சங்கீத புத்தகம்
Pastor. Gabriel Thomasraj
ஆக்கியோனும் வேறு சில தகவல்களும்….
- 73 சங்கீதங்கள் தாவீதால் எழுதப்பட்டவை
- 11 சங்கீதங்கள் கோராவினால் எழுதப்பட்டவை (42,44-49,84-85,87-88)
- 12 சங்கீதங்கள் ஆசாபினாலும் அவன் குடும்பத்தினராலும் எழுதப்பட்டவை (50.73-83)
- 2 சங்கீதங்கள் சாலொமோனால் எழுதப்பட்டவை (72,127)
- மோசேயால் எழுதப்பட்டது (90)
- 1ஏமானால் எழுதப்பட்டது (88)
- 1எஸ்ராகியனான ஏத்தானால் எழுதப்பட்டது (89)
- 50 சங்கீதங்கள் யாரென்று பெயர்குறிப்பிடப்படாதவர்களால் எழுதப்பட்டது
- எழுதப்பட்ட காலம்: 1000 ஆண்டுகளில் எழுதப்பட்டது. மோசேயில் ஆரம்பித்து பாபிலோனிய சிறையிருப்பிலிருந்த பெயர் அறியப்படாத நபர் வரை எழுதியிருக் கிறார்கள்.
- பாபிலோனிய சிறையிருப்பின் முடிவில் பெயர் அறியப்படாத ஒருவரால் இது தொகுக்கப்பட்டது.
- அதிகாரங்கள்: 150
வசனங்கள்: 2461
சங்கீத புத்தகத்திலுள்ள பிரிவுகள்
- சங்கீத புத்தகம் – புதிய தோரா
- புதிய ஐந்நூலாக பார்க்கப்படும்படி சங்கீத புத்தகம் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது
- புத்தகம் 1 (சங்கீதங்கள் 141)
- புத்தகம் 2. (சங்கீதங்கள் 42-72)
- புத்தகம் 3 (சங்கீதங்கள் 73-89)
- புத்தகம் 4 (சங்கீதங்கள் 90-106)
- புத்தகம் 5 (சங்கீதங்கள் 107-150)
- ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஆமென் என்று எழுதப்பட்டிருக்கும்.
- புத்தகம் 1 – 41:13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கு முள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.
- புத்தகம் 2 – 72:18-20 இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர் 19. அவருடைய மகிமைபொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமிமுழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென். 20. ஈசாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.
- புத்தகம் 3 –89:52 கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென்.
- புத்தகம் 4 – 106:48 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலூயா என்பார்களாக.
ஏழு வகையான சங்கீதங்கள்
- துதிப் பாடல்கள்
- புலம்பல்கள் பாடல்கள்
3.நன்றிசொல்லும் பாடல்கள்
- நம்பிக்கையின் பாடல்கள்
- நினைவுகூருதலின் பாடல்கள்
- ஞானத்தின் பாடல்கள்
- ராஜரீகத்தின் பாடல்கள்
சங்கீதங்களை பாடும் பாரம்பரிய நடைமுறை
முதன்முதலாக இஸ்ரவேலரின் ஆலய வழிபாட்டில் இசைக் கருவிகளை வாசிப்பவர் களை வைத்து இசை வாசித்து, பாடகர்களை கொண்டு சங்கீதங்களை ஆலயத்தில் பாடச்செய்தவன் அரசனாகிய தாவீது.
லேவியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக நின்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை கனம்பண்ணி, நன்றிசொல்லி, துதிக்கும் ஊழியத்தை செய்யவேண்டும்.
தலைவனாக ஆசாப்
அவனுக்கு இரண்டாவது இடத்தில் சகரியா
அவனுக்கு பின்பு ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம்.
ஏயெல் கம்பி வாத்தியங்களான தம்புரு, சுரமண்டலம் வாசிப்பவன்
ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டுகிறவன்
. பெனாயா, யாகாசியேல் பூரிகைகளை ஊதுகிறவர்கள்
. 1நாளா 16:7-36 (இதில் சங் 105:1-15 மேற்கோள் காட்டப்பட்டுள்ளது) இதிலே தாவீது முதன்முதலாக சங்கீதங்களை ஆலயத்தில் பாடச்செய்தது பதிவுசெய்ப்பட்டுள்ளது.
சாலொமோன்: ஆலயத்தை பிரதிஷ்டை செய்தபோது ராஜாவாகிய சாலொமோன் சங்கீதங்களை பாடவைத்தான் (2 நாளா 5.7-14).
யோசபாத்: ராஜாவாகிய யோசபாத் சங்கீதங்களைகொண்டு அறிவுரை சொல்லி தனது இராணுவசேனைக்கு உற்சாகமூட்டினான் (2 நாளா 20.20-21).
எசேக்கியா: எசேக்கியா ராஜா தாவீது. ஆசாப் ஆகியோரின் சங்கீதங்களை பயன்படுத்தினான் (2 நாளா 29.30).
யோசியா: யோசியா ராஜாவின் நாட்களில் பஸ்கா கொண்டாடப்பட்டபோது தாவீதின் சங்கீதங்கள் பாடப்பட்டது (2 நாளா 35.15).
செருபாபேல்: சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பின்பு ஆலயத்தின் அஸ்திபாரத்தை போட்ட கொண்டாட்டத்தின்போது செருபாபேல், தாவீது அறிவுறுத்தியிருந்தபடி சங்கீதங்களை பாடவைத்தான் (எஸ்றா 3:10-11)
நெகேமியா : எருசலேமின் மதில்கள் கட்டிமுடிக்கப்பட்டு அதை பிரதிஷ்டை செய்த வேளையில் தாவீதும், சாலொமோனும் கட்டளையிட்டிருந்தபடி நெகேமியா ஆசாரியர்களை சங்கீதங்களை பாடவைததான். (நெகே 12:27-29,45-46)
ஆலயம் அழிக்கப்பட்ட பின்னரும் வழிபாட்டில் சங்கீதங்கள் பாடப்பட்டன
எருசலேமின் ஆலயமும் சங்கீதங்களும் நெருக்கமான உறவை கொண்டிருந்தன.
ஆலயம் அழிக்கப்பட்டபோதிலும் மீட்பின் சங்கீதங்கள் இஸ்ரவேலர்களால் நினைவுகூரப்பட்டு பாடப்பட்டன.
இன்று ஜீவனுள்ள தேவனுடைய ஆலமாயிருக்கிற சபைகளிலும் வேதனை. மகிழ்ச்சி. நம்பிக்கை ஆகியவற்றை வெளிப்படுத்துகிற அதே சங்கீதப்பாடல்கள் பாடப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
இயேசுவும் அவரது சீஷர்களும் பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள்
மத் 26:30 “அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள்.”
அப்போஸ்தலர்கள் பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். அவர்களது இக்கட்டு நேரத்திலும் அவர்கள் பாடினார்கள். அப்.16:25 “நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்: காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.”
புதிய ஏற்பாட்டு சபை பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தது.
எபே 5:19 “சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி.”
கொலோ 3:16 “கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி;”
யாக் 5:13 “உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்: ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.”
சங் 150ல் உள்ள 6 வசனங்களில் “துதியுங்கள்” என்ற வார்த்தை 13 முறை வருகிறது
துதித்தல் நடக்கவேண்டியது எங்கே?
வானத்திலும், பூமியிலும் (தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள் அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.)
துதித்தவில் இருக்கவேண்டியவை என்ன?
தேவன் யார், என்ன செய்கிறார் (அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள் மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்)
துதித்தல் செய்யப்பட வேண்டியவிதம் எப்படி? வாத்திய கருவிகளோடும், சுவாசத்தோடும்
வேதாமத்தின் மத்தியில் இருக்கும் அதிகாரம்: சங் 117
வேதாகமத்தில் இருக்கும் 31102 வசனங்களில் சங் 103:1-2 வசனங்கள் 15551,15552 மத்திய வசனமாகவும் இருக்கிறது.
சங் 103:1-2 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, என் முழு உள்ளமே. அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. என் ஆத்துமாவே, கர்த்தரை எஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
சங்கீதங்கள் வாசிப்புத் திட்டம்
- வியாழன்: புத்தகம் 1 (சங்கீதம் 1-41) – 41 அதிகாரங்கள்
- வெள்ளி : புத்தகம் 2 (சங்கீதம் 42-72) -31 அதிகாரங்கள்
- சனி : புத்தகம் 3 (சங்கீதம் 73-89)/ புத்தகம் 4 (சங்கீதம் 90-106) – 34 அதிகாரங்கள்
- ஞாயிறு : புத்தகம் 5 (சங்கீதம் 107-150) -44 அதிகாரங்கள்