பிரசங்கி
Pastor Gabriel Thomasrai
“பிரசங்கி” என்று பெயர் பெறக் காரணம்
- பிரசங்கி என்றால் “கூட்டத்திற்கு முன்னால் நின்று பேசும் ஒருவன்” என்று அர்த்தம். இதன் திறவுகோல் வார்த்தையான “மாயை” என்பது 37 தடவைகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
- . ‘சூரியனுக்கு கீழே” என்னும் சொல்லாடல் 29 தடவைகள் பயன்படுத்தபட்டிருக்கிறது.
- . இந்த பூமியில் மனிதன் வாழும் வாழ்க்கையின் அர்த்தத்யுைம், திருப்தியையும், நோக்கத்தையும் கண்டறிவதற்கான முயற்சியே இந்த புத்தகம்.
- . இந்தப் புத்தகம் வேதாகமத்தின் கவிதை நூல்களில் நான்காகவதாக இடம்பெறுகிறது. சங்கீதங்கள் – கவிதைகளின் தொகுப்பு, நீதிமொழிகள்-நல்லொழுக்க கொள்கைளின் தொகுப்பு. என்பதுபோல பிரசங்கி நீண்ட கவிதை வடிவிலான விளக்கவுரைகள். இந்த புத்தகத்தின் ஆரம்பத்தில் ஒரு கேள்வியை எழுப்பி அடுத்த பன்னிரண்டு அதிகாரங்களில் அதற்கான விடையை கண்டுபிடிக்கிறது.
- அந்த கேள்வி: மனுஷன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?
- இந்தப் புத்தகம் இதற்கான விடையை இரண்டு கோணங்களில் அலசுகிறது
- 1வது கோணம் : சூரியனுக்குக் கீழே -1:9 “முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை”
- 2வது கோணம்: சூரியனுக்கு மேலே -2:24 மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அனுபவிப்பதைப் பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை; இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன்.
- அதிகாரங்கள் 12
- வசனங்கள் 222
பிரசங்கியின் ஆக்கியோன்
. இந்த புத்தகத்தை ஆக்கியோன் சாலொமோன் என்பது பாரம்பரிய நம்பிக்கை.
இதற்கான காரணங்கள்
- அவன் தாவீதின் குமாரனாயிருந்தான் (1:1)
- அவன் ராஜாவாயிருந்தான் (1:1)
- அவன் எருசலேமிலிருந்து ஆட்சி செய்தான் (1:12)
- அவன் ஞானமுள்ளவனாயும், புகழ் பெற்றவனாயுமிருந்தான் (12:9-10)
- புரிந்துகொள்ள கடினமான புத்தகம்
- வரலாற்றில் (கிறிஸ்துவை தவிர்த்து) மிகப்பெரிய ஞானம் உள்ளவன் என்று அறியப்பட்டவனால் எழுதப்பட்டது.
- நமது வாழ்வின் மிகச் சிக்கலான சில பகுதிகளை இது ஆராய்கிறது.
- நமக்கு பரிச்சயம் இல்லாத விபரிப்பு முறையை கையாண்டு எழுதப்பட்டிருக்கிறது (வரிவடிவங்களாக இல்லாது வட்டவடிவங்களாக காரியத்தை விபரிக்கும் முறை)
பூமியில் மனித வாழ்வின் நிலை
சூரியன் உதிக்கிறது, அது மறைகிறது. மீண்டும் உதிக்கிறது. நதிகள் பாய்கிறது அது காலியாவதில்லை. தகவல்கள் பெருகின்றன. ஆனால் மனம் திருப்தியாவதில்லை. இவ்வாறு வாழ்க்கை வட்டச்சுழற்றியாக சுற்றிவருகிறதே, மனிதனால் என்ன செய்ய முடியும்? இது நிச்சயமாகவே அர்த்தமற்றதைப்போல தோன்றுகிறது. இந்த உலகத்தை பற்றி பிரசங்கி அறிய அறிய அது அவனை அதிக சலிப்படைய வைக்கிறது (1:18). ஆகவே இந்தப் பிரச்சினையை அவன் ஆராய்கிறான். இதன் முதலாவது பகுதி பூமியில் மனித வாழ்வின் நிலை குறித்த பிரசங்கியின் ஆராய்ச்சி (1:13).
- ஆராய்ச்சின் முடிவுகள் நம்பிக்கை தருபவையாக இல்லை.
- அறிவு பெருக பெருக உலகத்தோடு வாழ்வது கடினமாகிறது (1:18)
- இன்பங்களும், செல்வங்களும் திருப்தியை உண்டாக்க தவறுகிறது (2:10-11,5:10)
- ஞானிக்கும், மூடனுக்கும் சாவு ஒன்றுபோலவே சம்பவிக்கிறது (2:16)
- உங்கள் கடின உழைப்பின் பலனை சாகும்போது கொண்டுபோகமுடியாது
- நீங்கள் விட்டுப்போவது அதற்காக உழைக்காத சந்ததிக்கு போகிறது (2:18-19)
- (2:18-19,5:13-17)
- உங்கள் உழைப்பின் பலன் உங்களை உண்மையாக திருப்திப்படுத்துவதில்லை (2:10-11,5:10,6:7)
- நீதிக்குப் பதிலாக மக்கள் அநீதியை நடைமுறைப்படுத்துகிறார்கள் (3:16,4:1,5:8)
- தேவனுக்கு கிழ்ப்படிந்து வாழ்வதுகூட மகிழ்ச்சியான நீடித்த வாழ்க்கைக்கான உத்தரவாதமல்ல (7:16)
- சிலவேளைகளில் துன்மார்க்கர் தண்டிக்கப்படாமல் தப்புகிறார்கள் (7:15,8:14)
வாழ்க்கையை கையாளவேண்டிய வழிகள்
உலகம் இப்படியிருப்பது ஏன்?
இதைக்குறிந்து நாம் செய்யக்கூடியது என்ன?
இதனால் பயன் என்ன?
- . நீதியுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார் என்று அவன் அறிந்திருந்தான் (8:12-13)
- ஆனால் தேவனுடைய நீதியை எப்போதும் உலகம் பிரதிபலிப்பதில்லையே.
- ஆகவே மனிதன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ என்ன செய்யவேண்டும் என்பதை சொல்லுகிறான்.
- உன்னுடைய வாழ்க்கை தேவனுடைய கரத்திலிருப்பதால் நீ புசித்து, குடித்து மகிழ்ச்சியோடிரு (9:7-9)
- கடினமாக உழை, உன்னால் முடிந்த அளவிற்கு அறிவை பயன்படுத்து (9:10,18)
- மதியீனமாக நடந்துகொள்வதை தவிர் (குறிப்பாக அதிகாரமுள்ளவர்களோடு இடைப்படுப்போது 10:2,5,6,20)
- கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்து, வாய்ப்புகளை தொடர்ந்து போ, உனக்கு கிடைத்திருக்கிற இந்த தருணத்தில் வாழ்க்கையை மகிழ்சியாய் அனுபவி (11:4,8-10) நீ வாழுகிறபோது உன்னை உண்டாக்கினவரை நினைத்துக்கொள் (12:1)
பிரசங்கி கடைசியாக தொகுத்து கூறுவது
. வாழ்வின் அர்த்தத்தை ஒருவன் கண்டுபிடிக்க வேண்டுமானால் தேவன் மேல் நம்பிக்கை வைப்பதே அதற்கான தீர்வு என்ற இறுதி முடிவிற்கு பிரசங்கி வருகிறான்.
. வாழ்க்கை என்பது குறுகிய காலம்தான் ஆகவே தேவனில்லாமல் அதை வாழ்வது வீண் என்பதை ஏற்றுக்கொள்ள பிரசங்கி தீர்மானிக்கிறான்.
. பிரசங்கி தனது வாசகர்களுக்கு அநித்தியமான இன்பங்களில் அல்ல நித்தியமான தேவன் மேல் கவனம் வைக்கும்படியும் அறிவுரை கூறுகிறான்.
பிரசங்கி 12:13-14
காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
இந்தப் புத்தகத்தின் சுருக்கம்
- Duane Garrett என்பவர் இதை பின்வருமாறு தொகுக்கிறார்.
- அறிமுகம் (1:1-2)
- காலமும், உலகமும் (1:3-11)
3.ஞானம் (1:12-18)
4.ஐசுவரியம் (2:1-11)
5.ஞானம் (2:12-17)
6.ஐசுவரியம் (2:18-26)
7.காலமும், உலகமும் (3:1-15ஆ)
- அரசியல் (3:15இ-17)
9.மரணம் (3:18-22)
- அரசியல் (4:1-3)
- ஐசுவரியம் (4:4-8)
12.நட்பு (4:9-12)
- அரசியல் (4:13-16)
14.மதம் (5:1-7)
- அரசியல் (5:8-9)
16.ஐசுவரியம் (5:10-6:6)
17.மாற்றம் (6:7-9)
- ஞானமும், மரணமும் (6:10-7:4)
- மாற்றம் (7:5-6)
- ஞானமும், அரசியலும் (7:7-9)
21.மாற்றம் (7:10)
- ஞானமும், ஐசுவரியமும் (7:11-14)
- ஞானமும், மதமும் (7:15-29)
24.மாற்றம் (8:1)
- அரசியல் (8:2-6)
- மாற்றம் (8:7-8)
- தீமையை அனுமதிக்கும்
தேவன் (8:9-9:1)
- மாற்றம் (9:2)
29.மரணமும், திருப்தியும் (9:3-10)
- மாற்றம் (9:11-12)
- அரசியல் (9:13-10:17)
- மாற்றம் (10:18-20)
- ஐசுவரியம் (11:1-6)
- மரணமும், திருப்தியும் (11:7-12:7)
35.முடிவு (12:8-14)