 12:1-3).

3. கானான் தேசம் ஆபிரகாமின் சந்ததியாருக்கு நித்திய சுதந்தரமாகக் கொடுக்கப்படும் என்று தேவன் வாக்குப்பண்ணினார். இந்த உடன்படிக்கைகளையும், வாக்குத்தத்தங்களையும் நிறைவேற்றுவதற்குத் தேவன் இஸ்ரவேலரை வேறுபிரித்தார். (ஆதி 15:18-21; ஆதி 17:8).

4. ஸ்திரீயின் வித்து, தன்னை நசுக்கிப் போடும் என்பது சாத்தானுக்குத் தெரியும். ஆகையினால் ஆதாமின் சந்ததியில் இராட்சதருடைய சந்ததியைச் சாத்தான் கலந்து, ஸ்திரீயின் வித்தை மாசுபடுத்தினான். மாசுபட்ட இந்தச் சந்ததியிலிருந்து தேவன் தம்முடைய ஜனத்தை வேறுபிரித்தார்.

5. கானானியருடைய ஜாதிகளை அவர்களுடைய துன்மார்க்கத்தின் நிமித்தமாகக் கர்த்தர் அழித்தார் என்பதை உலகத்துக்குக் காண்பிப்பதற்காகத் தேவன் இஸ்ரவேலரை வேறுபிரித்தார். (உபா 7:1-24; உபா 9:5).

6. ஆதாமின் சந்ததியை மாசுபடாமல் பாதுகாத்து, அந்த சந்ததியின் வழியில் மேசியா வரவேண்டும் என்பது தேவனுடைய சித்தமாகும். தம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காகத் தேவன் இஸ்ரவேலரை வேறுபிரித்தார். (ஆதி 3:15; ரோமர் 9:3-5).

7. மனுஷனுக்குத் தேவனுடைய வெளிப்பாட்டைத் தெரியப்படுத்துவதற்குத் தேவன் இஸ்ரவேலரை ஒரு கருவியாகப் பயன்படுத்தினார். இதற்காகத் தேவன் இஸ்ரவேலரை வேறுபிரித்தார். (ரோமர் 3:2; ரோமர் 9:3-5).

8. இஸ்ரவேல் தேசத்தை எல்லா தேசங்களுக்கும் நித்திய தலையாக ஏற்படுத்தினார். இதற்காகத் தேவன் இஸ்ரவேலரை வேறுபிரித்தார். (உபா 15:16; உபா 28:13).

9. தேசங்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிப்பதற்காகத் தேவன் இஸ்ரவேலை வேறுபடுத்தினார். (ஆதி 12:1-3; ஏசா 2:1-4; ஏசா 52:7; ஏசா 66:19-21; சக 8:23; சக 14:16-21).

10. மெய்யான ஆராதனையில் தேவனை ஆராதிக்கும் ஆசாரியக்கூட்டமாக ஆக்குவதற்குத் தேவன் இஸ்ரவேலரை வேறுபிரித்தார். (யாத் 19:6)

11. பரிசுத்த ஜாதியாகவும், தேவனுடைய விசேஷித்த ஜனமாகவும் தேவனுடைய கிருபை, ஆசீர்வாதங்கள் ஆகியவற்றைப் பெற்றிருக்கும் ஜனமாகவும், உலகத்தாருக்கு இஸ்ரவேலைக் காண்பிப்பதற்காக அதை வேறுபிரித்தார். (யாத் 19:6; உபா 7:6-8).

12. விக்கிரகாராதனையினாலும், பாவங்களினாலும் எல்லா தேசங்களுக்கும் வரும் தண்டனையை உலகத்தாருக்கு வெளிப்படுத்திக் காண்பிப்பதற்காகத் தேவன் இஸ்ரவேலை வேறுபிரித்தார். (யாத் 20:1-6; யாத் 32:21-25; யாத் 34:15-17; உபா 7:1-6; உபா 13:1-8; உபா 18:9-14).

560. தங்களை அறியாதிருந்த ஐந்து சம்பவங்கள்

1. மன்னாவைப் பற்றி இஸ்ரவேல் புத்திரர் அறியாதிருந்தார்கள் (யாத் 16:15).

2. தன் முகம் பிரகாசித்திருப்பதை மோசே அறியாதிருந்தார் (யாத் 34:29).

3. கர்த்தர் தன்னை விட்டு அகன்றுபோனதை சிம்சோன் அறியாதிருந்தான் (நியா 16:20).

4. என்ன சொல்ல வேண்டுமென்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள். (மாற்கு 9:6; மாற்கு 14:40; லூக்கா 2:49; யோவான் 5:13)

5. தான் விடுவிக்கப்பட்டதை பேதுரு அறியாதிருந்தார் (அப் 12:9).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *