சாலொமோனின் உன்னதப்பாட்டு
Pastor Gabriel Thomasrai
உன்னதப்பாட்டு ஆக்கியோன்:
சாலொமோன் (1:1) சாலொமோன் 1005 பாடல்களை எழுதியவன் (1இரா 4:32) ஆனால் நமக்கு கிடைத்திருப்பதோ அவனது ஒரு பாடல் மாத்திரமே – உன்னதப்பாட்டு
இதன் தலைப்பு சொல்வதுபோல இது உன்னதமானது
திறவுகோல் வார்த்தைகள்:
- “பிரியமே” அவனுக்கான பெயர்
- . “நேசம்” அவளுக்கான பெயர்
திறவுகோல் வசனங்கள்:
- நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார்.(6:3)
- திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது. வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும். (8:7)
சாலோமோனின் உன்னதப்பாட்டு ஒரு உவமை கவிதை. யூதர்கள் இதை வேதாகமத்தின் மகா பரிசுத்த ஸ்தானம் என்று அழைத்தார்கள்
யூதர்கள் தங்கள் பிள்ளைகள் முப்பது வயது வரும்வரையில் இந்த புத்தகத்தை வாசிக்க அனுமதிப்பதில்லை.
இந்தப் புத்தகத்தில் உள்ள நான்கு வித்தியாசமான முக்கிய அர்த்தங்கள்
- இது திருமண உறவின் நேசத்தின் மேன்மையை எடுத்துச்சொல்லுகிறது.
திருமண உறவின் புனிதத்தையும், திருமணம் தேவனால் நியமிக்கப்பட்டதென்பதையும் எடுத்துச் சொல்லுகிறது. திருப்தியான புருஷன், அர்ப்பணித்த மனைவி என்கிற நிலைக்கு இருவரது இருதயங்களையும் இட்டுச்செல்வதாக யூதர்கள் கற்பித்தார்கள். .
- இது யெகோவா தேவனுக்கும் இஸ்ரவேலுக்கும் உள்ள நேசத்தை காண்பிக்கிறது. தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலை யெகோவா தேவனின் மணவாட்டியாக சித்தரித்தார்கள்.
- இது கிறிஸ்துவையும் சபையையும் காட்சிப்படுத்துகிறது.
சபையானது கிறிஸ்துவின் மணவாட்டி என்பது வேதத்தில் காண்பிக்கப்பட்டுள்ள நன்கு பரிச்சயமான உருவகம் (2கொரி 11:2, எபே 5:27. வெளி அதி 21)
- கிறிஸ்துவுக்கும் ஒரு தனிப்பட்ட விசுவாசிக்குமான ஐக்கியத்தை சித்தரிக்கிறது.
ஆத்துமாவிற்கு கிறிஸ்துவோடுள்ள ஐக்கியம் காண்பிக்கப்படுகிறது
இந்தப் புத்தகத்தின் சுருக்கம்
அதிகாரம் 1
- பாடல் 1:14 – கிறிஸ்துவின் மீதான சபையின் நேசம்
- பாடல் 1:5-6 – அவளது குறைவைக் குறித்து அறிக்கையிடல்
- பாடல் 1:7 – அவனது மந்தைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டல்
- பாடல் 1:8 – கிறிஸ்து மேய்ப்பனின்
கூடாரத்திற்கு வழிகாட்டுதல்
- பாடல் 1:9-10 – தனது நேசத்தை காண்பித்தல்
- பாடல் 1:11 – அவளுக்கு கிருபையுள்ள வாக்குத்தத்தம் அளித்தல்
- பாடல் 1:12-17 – கிறிஸ்துவும், சபையும் ஒருவரையொருவர் பாராட்டுதல்
அதிகாரம் 2
- பாடல் 2:1-7 – கிறிஸ்துவும் சபையும் ஒருவருக்கொருவர் பாராட்டும் அன்பு
- பாடல் 2:89 – நம்பிக்கை
- பாடல் 2:10-13 -சபைக்கான அழைப்பு
- பாடல் 2:14-15 – கிறிஸ்து கரிசனை
கொள்ளும் சபை
- பாடல் 2:16-17 – சபையின் பணி, விசுவாசம், நம்பிக்கை
அதிகாரம் 3
- பாடல் 3:15 – சோதனையில் வெற்றிக்காக போராடும் சபை
- பாடல் 3:6-11 – கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் சபை
அதிகாரம் 4
- பாடல் 4:17- கிறிஸ்து சபையின் மீது நேசத்தை விபரித்தல்
- பாடல் 4:8-15 அவரது அன்பை காண்பித்தல்
- பாடல் 4:16 – சபை அவரது
பிரசன்னத்தில் இருக்க தகுதியாக விண்ணப்பித்தல்
அதிகாரம் 5
- பாடல் 5:1 – கிறிஸ்து தனது அழைப்பால் சபையை எழுப்புதல்
- பாடல் 5:2-8 – சபை கிறிஸ்துவின் அன்பை ருசித்தல், நேசத்தால் சோகமாதல்
- பாடல் 5:9.16 – கிறிஸ்துவின் சுபாவம் பற்றிய விபரிப்பு
அதிகாரம் 6
- பாடல் 6:1-3 – சபை கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தை பறைசாற்றல்
- பாடல் 6:4-9 – கிறிஸ்து சபையின் சுபாவங்களை விபரித்தல
- பாடல் 6:10-13 – சபையின் மீதான கிறிஸ்துவின் அன்பு
அதிகாரம் 7
- பாடல் 7:19 – சபையின் சுபாவங்கள் குறித்த மேலதிக விபரிப்பு
- பாடல் 7:10-13 – சபை தனது விசுவாசத்தையும், விருப்பத்தையும் அறிக்கையிடல்
அதிகாரம் 8
- பாடல் 8:1-5 – கிறிஸ்துவின் மீதான சபையின் அன்பு
- பாடல் 8:6-7 – நேசத்தின் வீரியம்
- பாடல் 8:8-13 – புறஜாதிகளுக்கான அழைப்பு
- பாடல் &:14 – நிறிஸ்துவின் வருகைக்காக சபை ஜெபித்தல்