நீதிமொழிகள் ஆய்வு

நீதிமொழிகள்

Pastor Gabriel Thomasraj

நீதிமொழிகள்” என்று பெயர் பெறக் காரணம்

  • எபிரேய வேதாகமத்தில் இது “சாலொமோனின் நீதிமொழிகள்” என்று அழைக்கப்படுகிறது.
  • கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபோது Paroimiai என்றும் ஆங்கிலத்தில் Proverbs என்றும் பெயரிடப்பட்டது,
  • வேதாகமத்தின் கவிதை நூல்கள் வரிசையில் யோபின் புத்தகம், சங்கீதங்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இது இடம்பெற்றுள்ளது.
  • ஞானப்புத்தகங்களில் இது முதலாம் இடத்தில் வருகிறது. அடுத்த இரண்டு இடங்களில் பிரசங்கியும்,
  • சாலொமோனின் உன்னதப்பாட்டும் இடம்பெறுகிறது.
  • நீதிமொழிகள் நீண்ட அனுபவத்தின் பின்னணியில் அறிவிக்கப்படும் சிறிய அறிவுரைகள்.
  • பொதுவான உலக கலாச்சாரங்கிளிலும், இலக்கியங்களிலும் நீதிமொழிகள் என்பது சுருக்கமான, எளிமையான புகழ்பெற்ற கூற்றுக்களாகவும் அல்லது நடைமுறை அனுபவத்தினாலோ, இயல்பான அறிவினாலோ பெற்றுக்கொண்ட பொதுவான உண்மையை திறம்பட எடுத்தியம்பும் சொற்தொடராகவோ இருக்கிறது.
  • இந்தப் புத்தகத்தில் ஒரு குறிக்கப்பட்ட சம்பவமோ, கதையோ, வரலாற்று நிகழ்வின் விபரிப்போ. முக்கி கதாபாத்திரங்களோ இல்லை.
  • இந்த உலகில் ஞானமாய் வாழ்வது எப்படி என்பதை சொல்லித்தருகிறது இந்தப் புத்தகம்.
  • அதிகாரங்கள் 31

வசனங்கள் 915

நீதிமொழிகளை ஆக்கியோன்

  • இந்த புத்தகத்தை ஆக்கியோன் சாலொமோன் என்பது பாரம்பரிய நம்பிக்கை.
  • சாலொமோனே இதை ஆக்கியோனாக தன்னை அடையாளப்படுத்துகிறான். இந்த புத்தகத்தின் மூன்று தெளிவான பிரிவுகளின் ஆரம்பத்தில் அவனது பெயர் வருகிறது. (நீதி 1:1,10:1,25:1)
  • இது இந்தப் புத்தகத்தின் 29 அதிகாரங்கள் வரைக்கும் நீள்கிறது.
  • இதன் பெரும்பகுதி கிமு931ல் அவன் மரணமடைவதற்கு முன்பாக தொகுக்கப்பட்டது. அதிகாரங்கள் 25-29 பகுதிகள் எசேக்கியாவின் மனிதர் பேர்த்தெழுதின சாலொமோனின் நீதிமொழிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை கொண்டு பார்க்கும்போது இந்தப் புத்தகம் யூதாவாகிய தெற்கு இராஜ்யத்தில் இருந்திருக்க வேண்டும்.
  • இது எசேக்கியாவின் ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியான கிமு686ல் அதனது இறுதி வடிவத்தை எட்டியிருக்ககூடும்.

சாலொமோனின் ஞானம்

  • சாலொமோனின் அசாதாரண ஞானம்,தேவன் அவனிடத்தில் அவனுக்கு அத்தியாவசியமாக என்ன வேண்டும் என்று சொப்பனத்தில் அவனிடத்தில் கேட்டதிலிருந்து ஆரம்பிக்கிறது.
  • . அதற்கு அவன் “நன்மை தீமை இன்னதென்று வகையறுக்க ஞானமுள்ள இருதயத்தைத் தாரும்” (1இரா 3:9) இதற்கு முன் அவன் தன்னை “சிறுபிள்ளையாயிருக்கிறேன்” என்று சொல்லியிருந்தான் (1இரா 3:6) .
  • . தேவன் அந்த ஜெபத்திலே பிரியப்பட்டு அவனது விண்ணப்பததை கேட்டு, “ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை” என்று வாக்குப்பண்ணினார்.

1 இராஜா 4:29-31,34

  • அவனது மிகுதியான ஞானம், பகுத்தறிவு. புரிந்துகொள்ளும் ஆற்றல் கடற்கரை மணலைப்போல அதிகமாயிருந்தது.
  • கிழக்கு தேசம் மற்றும் எகிப்தின் ஞானவான்களை காட்டிலும் இவனது ஞானம் மேலானதாயிருந்தது.
  • அவனது புகழ் சுற்றியிருந்த நாடுகளுக்கெல்லாம் பரவியிருந்தது.
  • சாலொமோனின் ஞானத்தை கேட்க சகல தேசங்களிலிருந்தும் ஜனங்கள் வந்தார்கள்.
  • வெளி தேசங்களிலிருந்து நீண்ட பயணங்கள் செய்து ஞானமுள்ள பேரரசன் பேசுவதை கேட்க

வருகைபுரிந்த முக்கியஸ்தர்களில் குறிப்பிடத்தகுந்தவள் சேபாவின் ராஜாத்தி (1இரா 10:1-10)

  • சேபா என்னும் தேசமானது சபா என்றழைக்கப்பட்ட செங்கடல்பகுதியின் கடற்கரையை ஒட்டிய பிரதேசம். இன்று இவை எரித்திரியா,சோமாலியா, எதியோப்பியா, யேமன் நடுகளின் பிரதேசம். சாலொமோன் 3000 நீதிமொழிகளை சொன்னதும் 1000க்கும் மேற்பட்ட கவிதைகளை இயற்றியதும்
  • இந்த சந்திப்பினால் விளைந்த பலன்கள். கேதுரு மரங்கள் முதற்கொண்டு வெவ்வேறு விலங்கினங்கள்வரை பேசத்தக்க பரந்த அறிவு .

அவனுக்கிருந்தது (1இரா 4:32-33)

  • சாலொமோன் அவனது நீதிமொழிகள் தவிர்ந்த ஏனைய நீதிமொழிகளை சேர்ப்பதையும்,

தொகுப்பதையும் செய்தான் என்று அனுமானிக்க முடிகிறது.

  • பிரசங்கி 12:9-11 மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப்போதித்து, கனைமாய்க் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான. இதமான வார்த்தைகளைக் கண்டு பிடிக்கப் பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள். ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது.
  • கடைசி இரண்டு அதிகாரங்கள் ஆகூர் என்பவனாலும் (30:1),லேமுவேல் என்பவனாலும் (31:1) எழுதப்பட்டிருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இவர்கள் யாரென்பது வரலாற்றின் மௌனங்களில் ஒன்று.

முக்கியமாக வலியுறுத்தப்படும் அறிவுரை

. மற்றப் புத்தகங்கள் ஆழமான இறையியல் சத்தியங்களையும் அல்லது வெற்றி, தோல்விகள் குறித்த நீண்ட சம்பவ விபரிப்புக்களையும் அல்லது கீழ்ப்படியாத ஜனங்களுக்கு பேசப்பட்ட தீர்க்கதரிசன உரைகளையும் கொண்டிருக்கும்போது நீதிமொழிகள் ஜனங்களை ஞானத்தின் பாதையில் இட்டுச்செல்லும் அறிவுரையை சொல்லுவதில் மாத்திரமே கவனம் கொண்டிருக்கிறது.

. இங்கு ஞானமானது படுக்கையிலிருந்து எழுவதில் தொடங்கி மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதிகளிலும் நலமானவற்றை செயல்படுத்தத்தக்க தார்மீக நெறிமுறைகளையும், சரியான நடத்தை விதிகளையும் அறிவார்ந்த விதத்தில் பயன்படுத்துவது குறித்து விபரிக்கிறது.

ஞானவானாயிருக்க நீதிமொழிகள் தரும் இரண்டு ஆலோசனைகள்

  1. a) கர்த்தருக்கு பயப்படுதல்
  • . இதற்கான இறையியல் அடிப்படை நீதி 1:7 “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்”
  • . தேவனாகிய கர்த்தருக்கே சகல கனத்தையும் செலுத்தி அவரை முழு இருதயத்தோடும் நம்புவது.
  1. b) செவிகொடுததலின் முக்கியத்துவம்
  • நமது வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் செயல்படுவதற்குரிய ஞானத்தை அடைய நமக்கு முன் சென்றவர்களான முதியோர்களும், பெற்றோர்களும் சொல்லிவைத்த அறிவுரைகளை செவிமடுப்பதின் அவசியத்தை இந்த புத்தகத்தின் பெரும்பகுதி வலியுறுத்துகிறது. (1:5,8)

இந்தப் புத்தகத்தின் நோக்கம் (நீதி 1:2-6)

  1. ஞானத்திலும், அறிவுரையிலும், புரிந்துணர்விலும் வளர

வச.2 இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து புத்திமதிகளை உணர்ந்து.

2.நமது நடக்கைகளில் மேம்பட

வச.3 விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம்.

3.இளையோருக்கு அறிவுரை சொல்ல

வச.4.5 இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத் தையும் கொடுக்கும். புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து;

  1. ஞான வார்த்தைகளின் உட்கருத்தை வெளிப்படுத்த

வச.6-நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான்.

விபரிப்பின் முறைகள்

நீதிமொழிகளின் கவிதை பல வித்தியாசமான வடிவங்களில் சொல்லப்படுகிறது

1.உரை -Discourse

நீதிமொழிகளின் முதல் 9 அதிகாரங்கள் ஞானத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கிறது.

இந்த விவாதம் படிப்படியாக கட்டமைக்கப்படுகிறது.

ஞானமானது வாலிபர்களை ஈர்க்கும், வெகுமதியளிக்கும், பாதுகாக்கும் ஒரு பெண்ணாக உருவமைக்கப்பட்டிருக்கிறது.

  1. இரு வரிகள் – Two-liners

* முதல் ஒன்பது அதிகாரங்களை கடந்தபின்பு பெரும்பாலான பகுதிகள் இரு வரிகள் கொண்டவையாக இருக்கின்றன

மூன்று வகைகளை காணமுடியும்

1.ஒப்புமை (26:17)

  1. முரண் (10.7)
  2. விளைவு (25:17)
  1. பட்டியல் – Lists

இங்கொன்றும், அங்கொன்றுமாக கவனிக்கப்பட்டதிலிருந்து எட்டப்பட்ட பொதுவான கருத்தை தீர்க்கமாக வெளிப்படுத்தும் தொகுப்பு.(30:29-31)

  1. அகரவரிசை – Acrostics

31:10-31 இதில் ஒவ்வொரு வரியின் முதல் சொல்லும் எபிரேய அகரவரிசைப்படி உள்ள எழுத்தைக் கெண்டு ஆரம்பிக்கும் வண்ணமாக அமைக்கப்பட்டுள்ளது.

நீதிமொழிகளில் உள்ள நான்கு பெண்கள்

*ஞானமாக உருவகப்படுத்தபடும் பெண் (1:20-21, 3:14-18, 4:7-8, 8:1-36, 9:1-12)

8ம் அதிகாரத்தில், ஞானமாக உருவகப்படுத்தபடும் பெண் தனக்காக பேசுகிறாள். அவன் அழகுள்ளவள் மாத்திரமல்ல வலிமையுள்ளவளுமா யிருக்கிறாள். ராஜாக்களும் அவளிடத்தில் ஆலோசனை கேட்க வருகிறார்கள்.

*பேதையாக உருவகப்படுத்தபடும் பெண் (9:13-18)

*கட்டுகிற பெண்

  • . புத்தியுள்ள பெண் – 14:1
  • . நல்லொழுக்கமுள்ள பெண் 11:16
  • குணசாலியான பெண் – அதி 31

*தகர்க்கிற பெண்

  • வேசியான பெண்-23:27
  • . பரத்தையான பெண் -அதி 7
  • … சண்டைக்காரியான பெண் 21:9
  • . மதிகேடான பெண் – 11:22

இந்த புத்தகத்தை குறித்த சுருக்கமான விளக்கம்

முன்னுரை: நோக்கமும் ஆய்வுப்பொருளும் (1:1-7)

ஞானத்தினால் உண்டாகும் மேன்மையான வழி (1:89:18)

வாலிபம் குறித்த அறிவுரைகளும், எச்சரிக்கைகளும் (1:8-33)

  1. மகிழ்ச்சியை தக்கவைத்துக்கொள்ள பிரயத்தனம் (1:8-19)
  2. ஞானத்தை தள்ளிவிடுவதினால் உண்டாகும் விளைவுகள் குறித்த எச்சரிக்கை (1:20-33)

ஞானம் குறித்த புகழுரை (அதி 24)

  1. ஞானத்தின் அறிவுரையை ஏற்பதால் உண்டாகும் நன்மைகள் (அதி 2)
  2. ஞானத்தால் உண்டாகும் நல்வாழ்வு (3:1-20)
  3. ஞானத்தின் அறிவுரையும் நன்மைகளும் (3:21-35)
  4. ஞானத்தை பற்றிக்கொள்வதிலுள்ள சவால்கள் (அதி 4)

மதியீனம் குறித்த எச்சரிப்புக்கள் (அதி 5.7)

  1. விபசாரம் குறித்த எச்சரிக்கை (அதி 5)
  2. விபரீத
  3. விபரீத செய்கையின் வழிகள் குறித்த எச்சரிக்கை (அதி 6:1-19)
  4. விபசாரத்தின் விளைவுகள் (6:20-35)
  5. விபசாரியின் நயவஞ்சகம் குறித்து எச்சரிக்கை (அதி 7)

இளவயதினருக்கான வேண்டுகோள் (அதி 8-9)

ஞானத்தின் வேண்டுகோள் (அதி 8)

ஞானமுள்ளவர்களுக்கும். மதியினருக்கும் அழைப்பு (அதி (9)

சாலொமோனின் நீதிமொழிகளின் பிரதான தொகுப்பு

(10:1-22:16)

ஞானத்தின் முப்பது கூற்றுக்கள் (22:17-24:22)

ஞானத்தின் மேலதிக கூற்றுக்கள் (24:23-34)

எசேக்கியா தொகுத்த சாலொமோனின் நீதிமொழிகள் (அதி 25-29)

ஆகூரின் கூற்றுக்கள் (அதி 30)

ராஜாவாகிய லேமுவேலின் கூற்றுக்கள் (31:1-9)

முடிவுரை: அதி சிறந்த மனையாள் (31:10-31)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *