அகசுவேரு (AHASUERUS)
பொருள்: இளவரசன்
- இவர் முதலாம் செர்சீஸ் என்ற பார சீக மன்னர் (கி.மு.485-465)
இந்தியா முதல் எத்தியோப்பியாவரை இருந்த நூற்று இருபத்தேழு மாநிலங்களையும் மன்னன் அகசுவேரு ஆட்சி செய்தான். அவன் அரியணை ஏறியபொழுது சூசா தலைநகரமாயிருந்தது” (எஸ்த 1:1-2). “கட லிலுள்ள எல்லா தீவுகளிலும் வாழ்ந்து வந்த மக்களையும் தனக்குக் கப்பம் கட்டச் செய்தான்” (எஸ்த 10:1). எஸ்தர் இவரு டைய மனைவி. பெரிய தாரியுவின் மகனான அகசுவேரு, சைரசு (எஸ் 4:5). அர்த்த சேர்சீஸ் (எஸ் 4:7) ஆகிய மன்னர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்தார் என்று எஸ் 4:6 கால வரையின்படி கொடுத்துள்ளது. எழுபது நூல் இவரை அர்த்தா சேர்சீஸ் என்ற ழைக்கிறது.
தோபித் 14:15-இன்படி நெபுக்கதுனே சார். அகசுவேரு ஆகியவர்கள் நினிவே நகரை அழித்தனர். இது காலமயக்க மான கூற்றாகும். உண்மையில் மேதிய இனத்தவனாகிய சியாசாரெசும் நபோ பொலாசரும் சேர்ந்து நினிவேயை கி.மு. 612-இல் கைப்பற்றினர்.”
- மேதிய இனத்தவராகிய தாரியுவின் தந்தை (தானி 9:1).
யோசிபஸ் இவரை முதலாம் அசித்தியாகுவின் மகன் என்று குறிப்பிடுகிறார். இது பொருத்தமுடைய தாகத் தெரியவில்லை.