எரேமியாவின் புலம்பல்
புத்தகம் குறித்த ஒரு பார்வை
எபிரேய மொழியில் “எக்கா”ekah என்பது இதன் பெயர். இதன் அர்த்தம் “ஐயோ”. பின்னாட்களில் மொழிபெயர்ப்பாளர்கள் இதற்கு ஆங்கிலத்தில் “Lamentations” என்று பெயரிட்டர்கள். அதுவே தமிழில் ‘புலம்பல்'” என்று அழைக்கப்பட்டது.
. புலம்பலின் புத்தகத்தை எழுதியவர் யாரென்பதை அந்தப் புத்தகம் தெரிவிக்காதபோதும் இந்த புத்தகத்தின் வசனங்கள் தீர்க்கதரிசியான எரேமியாவே இதை எழுதினார் என்று பலமாக சான்றுபகருகின்றன. இதை ஆக்கியோன் சமீபத்தில் சம்பவித்த எருசலேமின் அழிவைக் கண்டது மாத்திரமல்ல அன்னிய படையெடுப்பையும் அவன் கண்டிருந்தான் (1:13-15) எரேமியா இந்த இரண்டு நிகழ்வுகள் நிகழ்ந்தபோது அங்கே இருந்தான்.
அதிகாரங்கள்: 5
வசனங்கள்: 154
யூதா மனந்திருந்தாமல் விக்கிரக வழிபாட்டில் தொடர்ந்தது. பாபிலோனியர்கள் எருசலேமை முற்றிகைபோடவும், சூறையாடவும், தீக்கிரையாக்கவும், அழிக்கவும் தேவன் அனுமதித்தார். சுமார் 400 ஆண்டுகளாக இருந்த சாலொமோனின் தேவாலயம் தரைமட்ட மாக்கப்பட்டது.
கிமு 587ல் பாபிலோனியர்களால் எருசலேம் நகரம் அழிக்கப்பட்டதால் அந்த நகரத்திற்கும் அதன் குடிமக்களுக்கும் உண்டான அவமானம், வேதனை, விரக்தி புலம்பலின் புத்தகத்தில் விபரிக்கப்படுகிறது. யோபுவிற்கு நேர்ந்த தீமையோ யோபு அறியாமலே அவன் மீது வந்தது. ஆனால் எருசலேமின் மீது எரேமியாவின் புலம்பலில் சொல்லப்பட்ட அழிவோ எருசலேமே தன்மீது வரவைத்துக்கொண்ட அழிவு. முன்பு பெருமையானபேரை பெற்றிருந்த நகரம் பரிசுத்த தேவனின் தண்டனையை அனுபவித்தது. அதன் விளைவோ மாபெரும் அழிவு.
பிள்ளைகள் தாயிடமே உணவுக்காக பிச்சை எடுத்தார்கள் (2:12)
இளம் வாலிபர்களும், பெண்களும் வாளால் வெட்டப்பட்டார்கள் (2:21)
இயற்கையாகவே பிள்ளைகள்மேல் மனதுருக்கமாயிருக்கும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளையே சமைத்து உண்டார்கள் (4:10)
பாழான நிலை கண்டு தெருக்களே புலம்பின (1:4)
கவிதை அமைப்பு
எருசலேம் நகரமும், அதன் ஆலயமும் அழிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து நடத்தப்படும் நினைவேந்தல் நிகழ்வுகளில் பாடப்படுவதற்காக புலம்பல் எழுதப்பட்டிருக்கலாம்.
பாபிலோனியர் கையில் எருசலேம் வீழ்ந்த துன்பியல் சம்பவத்தை நினைவுகூரும் வகையில் எழுதப்பட்ட ஐந்து தொகுப்புகள் கொண்ட புலம்பல் பாடல்கள் அடங்கிய விஷேச தொகுப்பே புலம்பலின் புத்தகம்.
1ம், 2ம், 4ம் அதிகாரங்கள் ஒவ்வொன்றும் 22 வசனங்களை கொண்டன.
இதன் ஒவ்வொரு வரியின் முதல் எழுத்தும் எபிரேய அகரவரிசையின்படி அமைக்கப்பட்டிருக்கும்.
உதாரணமாக….
. அதிகாரம் 5ன் வரிகள் எபிரேய அகரவரிசையின் எழுத்துக்களின் எண்ணிக்கையை மாத்திரமே கொண்டிருக்கின்றன.
இதில் 22 வரிகள் இருந்தாலும் இவை அகரவரிசை சொல்லமைப்பில் எழுதப்படவில்லை.
3ம் அதிகாரம் இன்னும் பிரமாதமாக அமைக்கப்பட்டிருக்கிறது இதில் 66 வரிகள் ஒவ்வொரு 3 வரிகளும் அகர வரிசை சொற்களை கொண்டே ஆரம்பமாகும் வசனங்கள் 1முதல் 3 ஆலெப் என்னும் எபிரேய முதல் எழுத்தைக் கொண்டும் வசனங்கள் 4 முதல் 6 பேத் என்னும் எபிரேய இரண்டாம் எழுத்தைக் கொண்டும்
இது போலவே 66 வசனங்களும் அமைக்கப்பட்டுள்ளன
புலம்பல் – உபாகமம்: ஒரு ஒப்பீடு
அவள் புற ஜாதிகளுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையாள்; (1:3)
அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது, உபா 28:65
அவள் சத்துருக்கள் தலைமையானார்கள், 1:5
அவன் தலைவனாயிருப்பான்; நீ வாலாயிருப்பாய். உமா 28:44
அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள். (1:5)
உன் குமாரரும் உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; உபா 28:32
தொடருகிறவனுக்கு முன்பாகச் சத்துவமில்லாமல் நடந்துபோனார்கள். 1:6
ஏழு வழியாய் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; உபா 28:25
என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள் 1:8
நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய். ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள். உபா 28:41
வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; 2:15
கர்த்தர் உன்னைக் கொண்டுபோய் விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய். உபா 28:37
ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்னவேண்டுமோ? 2:20
தான் தின்னும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே….. உபா 28:53-57