01. நிச்சயம்
இனிமேல் சம்பவிக்கப் போகிறதை மகா தேவன் இராஜாவுக்கு தெரிவித்திருக்கிறார். சொப்பனமானது நிச்சயம். அதின் அர்த்தம் சத்தியம் என்றான். தானி 2 : 45
1. உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்து பிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள். எண் 32 : 23
2. எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம் சங் 39 : 5
3. நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக் கவே ஆசீர்வதித்து உன்னைப் பெருகவே பெருகபண்ணுவேன் என்றார் ( தேவன் ) எபி 6 : 14
4. தேவன் நமக்கு பரிசுத்த ஆவியைக் கொடுப்பது நிச்சயம் லூக்கா 11 : 13
5. நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே ரோமர் 5 : 9
6. நாம் மரிப்பது நிச்சயம் 2 சாமு 14 : 14
7. விசுவாசத்தின் பூரன நிச்சயத்தோடும் சேரக்கடவோம் எபி 10 : 22
02. பிலேயாம்
எண் 23 : 7 – 24 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி இங்கே உம்முடைய சர்வாங்க தகனபலி யண்டையில் நில்லும் , நான் அங்கே போய்க் கர்த்தரை சந்தித்து வருகிறேன் என்றான்.
கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி: நீ பாலாகினிடத் திற்குத் திரும்பிப்போய் இவ்விதமாய்ச் சொல்ல கடவாய் என்றார். எண் 23 : 15 , 16
1. பிலேயாம் பொருளாசை பிடித்த மனிதன் 2 பேது 2 : 15 — 22 யூதா 1 : 11.
2. பிலேயாம் மார்க்க சம்பந்தமான போதகன் வெளி 2 : 14
3. பிலேயாம் பாவ அறிக்கை செய்கிறான். ” நான் பாவம் செய்தேன் ” ஆனால் மனந்திரும்பவில்லை எண் 22 : 34
4. பிலேயாம் ஜெபம் செய்கிறான். ” நான் மரிப்பேனாக ” ஆனால் பொருளற்ற ஜெபம். எண் 23 : 10
5. கர்த்தருடைய ஆசாரியத்துவத்தை அசட்டைபண்ணினான். எண் 23 : 3 2 பேது 2 : 1 , யூதா 12 , 13
6. பிலேயாமின் தேர்ந்தெடுப்பது “இப்பொழுது அல்ல ” ” சமீபத்தில் அல்ல ” எண் 24 : 17
7. பிலேயாமின் முடிவு எண் 31 : 8
03. போராட்டம்
உங்களுக்காகவும் லாவோதிக்கேயா விலிருக்கிறகளுக்காகவும் சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக் கிறமற்றெல்லாருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறிய விரும்பகிறேன்.
கொலோ 2 : 1.
1. மாம்சத்தோடு போராட்டம் எபே 6:12
2. நிர்மூலமாக்குகிறதற்கு போராட்டம் 2 கொரி 10 : 4
3. 3. பொல்லாத ஆவிகளோடு போராட்டம் எபே 6 : 12
4. எதிரிகளோடு போராட்டம் 2 கொரி 10 : 5
5. விசுவாசத்திற்காய்ப் போராட்டம் யூதா 1 : 3.
6. 6. சுவிசேஷத்தை எதிர்கிறவர்களோடு போராட்டம் பிலி 1 : 27.
7. போராட வேண்டிய நல்லதொரு போராட்டம். 2 தீமோ 4 : 7 , 8
04. மாயக்காரன்
மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான். நீதிமானோ அறிவினால் தப்புகிறான். நீதி 11 : 9
மாயக்கரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக் கொள்ளாதபடிக்கும் யோபு 34 : 29.
• 1. மாயக்காரனுடைய நம்பிக்கை அழிந்து போகும். யோபு 8 : 13
• 2. மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான் நீதி 11 : 9
• 3. மாயக்காரனை நடுக்கம் பிடிக்கின்ற து. ஏசாயா 33 : 14
• 4. மாயக்காரனுடைய சந்தோஷம் ஒரு நிமிஷம் மாத்திரம் யோபு 20 : 4
• 5. மாயக்காரன் அவர் சந்நிதியில் சேரான் யோபு 13 : 16
• 6. மாயக்காரனின் கூட்டம் வெறுமையாய் போகும் யோபு 15 : 34
• 7. மாயக்காரனுக்கு விரோதமாய் குற்றமில்லாதவன் எழும்புவான் யோபு 17 : 8
• 8. மாயக்காரன் ஆலயங்களிலும்n வீதிகளிலும் தாரை ஊதுவிப்பது மத் 6 : 2
• 9. மாயக்காரன் முகவாடலாய் இருக்கின்ற தருணம் உபவாசிக்கும் போது மத் 6 : 16
• 10 மாயக்காரனைக் குறித்து ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய் தீர்க்கதரிசனம் சொல்லியிருப்பான் மாற்கு 7 : 7
05. வளருங்கள்
நம்முடைய கர்த்தரும்இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் , அவரை அறிகிற அறிவிலும்
வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக, ஆமென் ! 2 பேதுரு 3 : 18
கிறிஸ்துவில் வளருங்கள் 2 தீமோ : 3 : 18
அன்பில் வளருங்கள் 1 கொரி : 13 : 1 — 13
கிருபையில் வளருங்கள் 2 தீமோ : 2 : 1 2 பேது : 3 : 18
வார்த்தையில் வளருங்கள் 1 பேது : 1 — 3
விசுவாசத்தில் வளருங்கள் அப் : 14 : 22
ஜெபத்தில் வளருங்கள் அப் : 6 : 4
பரிசுத்தத்தில் வளருங்கள் யோசு : 3 : 5
06. ஜீவ ஊற்று
ஜீவ ஊற்று உம்மிடத்தில் இருக்கிறது. உம்முடைய வெளிச்சத்
திலே வெளிச்சம் காண்கிறோம்.சங் 36 : 9.
1. கர்த்தருக்கு பயப்படுபவர்களுக்கு ஜீவ ஊற்று நீதி 14 : 27
2. எல்லா காவலோடும் காத்துக் கொள்பவர் களுக்கு
ஜீவ ஊற்று நீதி 4 : 23
3. கர்த்தரிடத்தில் கேட்பவர்களுக்கு ஜீவ ஊற்று யோவா 4 : 10
4. விசுவாசிப்பவர் களுக்கு ஜீவ ஊற்று யோவா 7 : 38
5. சபைக்குச் செல்பவர் களுக்கு ஜீவ ஊற்று யோவேல் 3 : 18
6. புத்தியை பெற்றுக் கொள்பவர்களுக்கு ஜீவ ஊற்று நீதி 16 : 22
7. நீதிமானாக இருப்பவர்களுக்கு ஜீவ ஊற்று நீதி 10 : 11.
07. கர்த்தர் காப்பார் – எப்படி
தாயின் கர்ப்பத்தில் – சங் 139:13
கால் சிக்காதபடி – நீதி 3:26
கூடாரத்தில் ஒளித்து – சங் 31:20
எல்லா தீங்குக்கும் விலக்கி – சங் 121:7
வழுவாதபடி – யூதா:24
ஒருவரும் சேதப்படுத்தாதபடி – ஏசா 27:3
இக்கட்டுக்கு விலக்கி – சங் 32:7
எந்நாளும் காப்பார் – உபா 32:12
08. சோதனையின் நடுவிலே
யோபுவின் புத்தகம், சோதனையின் தீச்சூளையின் வழியாக கடந்துபோகும் போது நம்மை பெலப்படுத்தும் அற்புதமான புத்தகம். சோதனையின் நடுவிலே யோபு கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம், அவைகள் நமக்கும் ஆவிக்குரிய பாடங்களே!
சோதனைக்கு முன்பு யோபு:
- I. கர்த்தரால் வேலியடைக்கப்பட்டிருந்தான். யோபு 1:10
II. சோதனையின் நடுவிலே யோபு:
2. கர்த்தரை துதித்துக் கொண்டிருந்தான். யோபு 1:21
3. பொறுமையோடிருந்தான். யோபு 2:10, யாக் 5:11
4. நம்பிக்கையோடிருந்தான். யோபு 13:15
5. தரிசனத்தோடிருந்தான். யோபு 19:25-27
6. எதிர்பார்ப்போடிருந்தான். யோபு 23:8-10
III. சோதனையின் முடிவிலே யோபு:
- இரட்டத்தனையாய் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தான். யோபு 42:12
09. தேவ சமூகம் என்பது
“ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப் பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்” (சங் 84:10) என்கிறார் கோராகின் புத்திரரிலுள்ள இராகத்தலைவன். இதன் காரணம் என்ன என்பதை 84ம் சங்கீதத்தில் பாடியுள்ளார்.
• இன்பமான இடம். சங் 84:1
• அடைக்கலமான இடம். சங் 84:3
• பெலன்கொள்ளும் இடம். சங் 84:5
• மாற்றம் தரும் இடம். சங் 84:6
• ஜெபிக்கும் இடம். சங் 84:8
• ஆசீர்வாதம் பெறும் இடம். சங் 84:11
• நித்தியத்திற்கு ஆயத்தப்படுத்தும் இடம். சங் 84:7.
10 . 7 விதமான மான்கள்
• நீதிமான் – மத்தேயு 10 : 41
• கல்விமான் – மத்தேயு 11 : 25
• புத்திமான் – I கொரிந்தியர் 10 : 15
• மகாபுத்திமான் – நீதிமொழிகள் 14 : 29
• எஜமான் – லூக்கா 19 : 17
• சீமான் – ஆதியாகமம் 24 : 35
• அநீதிமான் – அப்போஸ்தலர் 24 : 15