பிரசங்க குறிப்புகள் 71-80

71. உபத்திரவப்படுகிறவர்களுக்கு கர்த்தர் சொல்வது

1) உங்கள் இருதயம் கலங்க கூடாது – யோ 14:1
2) தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள் – யோ 14:1
3) திடன் கொள்ளுங்கள் – யோ 16:33
4) உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் – யோ 16:20
5) துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதல் அடைவார்கள் – மத் 5:4

72 உபத்திரவம் ஏன் தேவபிள்ளைகளுக்கு தேவை

1) உபத்திரவபடுகிறவர்களை ஆறுதல் படுத்த நமக்கு உபத்திரவம் தேவை – 2 கொரி 1:4
2) பரிசுத்தத்தை உண்டாக்குகிறது -எபி 12:10
3) பொறுமையை உண்டாக்குகிறது – ரோ 5:3
4) வார்த்தையை (வசனத்தை) கற்று கொள்ள உபத்திரவம் தேவை – சங் 119:71
5) தாழ்மையை கற்று கொள்ள செய்கிறது – உபா 8:2
6) இருதயத்தில் உள்ளதை அறிய உபத்திரவம் தேவை – உபா 8:2
7) கட்டளையை கைக்கொள்ள உபத்திரவம் தேவை – உபா 8:2
8) அதிக கனி கொடுக்க – யோ 15:2

73. உம்முடைய காருணியம்

2 சாமுவேல் 22:36 உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர். உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.

1.உம்முடைய காருணியம் சூழ்ந்து கொள்ளும் சங்கீதம் 5:12
2.உம்முடைய காருணியம் பெரியவனாக்கும் 2 சாமுவேல் 22:36
3.உம்முடைய காருணியம் இழுத்துக்கொள்ளும் எரேமியா 31:3
4.உம்முடைய காருணியம் அழைக்கும் 2 பேதுரு 1:3

74. உயர்ந்த அடைக்கலத்திலே

சங்கீதம் 59:1 என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும், என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும்.

 
1.கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான் நீதிமொழிகள் 29:25
2.எளியவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கிறார் சங்கீதம் 107:41
3.தேவனின் நாமத்தை அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன் சங்கீதம் 91:14
 
உயர்ந்த அடைக்கலம் யாருக்கு?

1) நீதியாய் நடப்பவன் – ஏசா 33:15,16
2) லஞ்சம் வாங்காதவன் – ஏசா 33:15,16
3) செம்மையானவைகளை பேசுபவன் – ஏசா 33:15,16
4) பொல்லாப்பை காணாதபடி தன் கண்களை முடுகிறவன் (TV யில் சினிமா, சீரியல் பார்க்காதவன்) – ஏசா 33:15,16
5) கர்த்தரை நம்புகிறவன் – நீதி 29:25
6) ஒய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிப்பவன் (ஒய்வு நாளில் சொந்த பேச்சை கூட பேசக்கூடாது) – ஏசா 58:13,14
7) கர்த்தரிடம் வாஞ்சையாய் இருப்பவன் – சங் 91:14

75. உயிர் உள்ளவரை

1) கர்த்தரை துதிப்பேன் – சங்கீதம் 146:2
2) கர்த்தரை பாடுவேன் – சங்கீதம் 104:33
3) கர்த்தரை தொழுது கொள்வேன் – சங்கீதம் 116:2
4) கர்த்தர் செய்த நன்மைகளை நினைப்பேன் – உபாகமம் 16:3
5) வசனத்தை கைக்கொள்ளுவேன் – உபாகமம் 12:1
6) தேவனுக்கு பயப்படுவேன் – உபாகமம் 31:13
7) கர்த்தரை விட்டு பின் வாங்க மாட்டேன் – 2 நாளாகமம் 34:33
8) கர்த்தருக்கு ஊழியம் செய்வேன் – லூக்கா 1:71

76. உயிர்த்தெழந்த இயேசு சொன்ன ஜீவனுள்ள வார்த்தைகள்

1) பயப்படதிருங்கள் – மத் 28:10
2) உங்களுக்கு சமாதானம் – லூக் 24:36
3) நீங்கள் ஏன் கலங்குகிறிர்கள் – லூக் 24:38
4) ஏன் அழுகிறாய் – யோ 20:15
5) யாரை தேடுகிறாய் – யோ 20:15
6) சகல நாட்களிலும் உங்களோடு இருக்கிறேன் – மத் 28:20
7) வாழ்க – மத் 28:9
8) விசுவாசியாயிரு – யோ 20:27
9) என்னை பின் பற்றி வா – யோ 21:22

77. உயிர்த்தெழுந்த இயேசுவின் 7வார்த்தைகள்

1) அழவேண்டாம். (யோவான் 20:15)
2) உங்களுக்கு சமாதானம். (யோவான் 20:19).
3)மன்னியுங்கள். (யோவான் 20:23).
4) காணாமல் விசுவாசிக்கிறவன் பாக்கியவான். (யோவான் 20:29).
5) என்னை நேசிக்கிறயா?. (யோவான் 21:15,16,17).
6) புறப்பட்டு போங்கள்.(யோவான் 20:21).
7) காத்திருந்து அபிஷேகத்தை பெற்றுக்கொள்ளுங்கள் (அப்போஸ்தலர் 1:4,5,8).

78. உயிர்த்தெழுந்த இயேசுவின் கிரியைகள்

1) அழுகிற ஸ்திரியின் கண்ணிரை துடைத்தார் (நமது கண்ணிரையும் துடைப்பார்) – யோ 20:13-17
2) சிஷர்களின் பயத்தை நீக்கி சமாதானம் கொடுத்தார் (நமக்கும் சமாதானம் கொடுப்பார்) – யோ 20:19-21
3) தோமாவின் அவிசுவாசத்தை நீக்கினார் (நமது அவிசுவாசத்தையும் நீக்குவார்) – யோ 20:25-29
4) எம்மாவூருக்கு சென்ற சிஷர்களின் கண்களை திறந்தார் (நமது மனக்கண்களை திறப்பார் எபேசு 1:19) – லூக் 24:32
5) தம்முடையவர்களை ஆசிர்வதித்தார் (நம்மையும் நமது குடும்பத்தையும் ஆசிர்வதிப்பார்) – லூக் 24;50,51

79. ” உறுதியாக இருங்கள் “

அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து… 2 பேது 3 : 17

1. சத்தியத்தில் உறுதியாயிருங்கள்
2 பேது 1 : 12
2. உத்தமத்தில் உறுதியாயிருங்கள் யோபு 2 : 3
3. கற்பனைகளை கைக்கொள்வதில் உறுதியாயிருங்கள் 1 நாளாக 28 : 7
4. ஜெபத்தில் உறுதியாயிருங்கள் ரோமர் 12 : 12
5. ஒருமனதில் உறுதியாயிருங்கள் பிலி 1 : 27
6. புத்திமதியில் உறுதியாயிருங்கள் நீதி 4 : 13
7. உடன்படிக்கையில் உறுதியாயிருங்கள் நெகே 9 : 38

80. உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு. (ஆமோஸ் 4:12).

ஆயத்தமில்லாமல், திடீரென்று தேவனைச் சந்தித்தால், என்ன நேரிடும்?

1. யோவான் :-
நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; (வெளிப்படுத்தல் 1:17)

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மிகவும் அன்பாயிருந்த சீசனாகிய ஆகிய யோவான், இயேசுவை மனுஷீகமாகவே இயேசுவை அதிகமாக அறிந்தருந்தபடியால்,
திடீரென்று கிறிஸ்துவின் கண்களை அக்னி ஜுவாலையாக பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தத, அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரச்சல் போலவும் இருந்ததைக் கண்டு, மிகவும் பயந்து விட்டார்.

2. பவுல்:-

அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; அவன் தரையிலே விழுந்தான். (அப்போஸ்தலர் 9:3,4)

3. ஏசாயா:-

அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். (ஏசாயா 6:5) தேவ சந்திப்பு, ஏசாயாவில் பாவ உணர்வை ஊட்டி விட்டது.

4. மோசே:-

மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான். (யாத்திராகமம் 3:6). உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; (ஏசாயா 59:2).

5. யோபு:-

என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான். (யோபு 42:5,6).

வெளிப்படுத்தல் 1:7
இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், .. ஆமென்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *