யோபு புத்தகம் ஆய்வு

யோபுடைய சரித்திரம்

– Pastor. Gabriel Thomasraj

“யோபுடைய சரித்திரம்” என்று பெயர் பெற காரணம்

  • எபிரேய மொழியில் யோபு என்றால் “உபத்திரவபடுத்தப்பட்ட ஒருவன”
  • அரபு மொழியில் யோபு என்றால் “மனம் வருந்தின ஒருவன்”
  • இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ள எபிரேய மொழிநடையை கொண்டு பார்க்கும்போது பழைய ஏற்பாட்டுப்புத்தகங்களில் இந்தப்புத்தகமே மிகப்பழைமையானது என்று சில வேதஅறிஞர்கள் கணிக்கிறார்கள்.
  • யோபு முதல் உன்னதப்பாட்டு வரையுள்ள 5 கவிதை புத்தகங்களில் யோபுடைய சரித்திரம் 1வது புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது
  • எபிரேய கவிதைகளில் இந்தப் புத்தகம் மிகச்சிறந்த கவிதை நூலாக கருதப்படுகிறது.
  • யாரால் எழுதப்பட்டது என்பது தெரியவில்லை. யோபுவே தனது அனுபவத்தை பதிவுசெய்திருக்கலாம், அல்லது இன்னாரென்று அறியப்படாத ஒருவர் இதை எழுதியிருக்லாம்.
  •  அதிகாரம் 42
  • வசனங்கள் 1070

யோபுடைய சரித்திரம் – வேதாகம வரலாற்றின் தன்மை

  • இந்தப் புத்தகத்தின் ஆரம்பமும் இறுதியும் வேதாகமத்தின் ஏனைய வரலாற்று புத்தகங்களோடு ஒத்திருக்கிறது (யோபு 1:1ஐயும்,1சாமு1:1, லூக்கா 1:5 ஒப்பிட்டுப் பார்க்கவும்).
  • வேதாகமங்களின் மற்றப் புத்தகங்களில் யோபுவின் பெயர் குறிப்பிடப்படுகிறது.
  • எசேக்கியேல் 14:14,20 (வச 14)அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
  • யாக்கோபு 5:10-11 என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.
  • பவுல் 1கொரி 3:19ல் யோபு 5:13ஐ மேற்கோள்காட்டி அது வேதவசனந்தான் என்று அங்கீகரிக்கிறார்.
  • யோபு 31:33ல் ஆதாமைப்பற்றி குறிப்பிடப்படுவதால் மோசே ஆதியாகமத்தை எழுதுவதற்கு வெகுகாலத்திற்கு முன்னரே ஆதாமும், ஏவாளும் அறியப்பட்டிருந்தார்கள் என்பது புலனாகிறது.

யோபின் புத்தகத்தின் வரலாற்றுப் பின்னணி

வேதஅறிஞர்கள் யோபின் புத்தகத்தின் காலத்தை முற்பிதாக்களின் காலமாகிய கிட்டதட்ட கிமு 2100-1900 காலத்தை சேர்ந்தது என்று கணிக்கிறார்கள்.

