81 உன்னைக் காக்கும்படி
சங்கீதம் 91:11
உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
1.உன்னைக் காக்கும்படி தீமையை நன்மையாக முடியப் பண்ணுவார ஆதியாகமம் 50:19,20
2.உன்னைக் காக்கும்படி தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார் சங்கீதம் 91:11.
3.உன்னைக் காக்கும்படிக்கு கூடவே இருக்கிறார எரேமியா 1:8,9.
4.உன்னைக் காக்கும்படிக்கு அவரே நமக்காய் வேண்டிக் கொள்ளுகிறார் யோவான் 17:15
82 . ஊழியம் செய்வர்களுக்கு கிடைக்கும் ஆசிர்வாதங்கள்
1) பிதாவின் கனம் கிடைக்கும் – யோ 12:26
2) தேவ கரம் வெளிப்படும் – ஏசா 66-14
3) ஆத்துமாவை மீட்டு கொள்கிறார் – சங் 34:22
4) மகிமையின் கீரிடம் கிடைக்கும் – 1 பேதுரு 5:2-4
5) 1000 வருஷ அரசாட்சியில் பட்டணங்களுக்கு அதிகாரியாக இருப்பார்கள் – லூக் 19:17
6) முத்திரை மோதிரமாக வைப்பார் – ஆகாய் 2:23
7) தம்முடைய இரகசியத்தை வெளிப்படுத்துவார் – ஆமோஸ் 3:7
8) வர்த்திக்க பண்ணுவார் – ஏரே 33:22
9) சந்தோஷப்படுவார்கள் – ஏசா 65:13
10) விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகும் – ஏசா 54:17
83 . ஊழியர்களிடம் இருக்க கூடாதது
1) பிரசங்கத்தில் மனுஷரை பிரியப்படுத்தக் கூடாது – கலா 1:10
2) மனுஷருக்கென்று ஊழியம் செய்ய கூடாது – எபேசி 6-8
3) குற்றம் சாட்டப்படக் கூடாது – 2 கொரி 6:3
4) மற்றவர்களுக்கு இடறலாக இருக்க கூடாது – 2 கொரி 6:3
5) தேவனுக்கும் உலக பொருள்களுக்கும் ஊழியம் செய்யக் கூடாது – லூக் 16:13
6) அலங்கார வஸ்திரம் தரிக்க கூடாது – லூக் 7:25
7) இழிவான ஆதாயத்தை நாடக் கூடாது – தீத்து 1:7
8) சண்டை பண்ண கூடாது – 2 தீமோ 2:24
84 . ஊழியர்களிடம் இருக்க வேண்டியது
1) இயேசுவை பின்பற்ற வேண்டும் – யோ 12:26
2) நல்ல கனி (நல்ல சுபாவங்கள் காணப்பட வேண்டும்) கொடுக்க வேண்டும் – மத் 7:20
3) எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனாக இருக்க வேண்டும் – 2 தீமோ 2:24
4) போதக சமர்த்தனாய் இருக்க வேண்டும் – 2 தீமோ 2:24
5) தீமையை சகிக்க வேண்டும் – 2 தீமோ 2:24
6) தேவனுடைய சித்தத்தை மாத்திரம் செய்ய வேண்டும் – லூக் 12:47
7) உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும் – லூக் 19:17
8) விவேகமுள்ளவனாக இருக்க வேண்டும் – மத் 24:45
9) தன் எஜமானிலும் பெரியவன் அல்ல (கர்த்தரிலும் பெரியவன் அல்ல) – யோ 15:20
10) தாழ்த்த வேண்டும் (அப்பிரயோஜனமான ஊழியர் என்று) – லூக் 17:10
11) தேறின வேதபாரனாக இருக்க வேண்டும் (மத் 13:52)
12) தாகம் வேண்டும் (ஆத்துமாக்களை குறித்து) – யோ 4:8
13) தீங்கு அனுபவிக்க வேண்டும் – 2 தீமோ 4:5
14) மனத் தெளிவுள்ளவனாக இருக்க வேண்டும் – 2 தீமோ 4:5
15) உத்தமனாக இருக்க வேண்டும் – 2 தீமோ 2:15
16) சத்திய வசனத்தை பகுத்து போதிக்க வேண்டும் – 2 தீமோ 2:15
17) ஜெப ஜிவியம் காணப்பட வேண்டும் – அப்போ 6:4
18) பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்றிருக்க வேண்டும் – அப்போ 2:18
19) சத்தியத்தை சத்தியமாக போதிக்க வேண்டும் – மத் 3:7
20) தேவ ஊழியர்களின் வாழ்க்கை விசுவாசிகள் பின்பற்ற கூடியதாக இருக்க வேண்டும் – 1 கொரியா 4:16
21) ஊழியர்களின் ஜிவியத்தின் மூலம் தேவ நாமம் மகிமை அடைய வேண்டும் – கலா 1:24)
85 . ஊழியர்களின் வாழ்க்கை சபைக்கு முன்மாதிரி !
அப்பொழுது உபவாசித்து ஜெபம் பண்ணி, அவர்கள் மேல் கைகளை வைத்து
அவர்களை அனுப்பினார்கள்.அப் 13 : 2 , 3
வேதபாடம் : அப் 13ஆம் அதிகாரம்.
1. சபைக்கு முன்மாதிரி, ஊழிய அழைப்பு அப் 13 : 1 — 3
2. சபைக்கு முன்மாதிரி, அவர்களது பாதம் ஊழியம் செய்ய ஆயுத்தமாயிருக்க வேண்டும். அப் 13 : 15 , 16
3. சபைக்கு முன்மாதிரி, ஊழியத்தில் எதிர்ப்பு நிச்சயம் வரும் , ஆனாலும்
ஊழியம் செய்யவேண்டும் அப் 13 ; 6 , 8 — 10
4. சபைக்கு முன்மாதிரி, உதவி ஊழியரை வைத்துக்கொள்ள வேண்டும் அப் 13 : 5 , 13
5. சபைக்கு முன்மாதிரி, இரட்சிப்பை சொல்லு ம்படி ஊழியர் ஊழிய ம் செய்யவேண்டும்
அப் 13 : 17 — 26
6. சபைக்கு முன்மாதிரி, உண்மையை பேசி ஊழியம் செய்ய வேண்டும் அப் 13 : 25
7. சபைக்கு முன்மாதிரி, சுவிசேஷம் அறிவிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அப் 13 : 27 — 30
8. சபைக்கு முன்மாதிரி, ஊழியர் முன்மாதிரி வாழ்க்கை வாழ வேண்டும். அப் 13 : 42 , 43.
9. சபைக்கு முன்மாதிரி ஊழியத்தில் எழுப்பு தலும்
சந்தோஷமும் உண்டாகும்படி இருக்கவேண்டும் அப் 13 : 44 : 52.
86 . எங்கே? தேவன் கேட்கிறார்
மத்தேயு 25 : 19 வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்கு கேட்டான்.
1. நீ எங்கே? ஆதியாகமம் 3 :9
2. உன் சகோதரன் எங்கே? ஆதியாகமம் 4:9
3. உன் மனைவி எங்கே? ஆதியாகமம் 18:9
4. மற்ற ஒன்பதுபேர் எங்கே? லூக்கா 17:17
5 என் கனம் எங்கே? மல்கியா 1:6
6. உங்கள் விசுவாசம் எங்கே? லூக்கா 8:25
7. உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே? எரேமியா 13:20
87 . எட்டாம் மாதத்தில் புதிய காரியம் செய்யும் தேவன்
1. பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்- ஆதியாகமம் 24:40
2.திரும்பவும் போகப்பண்ணுவார் – ஆதியாகமம் 48:21
3. வித்தியாசம் பண்ணுவார்- யாத்திராகமம் 9:4
4. யுத்தம்பண்ணுவார் – யாத்திராகமம் 14:14
5. விருத்தியடையப்பண்ணுவார் – உபாகமம் 13:18
6.நன்மைசெய்து பெருகப்பண்ணுவார் – உபாகமம் 30:5
7. அபிஷேகம்பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் 1 சாமுவேல் 2:10
8. வீட்டை உண்டுபண்ணுவார் – II சாமுவேல் 7:11
• எட்டு என்ற எண் அர்த்தம் என்ன? புதிய தொடக்கம்/புதிய ஆரம்பம்
• எட்டாம் மாதத்தில் புதிய காரியம் செய்யும் தேவன்
• எட்டாவது பிள்ளை தாவீது – ராஜாவாக தெரிந்தெடுக்கப்படான்
இஸ்ரவேலின் எட்டு பேரை கொண்டு பூமியை நிரப்பினார்
88 . எதில் உறுதியாய் இருக்க வேண்டும்
ரோமர் 12:12 நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள், உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள், ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள்.
1.மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உறுதியாய் இருக்க வேண்டும். யூதா- 1:20
2.நாம் பண்ணின அறிக்கையில் உறுதியாய் இருக்க வேண்டும். எபிரேயர் 4:14
3.ஜெபத்திலே உறுதியாய்த்தரித்திருங்கள் ரோமர் 12:12
எப்படி உறுதியாய் இருக்க முடியும்
1.கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து அதில் உறுதியாய் இருக்க வேண்டும் 1 கொரிந்தியர் 15:58
2. நாம் அறிந்த சத்தியத்தில் உறுதியாய் இருக்க வேண்டும் 2 பேதுரு 3:17,18
89 . எது நல்லது
1.தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம் சங்கீதம் 73:28*
2.உபத்திரவப்படுவது நல்லது சங்கீதம் 119:71*
3. அவர் செய்த நன்மைகளை எண்ணி துதிப்பது நல்லது சங்கீதம் 147:1*
4.இளம்பிராயத்தில் நுகத்தைச் (பாடுகளை) சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது புலம்பல் 3:27*
5.நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது புலம்பல் 3:26*
6.நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லது கலாத்தியர் 4:18*
90 . எது நல்லது அல்ல
1. மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல ஆதியாகமம் 2:18*
2. குற்றம் கண்டுபிடிக்கிறதும் , தண்டிக்கிறதும் நல்லதல்ல நீதிமொழிகள் 17:26*
3. ஆத்துமாவை குறித்து அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல நீதிமொழிகள் 19:2
4.துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம் பண்ணுவது நல்லதல்ல நீதிமொழிகள் 18:5*
5. ஞானமுள்ளவர்களின் புத்திமதிகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல நீதிமொழிகள் 24:23*
6.மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல 1 கொரிந்தியர் 5:6*