அகசியா

அகசியா (AHAZIA)

பொருள்: (யாவே பற்றிக் கொண்டார்)

  1. ஆகாப்-ஈசெபேல் ஆகியோருக்குப் பிறந்தவர். 

யூதாவின் அரசன் யோச பாத்து அரியணை ஏறிய 17-ஆம் ஆண்டு. இவர் சமாரியாவின் அரசனாகி இஸ்ரா யேலில் ஈராண்டுகள் ஆட்சி செலுத்தினார் (கி.மு. 854-853; 1 அர 22: 52). இவர் ஆண்டவர் திருமுன் தீயன புரிந்து, தன் தாய் தந்தையர் வழியிலும், இஸ்ராயே லைப் பாவத்திற்கு உள்ளாக்கின நெபாத் தின் மகன் எரொபெயாமின் வழியிலும் நடந்தார். அத்தோடு பாகாலுக்கு ஊழியம் செய்து, அதை வழிபட்டார். இதனால் ஆண்டவருக்குக் கோபம் வருவித்தார் (22:53-54).

இவரது ஆட்சிக் காலத்தில் அண்டை நாடுகளோடு இஸ்ராயேல் உறவு நன்கு அமையவில்லை. ஆகாபு இறந்தபின் மோ வாப்பியர் கிளர்ச்சி செய்தனர். கப்பம் கட்ட மறுத்தனர் (2 அர 1:1; 3:4-5). யோராம் ஆட்சி வரை இந்தக் கிளர்ச்சியை அடக்க ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை (3:5). எசியோன்-கெபேரை மையமாகக் கொண்டு ஒரு கப்பற்படை அமைக்க யோசபாத்து மறுத்துவிட்டார். ஏனெனில் இஸ்ராயேலின் ஆதிக்கம் தனது நாட்டில் ஏற்பட்டுவிடும் என்று அஞ்சினார் (1 அர 22:47-49: 2 5 20:35-37  

அரசர்கள் நூல்படி அகசியா மாடியி லிருந்து விழுந்து நோயுற்றார். ஆனால் ஆண்டவரின் உதவியால் நலம்பெற நாடாமல், பெலிஸ்திய தேவதை பாகால்- செபூபின் உதவியை நாடினார். இதன் விளைவாக, ஆண்டவர் எலியா வழியாக. “அவன் ஆண்டவரின் உதவியை நாடாமை யால் படுக்கையினின்று எழுந்திராமலே சாவான்” என்று அறிவித்தார். இச் செய்தியை அறிவித்தவர் எலியா என்ற றிந்த அரசன் அவரைக் கைது செய்ய இரு முறை வீரர்களை அனுப்பினார். இரு முறையும் வானின்று தீ இறங்கிவந்து அவர்களைச் சுட்டெரித்தது. மூன்றாம் முயற்சி எலியாவை அரசனிடம் கொண்டு வந்தது. ஆனால் இறைவாக்கினர் இறை வனது முன்னறிவிப்பை மாற்றவில்லை. ஆண்டவர் எலியாவின் வாயிலாகக் கூறிய வாக்கின்படியே அகசியா இறந்தார். அவருக்குச் சந்ததியில்லாததால் அவரது சகோதரன் யோராம் அரியணை ஏறினார். (2 அர 1:2-17).

  1. இவர் யூதாவின் அரசன்.

ஆகாபு- ஈசெபேல் ஆகியோருடைய மகளான அத்தாலியாவுக்கும், யூதாவின் யோராம் என்ற அரசனுக்கும் பிறந்த கடைசி மகன் (2 அர 8:24-26: 2 நாள் 22:1). அவருடைய மூத்த சகோதரர்களை அராபிய கூட்டத் தினர் கொன்றுவிட்டதால் (2 நாள் 22:1) அவர் தந்தைக்குப்பின் அரியணை ஏறி னார். இவர் 2 நாள் 21:17-இல் யேவாக் காசு என்றும், 22:6-இல் அசரியா என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தனது 22-ஆம் வயதில் அரசனானார். இவரது ஆட்சி ஓர் ஆண்டே நீடித்தது (842). இவரையும், முன் கூறிய இவர் மாமன் அகசியாவோடு குழப்பிவிடக்கூடாது (காண்க: அகசியா-1).

இவரும் வட அரசின் அரசனும் இவரு டைய மாமனுமான யோராமும் சேர்ந்து சீரியா அரசன் கசாயேலுக்கு எதிராக இராமோத்-கிலயாத்தில் போரிட்டனர் (2 அர 8:28; 2 நாள் 22:5). யோராம் போரில் காயம்பட்டு சிகிச்சை பெற இஸ்ராயேலுக் குத்திரும்பினார். யோராமைப் பார்த்து வரும் பொருட்டு அகசியா அங்குச் சென்றார் (8:29). அப்போது இறைவனால் பழிவாங்க நியமிக்கப்பட்ட ஏகூவால், அம்பு எய்யப்பட்டு யோராம் அவரது தேரிலேயே மடிந்ததை அகசியா கண்டார் (921-26), அகசியா பேத்தாகான் திசையில் தப்பியோடினார். ஏகூ அவரைத் துரத்திச் சென்று இபுலயாம் அருகிலுள்ள கூருக்குப் போகும் வழியில் அம்பு எய்து காயப்படுத் தினார். ஆனால் அகசியா மெகிதோ வுக்குத் தப்பியோடி அங்கு இறந்தார். அவருடைய ஊழியர்கள் அவரை எருசலே முக்குக் கொண்டுச்சென்று அவரது முன் னோரோடு அடக்கம் செய்தனர். (9:27-28).

நாளாகம ஆசிரியர் உரைப்படி அகசி யாவின் மரணம் வேறுவிதமாக விவரிக்கப் படுகிறது. 2 நாள் 22.7-9-இன்படி ஏகூ விடம் தப்பியோடியபோது பெற்ற காயத் தால் மரிக்கவில்லை. மாறாக மெகிதோ வில் கொல்லப்பட்டார்.

அரசர்கள் நூலும் நாளாகம நூலும், ஆகாபுவின் சமயப் பழக்கவழக்கங்களை அகசியா பின்பற்றினார் என்று கூறுகின் றன (2 அர 8:27: 2 நாள் 22:3). நாளாகம ஆசிரியரின் கருத்துப்படி அவருடைய தாய் அத்தாலியாதான் இந்தப் பதிதத்தை உற்சாகப்படுத்தினாள். இவர் யோராமின் பால் காட்டிய அக்கறையின் விளைவாக இவரது மரணம் இறைவனால் முன் திட்டம் செய்யப்பட்டதாகும் என்று ஆசிரி யர் சுட்டுகிறார் (2 நாள் 22:67: 2 அர 9:21)

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page