எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம்
Pastor. Gabriel Thomasraj
புத்தகத்தை ஆக்கியோன்
எசேக்கியேல் என்ற பெயரின் அர்த்தம் “தேவன் பலப்படுத்துகிறவர்”. எசேக்கியேல் ஆசாரியனாக இருந்தபோதும் (1:3) ஆசரியப்பணியை அவன் செய்ததில்லை. யோயாக்கீனின் ஆடசிக்காலத்தில் சிறையாக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டபோது இனவயதுள்ளவனாக இருந்தான் (2இரா 24:10-16). எரேமியா தேசத்தில் மீந்திருந்த ஜனங்களிடத்தில் பேசியபோது முதிர்வயதாய் இருந்தான். தானியேல் பாபிலோனிய அரசனின் கொலுமண்டபத்தில் பேசினான்.
எசேக்கியேலோ பாபிலோனுக்கு தென்திசையில் சுமார் நூறு மைல்களுக்கும் குறைவான தூரத்திலுள்ள, பாபிலோனின் ஆறுகளிலொன்றான கேபார் நதியண்டையில் இருந்த தெலாப்பிலே Tel-abib சிறைப்பட்டிருந்த ஜனத்திற்கு பேசினான். எசேக்கியேல் சிறைப்பட்டுப்போனபோது சுமார் 26 வயதுள்ளவனாயிருந்தான்.
இந்தப் புத்தகத்தில் இறுதியாய் கொடுக்கப்பட்டள்ள தேதிகளின் தகவல் களின்படி (29:17) எசேக்கியேல் ஊழியஞ்செய்த காலம் 23 ஆண்டுகள். அவனது வயது அப்போது சுமார் 50 ஆண்டுகளாயிருக்கலாம். எரேமியாவின் ஊழியத்தின் இறுதி நாட்ளிலும், தானியேலின் ஊழியத்தின் ஆரம்ப காலத்திலும் எசேக்கியேல் ஊழியம் செய்தான்.
அதிகாரங்கள் 48
வசனங்கள் 1273
புத்தகத்தின் பிரிவுகள்
எல்லா தீர்க்கதரிசன புத்தகங்களிலும், எசேக்கியேலின் புத்தகமே நேர்த்தியான ஒழுங்கில் அமையபெற்ற புத்தகம் எனலாம். இது வெவ்வேறு காரியங்களை சொல்லும் மூன்று வித்தியாசமான தலைப்புக்களில் பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
1வது பகுதி: அதி 1-24
எருசலேமின் வீழ்ச்சி குறித்து
2வது பகுதி: அதி 25-39
பிற தேசங்களுக்கான செய்திகள் சொல்லப்பட்டு இறுதியில் இஸ்ரவேலின் எதிர்காலம் மற்ற தேசங்களின் எதிர்காலத்திலும் மாறுபட்டதாக இருக்கும் என்பதை தெரிவிக்கிறது.
3வது பகுதி: அதி 40-48
தேவனுடைய ஆலயம் மீண்டும் கட்டப்படுவதற்கான திட்டத்தையும், இஸ்ரவேல் மீண்டும் ஒரு தேசமாக உருவாதற்கான ஒழுங்கையும், தேவனுடைய மகிமை அதனுடைய ஸ்தானத்திற்கு மீண்டும் திரும்பும் என்பதையும் தெரிவிக்கிறது.
எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தின் இறுதிப்பகுதியானது கடைசிக்காலத்தில் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையின் பின்பு ஜனங்கள் ஆராதிப்பதையும், ஆயிரவருட அரசாட்சியில் சிங்காசனத்தில் வீற்றிருந்து இஸ்ரவேலையும், சகல தேசங்களையும் ஆளுகை செய்வதையும் எதிர்பார்த்திருக்கும் விதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
எசேக்கியேல் சம்பவங்கள் நிகழ்த்த காலம்
எசேக்கியேல் கிமு 597ல் நிகழ்ந்த 2வது சிறைப்பட்டுப்போதலில் பாபிலோனுக்கு கொண்டுபோகப்பட்ட வாலிபர்களில் ஒருவனாக இருந்தான். நேபுகாத்நேச்சார் 3 தவணைகளில் படையெடுத்து எருசலேமை அழித்தான்.
1வது படையெடுப்பு: கிமு 605ல்
யோயாக்கீமை முறியடித்து முக்கிய நபர்களை கைதிகளாக்கி கொண்டு போனான். இதிலே சிறைப்பட்டவர்கள் தானியேலும் அவனது தோழர்களும்
2வது படையெடுப்பு: கிமு 597ல்
யோயாக்கீமும், யோயாக்கீனும் செய்த கலகங்கள் மேலும் அதிக தண்டனைகளை கொண்டுவந்தன.
எருசலேமை இரண்டாம் முறை பணியவைத்தான் யோயாக்கீன், எசேக்கியேல் உள்ளிட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் சிறையாக்கப்பட்டு கொண்டுபோகப்பட்டார்கள்.
3வது படையெடுப்பு: கிமு 586ல்
1வருடம் 17 மாதங்கள் நீண்ட முற்றிகைக்கு பின்னர் நேபுக்காத்நேச்சார் எருசலேம் நகரத்தை அழித்து யூதாவின் எல்லா பட்டணங்களிலும் சர்வநாசத்தை விளைவித்தான்.
கால அட்டவணை
வேத பகுதி : 1:1
ஜீலியன் நாட்காட்டி : 31 ஜீலை 593
நிகழ்வு : அழைப்பின் உரை
வேத பகுதி : 1:2
ஜீலியன் நாட்காட்டி : 31 ஜீலை 593
நிகழ்வு : அழைப்பின் உரை
வேத பகுதி : 8:1
ஜீலியன் நாட்காட்டி : 17 செப்டெம்பர் 592
நிகழ்வு : எருசலேம் நிகழ்வுகள் குறித்த தரிசனம்
வேத பகுதி : 20:1
ஜீலியன் நாட்காட்டி : 14 ஆகஸ்டு 591
நிகழ்வு : விசாரிக்கும்படி வந்த மூப்பர்கள்
வேத பகுதி : 24:1
ஜீலியன் நாட்காட்டி : 15 ஜனவரி 588
நிகழ்வு : எருசலேம் முற்றிகையின் ஆரம்பம்
வேத பகுதி : 26:1
ஜீலியன் நாட்காட்டி ; ஏப்ரல் 587 க்கும் ஏப்ரல் 586 இடையில்
நிகழ்வு : தீருவிற்கெதிரான உரை
வேத பகுதி : 29:1
ஜீலியன் நாட்காட்டி : 7 ஜனவரி 587
நிகழ்வு : எகிப்திற்கு எதிரான உரை
வேத பகுதி : 29:17
ஜீலியன் நாட்காட்டி : 26 ஏப்ரல் 571
நிகழ்வு : தீருவிற்கு பதிலாக எகிப்து
வேத பகுதி : 30:20
ஜீலியன் நாட்காட்டி : 29 ஏப்ரல் 587
நிகழ்வு : பார்வோனுக்கு எதிரான உரை
வேத பகுதி : 31:1
ஜீலியன் நாட்காட்டி : 21 ஜீன் 587
நிகழ்வு : பார்வோனுக்கு எதிரான உரை
வேத பகுதி : 32:1
ஜீலியன் நாட்காட்டி : 3 மார்ச் 585
நிகழ்வு : பார்வோனுக்கு எதிரான உரை
வேத பகுதி : 32:17
ஜீலியன் நாட்காட்டி : ஏப்ரல் 586 க்கும் ஏப்ரல் 585இடையில்
நிகழ்வு : எருசலேமிலிருந்து
வேத பகுதி : 33:21
ஜீலியன் நாட்காட்டி : 8ஜனவரி 585
நிகழ்வு. எருசலேமிலிருந்து தப்பினவர்களின் வருகை
வேத பகுதி : 40:1
ஜீலியன் நாட்காட்டி : 28 ஏப்ரல் 573
நிகழ்வு : புதுப்பிக்கப்பட்ட எருசலேம் கறித்த தரிசனம்
எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தின் நோக்கம்
எசேக்கியேலின் புத்தகம் தனித்துவமான முறையில் இஸ்ரவேலை பரிசுத்த தேசத்தில், பரிசுத்த நகரத்தில், பரிசுத்த ஆலயத்தின் பரிசுத்த ஜனமாக சித்தரிக்கிறது.
a தேவனைத் தொழுதுகொள்வதில் இஸ்ரவேல் தன்னை தீட்டாக்கிக்கொண்டதால், தன்னை பரிசுத்த குலைச்சலாக்கி ஆலயத்தையும்,நகரத்தையும், தேசத்தையும் தீட்டுப்படுத்தியது.
இவ்வாறு தீட்டுப்படுத்தியதினால் தேவன் அவர்களிடம் இருந்த விலகி தேசத்தின் அழிவாகிய தண்டனையை கொடுத்தார்.
ஆனாலும் தேவன் உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவராயிருந்தார். தமது ஜனத்தை இரட்சிக்க வேண்டும் என்கிற அவரது விருப்பம் மகா பெரிது.
1.தேவன் மீண்டும் ஒரு முறை தமது ஜனத்தை மறுசீரமைக்கிறார்
- தேவன் மனதுருக்கத்தோடு அவர்களை மேய்க்கிறார்
- தேவன் அவர்களின் தீட்டுக்களை சுத்தீகரிக்கிறார்.
4.தேவன் மீண்டும் தாவீதின் ஆளுகையின் கீழான தனது இராஜ்யத்தின் மக்களாக மாற்றுவார் (34:23-24)
5.தேவன் எதிராக எழும்பின இராஜ்யங்களை நசுக்குவார்.
- தேவன் தமது மகிமையை தேசங்களின் மேல் விளங்கப்பண்ணுவார்.
7.தேவன் பரிசுத்த நகரத்தில் தமது பிரசன்னத்தின் மகிமையை மீண்டும் நிலைநாட்டுவார்.
பல வழிகளில் பேசும் தேவன்
தம்மையும், தமது செய்தியை ஜனங்கள் கேளாதபோது தேவன் அவர்களுக்கு பல வேறுபட்ட வடிவங்களில் அவரது செய்தியை அனுப்பினார்.
திராட்சைச்செடி குறித்த தரிசனம் அதி 15
திராட்சைச்செடி இஸ்ரவேலுக்கான ஒரு அடையாளச்சொல் (ஏசா 5:7)
வச2-5 திராட்சைச்செடியின் கிளைகள் மரக்கட்டைகளாக பயன்படுத்தவோ, நெருப்புக்காக எரிக்கவோ முடியாதவை.
வச 6-8 அதுபோலவே இஸ்ரவேலும் தனது பாவத்தினால் ஒன்றுக்கும் பிரயோசனப்படாமல்போய் முடிவில் அழியப்போகிறது.
இரண்டு கழகுகளை பற்றிய விடுகதை அதி 17
வச 12-24 விடுகதைக்கான விடை: பாபிலோனின் ராஜா மீண்டும் எருசலேமை முற்றிகை போடுவான். அவன் நகரத்தையும், ஆலயத்தை யும் அழித்துப்போட்டு மிக சிலரை மாத்திரம் தேசத்தில் விட்டுவிட்டு சிதேக்கியாவையும் ஜனங்களையும் சிறையாக்கி கொண்டுபோவான்.
இரண்டு சகோதரிகள் பற்றிய உவமை அதி 23
அகோலாள் (சமாரியா) அகோலிபாள் (எருசலேம்)
. வடக்கு இராஜ்யமும், தெற்கு இராஜ்யமும் வேசித்தனம் பண்ணினார்கள். (விக்கிரக வழிபாடு ஆவிக்குரிய வேசித்தனம்)
பொங்கும் பானை பற்றிய உவமை அதி 24
எருசலேம் எரிக்கப்பட்டுப்போகும். எசேக்கியேலின் மனைவியின் மரணத்திற்கு அவன் துக்கிக்க தடைவிதிக்கப்பட்டது. சிறையிருப்பின் ஜனங்களுக்கு எசேக்கியேல் ஒரு அடையாளமாக காட்டப்பட்டு எருசலேமின் அழிவில் அவர்கள் துக்கிப்பதில் பலனில்லை என்று உணர்த்தப்பட்டது.
எருசலேமின் வீழ்ச்சி குறித்து முன்கூட்டியே அடையாளங்களால் தெரிவிக்கப்படல்
4:4-5 இதிலே ஜனங்களுக்கு அடையாளமாக தீர்க்கதரிசியானவன் 390 நாட்கள் இடதுபக்கமாய் ஒருக்களித்துப் படுத்து தீட்டின் அப்பத்தை புசிக்கவேண்டும். 6 ம் வசனத்தில் 40 நாட்கள் வலதுபக்கமாய் ஒருக்களித்தப் படுக்கவேண்டும் (ஒரு நாள் ஒரு வருடத்திற்கான அடையாளம் ) இது வரவிருக்கும் முற்றிக்ைகாக அடையாளம்.
5:1-5 சிரைக்கப்பட்ட மயிரை மூன்று பங்காக்குதல். எருசலேமின் வரவிருக்கும் மூன்று தண்டனைகளுக்கான அடையாளம்.
12:7-16 வீட்டுக்குள் தன்னை வைத்துப் பூட்டிக்கொண்டு சுவற்றில் துவாரமிட்டு அதன் வழியாக பொருட்களை வெளியே கொண்டுவருதல்.
வச 17-28ல் எருசலேம் முற்றிலுமாக சிறைப்பட்டுப்போகும் என்று அறிவித்தல்
ஆறு தரிசனங்கள்
எசேக்கியேல் தீர்க்கதரிசன புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல எசேக்கியேல் பாபிலோனில் நாடுகடத்தப்பட்டிருந்த கிமு 593ல் இருந்து 571 வரையுள்ள 22 ஆண்டுகளில் 6 தரிசனங்களை காண்கிறார்.
- வானதூதர்களின் சேனைகளின் நடுவே தேவன் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் “சிங்காசன தரிசனம்’
- முதல் ‘ஆலய தரிசனம்’ இதிலே ஆலயத்தில் நடக்கும் அருவருப்புகளின் நிமித்தம் தேவன் அலயத்தை விட்டு நீங்குதல் (யூதா ஜனம் தேவனாகிய கர்த்தரை தொழுதுகொள்ளாமல் விக்கிரகங்களை வழிபட்டார்கள்)
- இஸ்ரவேலைக் குறிக்கும் பல அடையாளங்கள். அதில் இஸ்ரவேல் வேசியான மணப்பெண்ணாக காண்பிக்கப்படுகிறாள்.
- “உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கு” இறந்தபோன இஸ்ரவேல் வீட்டார் மீண்டும் எழுதல் காண்பிக்கப்படுகிறது.
- கோகு. மாகோகு அழிக்கப்படுதல். இதில் எசேக்கியேலுக்கு இஸ்ரவேலின் எதிரிகள் அழிக்கப்பட்டு சமாதானத்தின் புதிய யுகம் பிறத்தல் காண்பிக்கப்படுகிறது.
- இறுதி “ஆலய தரிசனம்’. இதில் எசேக்கியேலுக்கு எருசலேமின் புதிய ஆலயத்தை சுற்றி ஒரு புதிய குடியரசு உண்டாயிருப்பதையும். தேவனுடைய பிரசன்னத்தின் அடையாளமான செகினா மகிமை ஆலயத்திற்கு திரும்புவதும் காட்டப்பட்டது.
அடையாளமும் அதன் செயற்பாடும்
வேத பகுதி : 2:8-3:6
செயற்பாடு : எசேக்கியேல் கருளை சாப்பிடுதல்
அடையாளம் : சாப்பிட்ட சுருளில் புலம்பல். துக்கம். சாபம் எழுதப்பட்டிருந்தது. போல எசேக்கியேலின் தீர்க்கதரிசனங்களிலும் வெளிப்படுத்துதல்களிலும் புலம்பல், துக்கம். சாபம் இருக்கும்.
வேத பகுதி : 4:1-3
செயற்பாடு : எசேக்கியேல் ஒரு செங்கல்லை எடுத்து அதில் எருசலேமை வரைந்து அது முற்றிகையிடபடுவது போல மண்மேடுகள், கொத்தளங்கள், மதிலிடிக்கும் யந்திரங்கள் வைத்தல்
அடையாளம் : எருசலேமை சேனைகள் சூழ்ந்து மதில்களை இடிக்கும்படி மண்மேடுகள். கொத்தளங்கள் போட்டு மதிலிடிக்கும் யந்திரங்களை கொண்டு மதிலை உடைத்து நகரத்தை பிடிக்கும்
வேத பகுதி : 4:4-8
செயற்பாடு : எசேக்கியேல் வலது இடது பக்கமாய் ஒருக்களித்துப் படுத்தல்
அடையாளம் : சரியான அர்த்தம் தெளிவாக அறியப்படவில்லை.
வேத பகுதி : 4:9-17
செயற்பாடு : எசேக்கியேல் கழிவினால் வறட்டி உணடாக்கி அதில் அப்பம் சுட்டு அதை பங்காக்கி உண்டு பங்காக்கப்பட்ட தண்ணீரை குடித்தான்
அடையாளம் : தேவன் அப்பத்தையும் தண்ணீரையும் குறையப்பண்ணுவதால் இஸ்ரவேலர் அப்பத்தை அளந்து சாப்பிடவேண்டி யிருக்கும் கண்ணீரை அளந்து குடிக்க வேண்டியிருக்கும். மேலும் தேவன் அவர்களை துரத்திவிடப்போகும் இடங்களில் திட்டின் அப்பத்தை புறஜாதிகள் மத்தியில் சாப்பிடுவார்கள். (4:10,11,13)
வேத பகுதி : அதி 5
செயற்பாடு : தலையையும் தாடியையும் சிரைத்த மயிரை எடுத்து 3 பங்காக்கி ஒரு பங்கை எரித்து ஒரு பங்கை கத்தியால் வெட்டி ஒரு பங்கை காற்றில் தூற்றிவிட்டான்
அடையாளம் : எருசலேமின் குடிகளில் மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோயால்சாவார்கள், பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு பயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கு சகல திசைகளிலும் சிதறிப்போகும்
வேத பகுதி : 12:17-20
செயற்பாடு : எசேக்கியேல் அப்பத்தை நடுக்கத்தோடே புசித்து, தண்ணீரைத் தத்தளிப்போடும் குடித்தான்
அடையாளம் : இஸ்ரவேலின் நிலங்கள் பாழாவதினால் விளைச்சலின்றி போவதினால் அதின் குடிகள் தங்கள் இருதயத்தின் பயத்தின் நிமித்தம் அப்பத்தை நடுக்கத்தோடே புசித்து, தண்ணீரைத் தத்தளிப்போடு குடிப்பார்கள்
வேத பகுதி : 21:6-7
செயற்பாடு : எசேக்கியேல்இடுப்பு நொறுங்கும்படி பெருமூச்சுவிட்டான். மனங்கசந்து பெருமூச்சுவிட்டான்
அடையாளம் : துர்ச்செய்தி வருகிறது இருதயங்கள் உருகி. கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல அலைவுண்ணும்:
வேத பகுதி : 21:8-17
செயற்பாடு : எசேக்கியேல் கைகளை தட்டி பட்டயத்தை கொண்டு சில அசைவுகளை செய்தான்.
அடையாளம் : எசேக்கியேல் அசைந்த பக்கங்களின் வலது இடது புறங்களிலிருந்து அவர்கள் பட்டயத்தினால் வெட்டப் படும்படி செய்து அழிவை வருவிப்பார்
வேத பகுதி : 21:18-24
செயற்பாடு : எசேக்கியேல் இரண்டு வழிகள் பிரிகிற வழிகளையும் இடங்களையும் குறித்தான்
அடையாளம் : பாபிலோன் ராஜா இரண்டு வழிகளாகப்பிரிகிற இடத்திற்கு படையோடு வந்து அதன் முன்னணியில் நின்று எந்த வழியில் போவது என்று நிமித்தம் பாபர்ப்பான்.
வேத பகுதி : 24:15-24
செயற்பாடு : எசேக்கியேலின் மனைவி மரிக்கிறாள் இவன் அவளுக்காக துக்கம் கொண்டாடவில்லை.
அடையாளம் : எசேக்கியேல் மனைவிக்காக துக்கம் கொண்டாடாததுபோல இஸ்ரவேல் புத்திரரும் தங்கள் மனைவிகளுக்காக வும்,பிள்ளைகளுக்காகவும் துக்கம் கொண்டாடுவதில்லை
வேத பகுதி : 37:15-28
செயற்பாடு : எசேக்கியேல் இரண்டு கோல்களை எடுத்து அவைகளில் எழுதி ஒரே கோலாகும்படி ஒன்றோடொன்று இசையச்செய்தான்
அடையாளம் : கர்த்தர் அவர்களை இரண்டு இராஜ்யங்களாக இராமல் ஒரே தேசமாக்குவார். ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்;
கர்த்தாவே எங்களை குணமாக்கும்!
ஏசாயா 6:9-10
- அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி,
நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல். 10.இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக்கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
புத்தகத்தின் முக்கிய பகுதிகள்
1.தேவனின் மகிமை: தீர்க்கதரிசியின் பணிநியமனம் அதி
1-7
A.மகிமையின் வெளிப்பாடு அதி 1
B.தீர்க்கதரிசி அழைக்கப்படுதலும் ஊழியத்திற்கான வல்லமை அளிக்கப்படுதலும் அதி 2
- தீர்க்கதரிசியின் ஆயத்தப்படுதலும்: ஜாமக்காரன் பணியும் அதி 3
D.எருசலேமின் மீதான தண்டனை அதி 4
E.தீர்க்கதரிசியின் மயிரை வழிக்கும் அடையாளம் அதி 5
F.எருசலேமின் மீது வரும் பட்டயம்: தப்புவிக்கப்படும் மீதியாயுள்ளோர் அதி 6
- எருசலேமின் இறுதி அழிவு குறித்த தீர்க்கதரிசனம் அதி
II.தேவனின் மகிமை: இஸ்ரவேலின். எருசலேமின் பூரண சிறையிருப்பு: மகிமை வெளியேறுதல் அதி 8-24
A.மகிமையின் தரிசனம்: விக்கிரக வழிபாட்டால் தீட்டான ஆலயம்:
அழிவுக்கான காரணம் விளக்கப்படல் அதி 8
B.ஆலயத்தைவிட்டு வெளியேற தயாராகும் செகினா மகிமை அதி 9
C.பரிசுத்த ஸ்தலத்தை நிரப்பும் செகினா மகிமை: ஆலயத்தை விட்டு வெளியேறுதல் அதி 10
- எருசலேமின் ஆட்சியாளர்களுக்கெதிரான தீர்க்கதரிசனம் அதி 11
E.எசேக்கியேல் எருசலேமின் அழிவை காட்சிப்படுத்துதல் அதி 12
F.பொய்யான தீர்க்கதரிசி, தீர்க்கதரிசனிகளுக்கு எதிரான தீர்க்கதரிசனம் அதி 13
G.மூப்பர்களின் விக்கிரக வழிபாட்டிற்கு எதிரான தீர்க்கதரிசனம்: எருசலேமின் குறிக்கப்பட்ட பகுதியின் அழிவு அதி 14
- திராட்சைக்கொடி குறித்த தரிசனம் அதி 15
I.எருசலேம் கைவிடப்பட்ட குழந்தையை போலாகி தேவனால் தத்தெடுக்கப்படுகிறது அதி 16
- இரண்டு கழுகுகள் குறித்த விடுகதை அதி 17
K.பாவத்தின் சம்பளம் மரணம்: என்பதற்கு எடுத்துக்காட்டாக மாறிய எருசலேம் அதி 18
L.இஸ்ரவேலின் ராஜகுமாரர்கள் மேல் யெகொவாவின் புலம்பல் அதி 19
- இஸ்ரவேலின் பாவவரலாற்றின் பக்கங்களின் மீளாய்வு:
எதிர்கால தண்டனையும் மறுசீரமைப்பும் அதி 20
N.மேசியா வருமவரை தாவீதின் வம்சத்தில் வந்த கடைசி ராஜா
பாபிலோன் ராஜாவால் அகற்றப்படுதல் அதி 21
- எருசலேமின் அருவருப்புக்களட குறித்த மீளாய்வு அதி 22
- இரண்டு சகோதரிகள் உவமை
அகோலாள் (சமாரியா) அகோலிபாள் (எருசலேம்) அதி 23
Qகொதிக்கும் கொப்பரையின் உவமை அதி 24
III. தேவனின் மகிமை: தேசங்களின் மீதான தண்டனைகள் அதி 25-32
A.அம்மோன்.மோவாப், ஏதோம். பெலிஸ்தியாவுக்கு எதிராக அதி 25
B.தீருவுக்கு எதிராக அதி 26-28
C.எகிப்திற்க எதிராக அதி 29-32
IV.தேவனின் மகிமையும் வரவிருக்கும் இராஜ்யமும் அதி 33-48
A.தீர்க்கதரிசி மீண்டும் பணியமர்த்தப்படுதல் அதி 33,34
B.இஸ்ரவேலின் மறுசீரமைப்பு அதி 35,36
C.இஸ்ரவேலின் உயிர்ப்பு அதி 37
D.கோகு, மாகோகு நிராகரிக்கப்படல் அதி 38,39
E.ஆலயம் மீண்டும் கட்டப்படுதல் அதி 40-42 F.கர்த்தரின் மகிமை திரும்புதல் அதி 4348