அதற்கான காரணங்கள் சில……

  • யோபுவின் செல்வம் அவனது கால்நடைகளைக்கொண்டு அளவிடப்பட்டது (1:3,42:12). ஆனால் ஆபிரகாமின் செல்வம் பொன்னையும், வெள்ளியையும் கொண்டு அளவிடப்பட்டது (அதி 12:16)
  • முற்பிதாக்களைபோல யோபுவும் தேவனுக்கு அவரது தனித்துவமான பெயரான “எல்ஷடாய்” (சர்வ வல்லமையுள்ள தேவன்) என்னும் பெயரை பயன்படுத்துகிறார்.
  • இந்தப் புத்தகத்தில் இஸ்ரவேல். எகிப்திலிருந்து யாத்திரை, மோசேயின் நியாயப்பிரமாணம், ஆசரிப்புகூடாரம் ஆகிய எதுவும் குறிப்பிடப்படவில்லை.
  • ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு போன்றோர் ஆசாரியனில்லாமல் பலிசெலுத்தி யதுபோல யோபும் பலிசெலுத்துகிறார். நியாயப்பிரமாணம் வழக்கத்திற்கு வந்தபின்னர் இவ்வாறு செய்திருக்கமுடியாது (லேவி 4:10, 27:8)
  • யோபு 42:16ல் யோபுவின் துன்பத்தின் நாட்களுக்கு பின் அவர் மேலும் ஆண்டுகள் உயிருடன் இருந்தார் என்று பார்க்கிறோம். அவரது வாழ்க்கைக் காலம் 210 ஆண்டுகளாயிருக்கலாம். இந்த நீண்ட வாழ்க்கைக்காலம் ஆபிராமின் தகப்பனான தேராகு, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியயோரின் நீண்ட வாழ்க்கைக்காலத்திற்கு ஒத்திருககிறது.

யோபின் நண்பர்களின் வரலாற்றுப் பின்னணி

யோபுவை காணவும் அவனுக்கு ஆறுதல் கூறவும் வந்த மூன்று நண்பர்கள்

1.தேமானியனான எலிப்பாஸ் -தேமான் ஏசாவின் பேரன் (ஆதி 36:10,11)

  1. சூகியனான பில்தாத் -சூவா ஆபிரகாமின் குமாரன் (ஆதி 25:2)
  2. நாகமாத்தியனான சோப்பார் நாகமா வடஅரேபியாவில் உள்ளது 4.பூசியனாகிய எலிகூ பூஸ் ஒரு அரபிய கோத்திரம் (ஆதி 22:21)

சம்பவ விபரிப்பின் வடிவங்கள்

இந்த புத்தகத்தின் சம்பவங்களின் விபரிப்பு 4 வெவ்வேறு வடிவங்களில் இருக்கிறது.

  1. முன்னுரை – Prologue
  • 1:1-5 உத்ஸ் தேசத்தில் யோபுவின் அமரிக்கையும். செழிப்பும் 1:6-12- கர்த்தருடைய சந்நிதியில் சாத்தான் யோபுவை குற்றப்படுத்துதல்
  • :13-22 உத்ஸ் தேசத்தில் யோபுவின் பிள்ளைகளும் செல்வமும் அழிதல்

கர்த்தருடைய சந்நிதி: கர்த்தரும் சாத்தானும்

  • 27-10 – கர்த்தருடைய சந்நிதி: கர்த்தரும் சாத்தானும்
  • 2:11-13 – யோபுவை காணவும் அவனுக்கு ஆறுதல் கூறவும் வந்த மூன்று நண்பர்கள்

2.உரையாடல் – Dialogue

  • யோபின் துன்பத்திற்கான மர்மம் இன்னதென்று அறியாததால் அவனது மூன்று நண்பர்களும் அதற்கான மூலகாரணத்தை அவர்களாகவே ஊகிக்கிறார்கள். தேமானியனான எலிப்பாஸ் யோபு அவனது பாவங்களுக்காக தண்டிக்கப் படுகிறான் என்ற கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறான்.
  • குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? (4:7)
  • சூகியனான பில்தாத் என்னும் இரண்டாவது நண்பனும் கிட்டதட்ட இதே போன்ற கருத்துடையவனாகவேயிருக்கிறான். இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறது
  • மில்லை. பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை. (8:20) நாகமாத்தியனான சோப்பாரின் வார்த்தைகளும் இதையே வெளிப்படுத்துகிறது.
  • உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்.அப்பொழுது உம்முடைய முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து, பயப்படாமல் திடன் கொண்டிருப்பீர்….அப்பொழுது உம்முடைய ஆயுசுகாலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமா யிருக்கும் (11:14-15,17)
  1. தனியுரை Monologue
  • அதி 33.37 ; எலிகூ
  • 38:1-42:6 – கர்த்தர்
  1. முடிவுரை – Epilogue
  • 42:7-17 – ஊத்ஸ் தேசத்தில் யோபுவின் ஆசீர்வாதம் இரட்டிப்பாதல்

யோபுடைய சரித்திரத்தின் சுருக்கம்

யோபுவின் வேதனை அதி 1-3

  • யோபுவின் செல்வம் (1:1-5)
  • யோபுவின் துன்பம் (1:6-2:13)
  • யோபுவின் குழப்பம் (அதி 3)

யோபு தனது தரப்பு வாதங்களை எடுத்துரைத்தல் அதி 4-37

*முதலாவது சுற்று (அதி 4-14)

  • 1.எலிப்பாஸ் (அதி 4-5) யோபுவின் பதிலுரை (அதி 6-7) 
  • 2.பில்தாத் (அதி 8) யோபுவின் பதிலுரை (அதி 9-10)
  • 3.சோப்பார் (அதி11) -யோபுவின் பதிலுரை (அதி 12-14)

*இரண்டாவது சுற்று (அதி 15-21)

  • 1.எலிப்பாஸ் (அதி 15) யோபுவின் பதிலுரை (அதி 15-21)
  • 2. பில்தாத் (அதி.18) -யோபுவின் பதிலுரை (அதி 19)
  • 3.சோப்பார் (அதி20) -யோபுவின் பதிலுரை (அதி 21)

* மூன்றாம் சுற்று அதி 22-31)

  • 1.எலிப்பாஸ் (அதி 22) – யோபுவின் பதிலுரை (அதி 23-24)
  • 2.பில்தாத் (அதி 25) யோபுவின் பதிலுரை (அதி 26-31)

*இளைஞனான எலிகூவின் உரை (அதி 22-31)

  • 1.யோபுவின் நண்பர்களின் கருத்தோடு முரண்படுதல் (அதி 32 )
  • 2. யோபுவின் கருத்தோடு முரண்படுதல் (அதி 33)
  • 3.தேவனின் நீதியையும், நன்மையையும், மகத்துவத்தையும் பறைசாற்றுதல் (34-37)

யோபுவின் விடுதலை (அதி 38-42)

*தேவன் யோபுவை தாழ்மைப்படுத்துதல் (38:1-41:34)

  • 1. யோபுவிடம் கேட்ட பதிலளிக்கமுடியாத மாபெரும் கேள்விகள் வாயிலாக (38:1-41:34)
  • 2.யோபு காரியங்களை விளங்கிக்கொள்ளமுடியாத தனது இயலாமையை ஒத்துக்கொண்டதன் வாயிலாக (42:1-6)

*தேவன் யோபுவை கனப்படுத்துதல் (42:7-17)

  • 1.யோபுவை விமர்சித்தவர்களை தேவன் கடிந்துகொள்ளுதல் (42:7-10)
  • 2. யோபுவின் இழப்பை இரட்டிப்பாக தேவன் மீளக்கொடுத்தல் (42-11-17)

வேதனை குறித்த கேள்வி

  • இது வறுமையில் இருந்து செழிப்புக்கான கதையல்ல. மாறாக செழிப்பிலிருந்து வறுமையான உண்மைச் சம்பவம்.
  • -காலம்காலமாக கேட்கப்பட்டுவரும் “நல்லவர்களுக்கு தீமைகள் வருவதேன்?” என்ற கேள்வியை இந்தப் புத்தகம் அலசி ஆராய்கிறது.
  • சாத்தான் தேவனிடத்தில் வைத்த சவாலையும், அதற்கு தேவன் அனுமதித்தையும், நாம் அறிந்திருக்கும் பாக்கியத்தை பெற்றதுபோல யோபு பெறவில்லை. அவனுக்கு அது தெரியப்படுத்தபடவேயில்லை.
  • -காலம்காலமாக நம்பப்பட்டுவரும், “நன்மையும் தீமையும் அவனனவன் செய்யும் வினையின் பயன்'” என்ற கருதுகோளுக்கான நேரடியான சவாலாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
  • a யோபு காம இச்சை கொண்டவனாக இருக்கவில்லை 31:1-4
  • b. யோபு பொய்சொல்லி ஏமாற்றவில்லை 31:5-8
  • c. யோபு விபசாரம் செய்யவில்லை 31:9-12
  • d.யோபு தனது வேலைக்காரர்களுக்கு உதவி செய்யாமல் இருக்கவில்லை 31:13-15
  • e யோபு ஏழைகள், தேவையுள்ளவர்களுக்கு உதவி செய்யாமல் இருக்கவில்லை 31:16-23
  • f.யோபு தனது ஐசுவரியத்தின் மீது நம்பிக்கை வைக்கவில்லை 31:24-25
  • g.யோபு விக்கிரக வழிபாடு செய்யவில்லை 31:26-28
  • h.யோபு தனது எதிரிகளை அநியாயமாய் நடத்தவில்லை 31:29-30
  • i யோபு உலோபியாக இருக்கவில்லை 31:31-32
  • j. யோபு தன் பாவங்களை மறைக்கவில்லை 31:33-34
  • k.யோபு தேவன் தன்னை கேட்ககூடாதென்று விரும்பவில்லை 31:35-37
  • l. யோபு தனது பண்ணையாட்களை வஞ்சிக்கவில்லை 31:38-40
  • யோபுவிற்கு கொடுக்கப்பட்ட பதில்கள் இந்தப் புத்தகத்தின் வாசகனை திருப்தி செய்யலாம் அல்லது செய்யாமல் போகலாம்.
  • வேதனையை தேவன் அனுமதிப்பதற்கு தகுந்த காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை அவர் நமக்கு வெளிப்படுத்தாமலும் போகலாம்.
  • “இப்படித்தான் செயற்படுவார் அல்லது இப்படித்தான் செயற்பட வேண்டும் என்கிற நமது எண்ணத்தின்படி தேவன் செயற்படுகிறவர் அல்ல” என்ற நிதர்சனத்தை யோபு தனது வாழ்வில் அறிந்து கொள்ளவேண்டியிருந்தது.
  • இந்த வாழ்வின் பிரச்சினைக்கான தீர்வையோ, விளக்கத்தையோ யோபுவின் புத்தகம் முன்வைக்கவில்லை.

இது யோபுவின் அனுபவமும், அந்த அனுபவதினால் அவன் சொன்ன பதில்களும்.

  • சூழ்நிலைகளை நாம் புரிந்துகொள்ள முடியாத தருணங்களிலும் தேவனை நம்புவதைக் குறித்து தேவன் கற்றுத்தரும் மேலான பாடம்.
  • தேவனது செய்கையை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற தேவை தேவனுக்கில்லை. அவரது செய்கைக்கான விளக்கத்தை அவர் நமக்கு தரவேண்டிய அவசியமுமில்லை.
  • நமது புரிந்துகொள்ளுதலும், சூழ்நிலைகளும் எப்படியிருப்பினும் நாம் அவர் மீது நம்பிக்கை வைத்து நமது வாழ்க்கையில் அவர் கிரியை நடப்பிக்க விட்டுக்கொடுப்பதே நமக்கான பாடம்.
  • இந்த புத்தகத்தில் 330 கேள்விகள் இடம்பெற்றுள்ளன. (ஆதியாகமத்தில் 160 கேள்விகள்)

வேதனை குறித்த கேள்விக்கான பதில்

  • நமக்குத் துன்பங்கள் வருவது ஏன்? யார் அல்லது எது அதற்குக் காரணம் ? தேவன் இதைக்குறித்து ஒன்றும் செய்யாமலிருப்பது ஏன்?
  • இந்த கேள்விகளுக்கான பதில்கள் தரப்படவில்லை. எனினும் சில முக்கிய கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

1.மனிதாய் இருப்பதினால் இருக்கும் வேதனையின் அனுபவத்தை மனிதனால் விளங்கிக்கொள்ளவோ புரிந்துணரவோ முடியாது.

  • மனிதனது கிரகிக்கும் ஆற்றலினால் அவன் தேவனின் செய்கைகளை விளங்கிக்கொள்ள முடியாது தேவனின் செயல்களை இணைத்துப் பார்த்து மனிதனால் முடிவுக்கு வரமுடியாது. சூழ்நிலைகள் எதுவாயினும் தேவன் மேல் நம்பிக்கையாயிருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
  1. துன்பங்கள் எப்போதும் பாவத்தின் நேரடி விளைவுகள் அல்ல
  • எப்போதும் பாவத்தின் விளைவாகவே துன்பங்கள் வருகின்றன என்பதே யோபுவின் நண்பர்களின் தவறான முடிவு.
  • அப்படியல்ல என்பதே இப் புத்தகத்தின் பாடம்.

3.துன்பங்கள் ஒருவனின் ஆவிக்குரிய நிலைக்கான பாராட்டாகவும் இருக்கலாம்

  • யோபு எப்படிப்பட்டவன் என்று சாத்தானுக்கு நிரூபிக்க தேவன் யோபுவிற்கு துன்பங்களை அனுமதித்தார். யோபுவின் மேல் தேவன் வைத்த நம்பிக்கை எவ்வளவு பெரியது!

யோபுவின் புத்தகத்தை ஜாக்கிரதையாக கையாளுதல்!

  • யோபுவின் மூன்று நண்பர்களின் உரைகள் பல தவறுகளை கொண்டிருக்கிறது.
  • தேவன் ஜனங்கள் துன்பப்பட அனுமதிப்பது ஏன் என்ற அடிப்படையிலேயே சொல்லப்படுகிறது. யோபு ஏதோ தவறை செய்ததினால்தான் இந்த துன்பத்தை அனுபவிக்கிறார் என்பதே அவர்களது மேலோங்கிய கருத்தாக இருந்தது.
  • இதன் விளைவாக யோபு தனது தவறை ஒத்துக்கொண்டு தேவனிடத்தில் மனம்வருந்தினால் அவர் அவனை மீண்டும் ஆசீர்வதிப்பார் என்ற கருத்தை திரும்ப திரும்ப வலியுறுத்துகிறார்கள்.
  • அவர்களின் இந்த ஆலோசனையை கர்த்தர் கடிந்துகொண்டார். கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை.(42:7)
  • – இந்த காரணத்தினாலேதான் யோபுவின் புத்தகத்தின் வசனங்களை தனியாக கையாள்வதில் ஜாக்கிரதை காண்பிக்க வேண்டும்.
  • யோபுவின் புத்தகத்தின் ஒரு தனி வசனத்தை அதிலும் குறிப்பாக எலிப்பாஸ், பில்தாத், சோப்பார் ஆகியோரின் உரைகளிலிருந்து வசனத்தை எடுத்துக்கொண்டு அதிலிருந்து தேவனைக் குறித்த காரியங்களை புரிந்துகொள்ள முயற்சிப்பது புத்தியீனம்.
  • அவ்வாறு செய்கிறபட்சத்தில் அது தேவனைக் குறித்த சரியான விளக்கத்தை தரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

யோபுவின் புத்கத்திலுள்ள சுவாரசியமான அறிவியல் தகவல்கள்

  1. வான்வெளியின் வெற்றிடம்
  • அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். (26:7) முந்திய காலங்களில் பூமியானது ஒரு பெரிய மிருகத்தின் மீதோ அல்லது ஒரு இராட்சசனின் மீதோ வைக்கப்பட்டருப்பதாவோ அல்லது புராண இதிகாசங்களின்படி மோட்சத்தையும், உலகையும் பிரிக்கும் தூண்களை தனது தோள்களில் அட்லஸ் என்னும் கடவுள் தாங்கியிருக்கிறார் என்றும் நம்பினார்கள்.
  1. விரிந்திருக்கும் வானம்
  • அவர் ஒருவரே வானங்களை விரித்து, (9:8)
  • 20ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் ஐயன்ஸ்டைன் உட்பட பல விஞ்ஞானிகள் பிரபஞ்சம் நிலையானது என்று நம்பினார்கள். ஈர்ப்புவிசையினால் அவை அழிந்துபோகும் என்று வேறுசிலர் நினைத்தார்கள்.
  • ஆனால் 1929ல் எட்வின் ஹபிள் என்ற வானவியல் ஆராய்ச்சியாளர் தூரத்திலுள்ள விண்மீன்கூட்டங்கள் பூமியை விட்டு விலகிச்செல்வதையும் எவ்வளவு தூரமாய் விலகிச் செல்கின்றனவோ அவ்வளவு வேகமாகவும் விலகிச்செல்வதை கண்டுபிடித்தார்.
  • இந்த கண்டுபிடிப்பு வானவியல் ஆராய்ச்சியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
  1. பூமியின் சுழற்சி
  • பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல் (38:12,14)
  • காலகாலமாக அறிவியலாளர்கள் பிரபஞ்சத்திற்கு பூமியே மையம் என்ற கோட்பாட்டை நம்பினார்கள்.
  • சூரியன் பூமியை சுற்றி வருவதுதான் பகல், இரவுக்கான காரணம் என்று நம்பினார்கள்.
  • இன்று பூமியின் சுழற்சியே சூரிய உதயமும் அஸ்தமனமும் என்பது நமக்கு தெரியும்.
  • இந்த வசனங்களில் சொல்லப்பட்ட ஒப்புமை என்பது குயவனின் திரிகையில் இருக்கும் களிமண் பாண்டம் போல பூமியின் சுழற்சி இருக்கிறது.
  • யோபுவின் புத்கத்திலுள்ள சுவாரசியமான அறிவியல் தகவல்கள்

4.வீண்மீன்களின் ஈர்ப்பு பண்புகள்

  • அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?(38:31) அறுமீன் நட்சத்திரங்களின் சேர்க்கை ஈர்ப்பு விசையால் இணைக்கப்பட்டிருக்கிறது. மிருகசீரிஷத்தின் நட்சத்திரங்களின் சேர்க்கை ஈர்ப்பு விசை குறைவால் விலகியிருக்கிறது.
  1. கடலின் அடியில் ஊற்றுக்கள்
  • நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ? (38:16) பூமியின் ஆழத்திலிருந்து வெளிப்படும் எரிகுழம்பின் தாக்கத்தால் கடலின் படுகையில் வென்னீர் ஊற்றுகள் உருவாகி அதைச் சுற்றியுள்ள குளிர்ந்த கடல்நீரை சூடாக்குகின்றன.
  • இத்தகைய வென்னீர் ஊற்று ஈக்குவடார் நாட்டின் கடற்பகுதியில் 2.5 கிமீ ஆழத்தில் 1977ல் கண்டுபிடிக்ப்பட்டது.
  1. காற்றிக்கும் எடையுண்டு
  • அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து,(28:25) 1600ம் அண்டிலேதான் அறிவியல் இதை கண்டுபிடித்தது
  1. ஒளிக்கும் வழியுண்டு (38:19,35)
  • வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்துக்கு வழியெங்கே?(38:19)
  • நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்லும்படி செய்வாயோ? (38:35)
  • ஒளி ஒரு பாதையில் செல்லுகிறது (மின்காந்த கதிர்வீச்சு) என்பதும் அதன் வேகம் ஒரு வினாடிக்கு 186000 மைல்கள் என்பதும் 1864ல் கண்டுபிடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *