தானியேலின் புத்தகம்
Pastor. Gabriel Thomasraj
புத்தகத்தை ஆக்கியோன்
தானியேல் என்ற பெயருக்கு “தேவன் எனது நியாயாதிபதி” என்று அர்த்தம். அவன் யூதா கோத்திரத்தை சேர்ந்தவன். இந்தப் புத்தகம் தன்னால் எழுதப்பட்டதாக தானியேல் குறிப்பிடுகிறார்.(8:1,9:2,9:20,10:2)
இதை எழுதியது தானியேலே என்று இயேசு சொல்லியிருப்பதை மத்தேயு 24:15, மாற்கு 13:14ல் படிக்கிறோம். பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே.
யோயாக்கீம் ராஜாவின் ஆட்சியின் மூன்றாவது ஆண்டில், சுமார் கிமு606ம் ஆண்டில் தானியேல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுச் சென்றான் (1:1)
பாபிலோனின் சிறையிருப்பின் காலமான 70 ஆண்டுகள்வரை, கோரேஸ் ராஜாவின் முதலாவது ஆண்டு சுமார் கிமு536 வரை அவன் பாபிலோனிலே இருந்தான்.(1:21,9:2)
அதிகாரங்கள் 12
வசனங்கள் 357
தானியேல் பணியாற்றிய நான்கு ராஜாக்கள்
நேபுகாத்நேச்சார்- Nebuchadnezzar
நேபுகாத்நேச்சார் தானியேலையும் பிரபுக்கள் குலமான வேறுசிலரையும் சிறைப்படுத்தி கொண்டுபோனான். நேபுகாத்நேச்சாரின் இராஜ்யத்தில் தானியேலுக்கு பதவியும், முக்கியத்துவமும் அளிக்கப்பட்டது. (அதி 2)
பெல்ஷாத்சார் – Belshazzar
நேபுகாத்நேச்சாரின் மரணத்திற்குப் பின்பு தானியேலின் மதிப்பு குறைந்துபோய் இருந்தாலும், முற்றிலும் இல்லாமல் போகவில்லை. பெல்ஷாத்சாரின் விருந்தில் எழுதப்பட்ட எழுத்தை படிக்க அழைக்கப்பட்டான். (5:13)
தரியு – Darius
தரியுவின் ஆட்சியில் நியமிக்கப்பட்ட பிரதம அமைச்சர்கள் மூவரில் தானியேலும் ஒருவன் (6:1)
கோரேஸ் – Cyrus
கோரேஸின் ஆட்சிக்காலத்தின் மூன்றாம் ஆண்டுவரை கிமு536 தானியேல் வாழ்ந்தான்.
தீர்க்கதரிசனப் புத்தகம்
. இது பழைய ஏற்பாட்டின் “மறைபொருள் வெளிப்பாடு” என்ற அழைக்கப்படுகிறது. வேதாகமத்தின் மற்றைய புத்தகங்களோடு ஒப்பிடுகையில் தானியேலில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களே அதிகமாக நிறைவேறியுள்ளன.
புதிய ஏற்பாட்டில், பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசனைங்களை மேற்கோள் காட்டியுள்ள தில் தானியேலின் தீர்க்கதரிசனம் அதிகமாக காட்டப்பட்டுள்ளது.
வரலாற்றாசிரியனாகிய யோசிபஸ் கிழ்த்திசை நாடுகளுக்கு மகா அலெக்ஸாண்டர் படையெடுத்து வந்தபோது நடந்த நிழ்ச்சி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அன்று பிரதான ஆசாரியனாக இருந்த ஜாடுவா. அலெக்ஸாண்டரை சந்திக்க வந்தபோது தானியேலின் புத்தகத்தை கொண்டுபோய் அதில் அலெக்ஸாண்டரை குறித்து எழுதப்பட்டிருந்ததை காட்டியதாக குறிப்பிடுகிறார். இதனால் ஈர்க்கப்பட்ட அலக்ஸாண்டர் எருசலேமை அழிப்பதற்கு பதிலாக சமாதானத்தோடு எருசலேமுக்குள் பிரவேசித்து ஆலயத்திலும் வழிபட்டான்.
பழைய ஏற்பாட்டின் மிகச் சில பகுதிகள் தவிர ஏனையவை எபிரேய மொழியிலேயே எழுதப்பட்டன. இத மிகச் சிலவற்றில் தானியேலும் உள்ளது. 2ம் அதிகாரம் 4ம் வசனம் முதல் 7ம் அதிகாரம் வரை அரமேய மொழியில் எழுதப்பட்டுள்ளது. இந்த அரமேய மொழி தானியேலின் காலத்தில் பொதுவான உபயோகத்திலும், அரசாங்க பயன்பாட்டு மொழியாகவும் இருந்தது.
அன்றைய காலகட்டத்தில் பொதுவாக பயன்பாட்டிலிருந்த அரமேய மொழியில் சில பகுதிகளை தானியேல் எழுதியதற்கு ரணம் ஒன்று இதை எல்லோரும் அறிய வேண்டும் என்பதாகவோ, அறிந்துகொள்ள வேண்டும் என்பதாகவோ இருக்கலாம். புறஜாதிகளின் தேசங்கள் விஷேசமாக இதை எபிரேய மொழியில் அதிகமானவற்றை எழுதியதன் காரணம் இது அதிகமாக யூதர்களுக்கே பொருத்தமானதாக இருந்தது.
அதிகாரம் 7ல் சொல்லப்படும் நான்கு மிருகங்கள்
- கழுகுகளின் செட்டைகளையுடைய சிங்கம்
இது புதிய பாபிலோன் இராஜ்யத்தை குறிக்கிறது.
4ம் வசனத்தின் மற்ற பகுதிகள் அதிகாரம் 4ல் சொல்லப்பட்ட நேபுகாத்நேச்சார் தாழ்மைப்படுத்தப்பட்ட நிகழ்வை குறிக்கும்.
- ஒரு பக்கமாய் சாய்ந்து நின்ற கரடி
மேதிய-பெர்சிய இராஜ்யத்தின் கூட்டாட்சியில் பெர்சியா உயர்ந்திருப்பதை குறிக்கிறது.
அதன் வாயிலிருந்த எலும்புகள் மேதிய-பெர்சிய இராஜ்யம் கைப்பற்றிய பெரிய தேசங்களான லிடியா(கிமு546). பாபிலோன்(கிமு539). எகிப்து (கிமு525) அகியவற்றைக் குறிக்கிறது.
- நான்கு தலைகளையும், நான்கு செட்டைகளையுமுடைய சிவிங்கி
மகா அலெக்ஸாண்டர் நாடுகளை வேகமாய் பிடித்ததை செட்டைகள் குறிக்கின்றன (கிமு 334-330) நான்கு தலைகளும் கிமு 323ல் அலெக்ஸாண்டரின் மரணம் சம்பவித்தபின் இராஜ்யம் நான்கு பங்குகளாக்கப்பட்டதை குறிக்கிறது (8:32). அன்டிபார்-மசிடோனியாவையும், கிரேக்கத்தையும், லெசிமார்க்கஸ் -தாரேஸையும், சின்னஆசியாவையும், 1ம்செலுக்காஸ் -சீரியாவையும், 1ம் பத்தலோமி- எகிப்து, பாலஸ்தீனா பகுதிகளையும் ஆண்டார்கள்.
- நான்காவது பெயர் குறிப்பிடப்படாத பத்துக் கொம்புகள் உள்ள மிருகம்
முன்னுள்ள இராஜ்யங்களை காட்டிலும் அடக்கமுடியாத வல்லமைகொண்டதாயிருந்த ரோம இராஜ்யத்தை குறிக்கிறது. பத்துக் கொம்புகள் 2:41-42ல் சொல்லப்பட்ட பத்து கால்விரல்களுக்கு ஒப்பானது. 9-37
அந்திக்கிறிஸ்துவை பற்றிய விபரிப்பு
- சிறிய கொம்புகள் (7:8) அல்லது ஆரம்பத்தில் சிறிதாயிருந்த கொம்புகள் (89) அந்திக் கிறிஸ்துவை அடையாளப்படுத்துகின்றன.
- அவன் கொடூரமான அரசனாகவும் (8:23). வஞ்சிக்கும் தோற்றமுள்ளவனுமாய் இருப்பான் (7:20)
- அவன் சூழ்ச்சி செய்வதில் வல்லவனாயிருப்பான் (8:23). அவனது திறமை கொம்பிலுள்ள கண்ணால் குறிக்கப்படுகிறது (7:8,20)
- அவன் அதிக வல்லமையுடையவன் (8:24) அந்திக் கிறிஸ்து இனனும் அதிக வல்லமை உடையவனாவான் (11:39,2 தெச 2:9.வெளி 13:7-8)
- அவன் சாத்தானால் வலிமைப்படுத்தப்படுவான்(8:24) அந்திக் கிறிஸ்துவும் அதுபோலவே சாத்தானால் வலிமைப்படுத்தப்படுவான் (2 தெச 2:9. வெளி 13:2)
- அவன் அனேகரை அழிப்பான்(8:25): அந்திக் கிறிஸ்து இன்னும் அதிகமாக பேரை அழிப்பான் (வெளி 13:15,16:13-16
- அவன் குறுகிய காலத்தில் ஐசுவரியவான ஆவான் (8:25): அந்திக்கிறிஸ்துவும் அதுபோல ஆவான் (11:36,வெளி 13:7) அவன் யூதரை உத்திரவப்படுத்துவான் (8:24): அந்திக்கிறிஸ்துவும் அதுபோல செய்வான் (7:21,25: வெளி 12:13)
- அவன் வஞ்சிக்கிறவனாயிருப்பான் (8:25); அந்திக்கிறிஸ்துவும் வஞ்சிப்பதில் வல்லவனாயிருப்பான் (2தெச 2:9.வெளி 13:4,14, 19:11)
- அவன் பெருமையுள்ளவனாயிருப்பான் (8:25) அந்திக்கிறிஸ்துவும் தன்னதைதானே பெருமைப்படுத்திக்கொள்கிறவனாயிருப்பான் (7:8,11,20,25: வெளி 13:5)
- அவன் தேவனை தூஷிப்பான் (8:25): அந்திக்கிறிஸ்துவும் அதுபோல செய்வான் (7:25, 11:36)
- அவன் மனிதக்கைகளிளால் கொல்லப்படமாட்டான் (8:25): அந்திக்கிறிஸ்துவும் அதுபோல
- மனிதக்கைகளிளால் கொல்லப்படமாட்டான் (2தெச 2:8:வெளி 19:19-20)
முக்கிய நிகழ்வுகள்
அதிகாரம் 1: யூதாவின் வீழ்ச்சி எருசலேமின் வீழ்ச்சி, தானியேல் பாபிலோனுக்கு சிறையாக்கி கொண்டுபோகப்படுதல், தேவனுக்கு உண்மையாயிருக்க உறுதியாயிருத்தல்.
அதிகாரம் 2: நேபுகாத்நேச்சார் பலகலவையான உலோக சிலையை சொப்பனத்தில் காணுதல்: தானியேல் புறஜாதிகளின் காலத்தில் உருவாகும் நான்கு இராஜ்யங்கள் பற்றிய விளக்கத்தை கூறுதல்.
அதிகாரம் 3: நேபுகாத்நேச்சார் பொதுவான சிலைவழிபாட்டை திணித்தல்: பொற்சிலையை பணிய மறுத்த எபிரேயர் அக்கினிச்சூளைக்குள் போடப்படுதல்.
அதிகாரம் 4: நேபுகாத்நேச்சார் ஓங்கி வளர்ந்திருந்த விருட்சம் அடிமரம் மாத்திரம் இருக்க வெட்டப்பட்டுப்போதல் குறித்து சொப்பனம் காணுதல்: அதன் நிறைவேறுதலாக ராஜா மனநோயாளியாக சில காலம் இருந்தான்.
அதிகாரம் 5: பெல்ஷாத்சார் நடத்திய விருந்தில் கையுறுப்பின் எழுத்தை வாசித்த தானியேல் பாபிலோனின் வீழ்ச்சியை அறிவித்தல். அதிகாரம் 6: ராஜாவாகிய தன்னை வழிபடும்படி மேதியனாகிய தரியு கட்டளையிடல்: பரலோகத்தின் தேவனை நோக்கி
ஜெபித்ததற்காக தானியேல் சிங்கங்களின் கெபியில் போடப்படுதல்.
அதிகாரம் 7: புறஜாதியாரின் காலத்தில் உருவாகும் நான்கு இராஜ்யங்கங்கள் குறித்த நான்கு மிருகங்களை தானியேல் தரிசனத்தில் காணுதல்.
அதிகாரம் 8:ஆட்டுக்கடா, வெள்ளாட்டுக்கடா, சிறிய கொம்பு குறித்த தரிசனம்.
அதிகாரம் 9: இஸ்ரவேல் தேசம் குறித்து தானியேலின் எழுபதுவார தீர்க்கதரிசனம்.
அதிகாரம் 10-12: இஎஸ்ரவேலின் அண்மையான எதிர்காலம் குறித்தும் தூரத்து எதிர்காலம் குறித்தும் தானியேல் தரிசனம் காணல்:
வரலாற்றின் சிறிய கொம்பும், கடைசிக்கால சிறிய கொம்பும்)
அதிகாரம் 10: தானியேல் தரிசனத்திற்காக ஜெபத்தில் ஆயத்தப்படல் பரலோக தூதன் காட்சியாதல்.
அதிகாரம் 11: பெர்சியா,கிரேக்கம் குறித்த தரிசனம். வரலாற்றின் சிறிய கொம்பும், கடைசிக்கால சிறிய கொம்பும்
அதிகாரம் 12; இஸ்ரவேலின் இறுதி நாட்கள் குறித்த முன்னோட்டம். மகா உபத்திரவம், வெகுமதிகள், கடைசி நாட்கள் குறித்த கடைசி வார்த்தைகள்.
தானியேலின் புத்தகத்தின் முக்கிய பகுதிகள்
- தானியேலின் அர்ப்பணிப்பு அதி 1:1-21
- தானியேலின் சூழ்நிலை 1:1-7
B.தானியேலின் அர்ப்பணிப்பு, 1:8-16
- தானியேல் தயவுகிடைக்கப்பெற்று உயர்தல் 1:17-21
- நேபுகாத்நேச்சாரின் சொப்பனம்: பெரிய சிலை 2:1-49
A.நேபுகாத்நேச்சார் கண்ட சொப்பனம் 2:1-6
B.தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்ட சொப்பனம் 2:7-23
C.நேபுகாத்நேச்சாருக்கு சொல்லப்பட்டு, விளக்கப்பட்ட சொப்பனம் 2:24-45
- தானியேலின் பதவி உயர்வு 2:46-49
III. அக்கினிச்சூளை: விசுவாசத்தின் பாடம் 3:1-30
A.விசுவாச சேதனை 3:1-12
B.விசுவாச செய்கை 3:13-18
C.விசுவாச வெற்றி 3:19-30
IV.நேபுகாத்நேச்சாரின் சொப்பனம்: பெரிய விருட்சம் 4:1-37
A.நேபுகாத்நேச்சார் விபரித்த சொப்பனம் 4:1-18
- தானியேல் விளக்கின சொப்பனம் 4:19-27
- தேவனால் நிறைவேற்றப்பட்ட சொப்பனம் 4:28-37
V.பெல்ஷாத்சாரின் விருந்து 5:1-31
A.விருந்திற்கு பெல்ஷாத்சாரின் பங்களிப்பு:
கட்டுப்பாடில்லாத களியாட்டம் 5:1-4
B.விருந்திற்கு தேவனின் பங்களிப்பு:
சுவற்றில் கையுறுப்பால் எழுதப்பட்ட எழுத்து 5:5-6
C.விருந்திற்கு தானியேலின் பங்களிப்பு:
அழிவை குறித்த அறிவிப்பு 5:7-29
- விருந்திற்கு தரியுவின் பங்களிப்பு:
பாபிலோனின் அழிவு 5:30-31
- சிங்கத்தின் கெபியில் தானியேல் 1-28
- தானியேல் எடுத்துக்கொண்ட உறுதியான நிலைப்பாடு 6:1-3
- தானியேலுக்கு எதிரான சூழ்ச்சி 6:4-9
- தானியேலின் ஜெபம் 6:10-11
D.தானியேல் மீதான குற்றச்சாட்டும் தண்டனையும் 6:12-17
- தானியேலுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு 6:18-28
VII. தானியேலின் நான்கு மிருகங்கள், நீண்ட ஆயுசுள்ளவர் தரிசனம் 7:1-28
A.வரலாற்று தகவல்கள் 7:1-3
- தரிசனங்களும் விளக்கங்களும் 7:4-28
VIII. தானியேலின் ஆட்டுக்கடா. வெள்ளாட்டுக்கடா, சிறிய கொம்பு தரிசனம் 8:1-14
- தரிசனம் 8:1-14
- தரிசன விளக்கம் 8:15-27
- ஆட்டுக்கடா 8:15-20
2.வெள்ளாட்டுக்கடா 8:21-22
- சிறிய கொம்பு 8:23-25
- தானியேலில் உண்டாக்கிய தாக்கம் 8:26-27
- தானியேலின் வருடங்களை அடையாளப்படுத்தும் எழுபது வாரங்கள் குறித்த தீர்க்கதரிசனம் 10:1-12:13
- வரலாற்று தகவல்கள் 9:1-2
B.தானியேலின் ஜெபம் 9:319
C.தீர்க்தரிசனம் 9:20-27
- தானியேலின் பரந்து விரிந்த தீர்க்கதரிசன காட்சிகள் 10:1-12:13
- தானியேலின் தரிசனம் 10:1-9
B.தானியேல் பலப்படுத்தபடுதல் 10:10-11:1
C.தானியேலின் தேசங்கள் குறித்த தீர்க்கதரிசனம் 112-45
1.பெர்சியா 11:2
- கிரேக்கம் 11:3-4
- எகிப்து, ஆராம் 11:5-20
4.அந்தியோகஸ் எபிபானஸ் 11:21-35
- அந்திக் கிறிஸ்து 11:36-45
- இஸ்ரவேல் குறித்த தீர்க்கதரிசனங்கள் 12:1-13