அகந்தை

அகந்தை, ஆணவம், செருக்கு

(ARROGANCE)

1 . அகந்தையும் அதன் விளைவுகளும்:-

அகந்தை கடவுளாலும், அருவருக்கப்படத்தக்கதாய் மனிதராலும் இருக்கிறது (சீரா 10:7). அகந்தை பல வகைகளில் வெளிப்படுகிறது. சாதாரண மனிதன் உயர்ந்த மதிப்பை எதிர்பார்க்கிறான் (லூக் 14: 7: மத் 23:6 தொ). தன்னைத்தானே உயர்ந்தவன் என எண்ணுகிறான் (உரோ 16:3). அடுத்தவரைப் பார்த்துப் பொறா மைப்படுகிறான் (கலா 5:26) இறுமாப் புள்ள பார்வை கொண்டுள்ளான் (பழ 6:17). செருக்குடைய பணக்காரன் தன் செல்வச் செருக்கை வெளிக்காட்டுகிறான் (ஆமோ 6:8); மக்கள் பார்க்கவேண்டும் என்பதற் காகத் தன் செயல்களைச் செய்யும் வெளி வேடக்காரன் (மத் 23:5, 25-28). மேலும், இறுமாப்புக்கொண்ட மனிதன் இறை வனைச் சார்ந்து வாழ மறந்து, இறைவ னுக்கு இணையாக தன்னை நினைத்துக் கொள்கிறான் (ஆதி 3:5; பிலி 2:6; யோவா 5:18). அவன் இதயம் கண்டனங்களுக்கு ( அமையாதது (பழ 15:12), தாழ்ச்சி அவனுக் குப்பிடிக்காது (சீரா 13:20). தயக்கமின்றி பாவம் செய்கிறான் (எண் 15:30 தொ). ஆண்டவரது ஊழியரைப் பார்த்தும், அவரது வாக்குறுதிகளைக் குறித்தும் ஏளனம் செய்கிறான் (சங் 119:5: 2 பேதுரு 3:3 தொ). ஆண்டவர் செருக்குற்றோரைச் சபித்து அவர்களைப் பயத்திலே வாழச் செய்கிறார் (சங் 119:21; லூக் 16:15). அகந் தையால் ஆக்கிரமிக்கப்பட்டோர் (மாற் 7:22) அருளையும் (1 பேதுரு 5:5) விசுவாசத்தை யும் பெறார் (யோவா 5:44), தனது தவறி னால் கட்டுண்டவன் (மத் 23:24; யோவா 9:39தொ) ஞானத்தைக் கண்டுபிடியான் (பழ 14:6). அவனோடு சேர்பவர் அவனைப் போல் ஆவர் (சீரா 13:1); எனவே அவனை விட்டு விலகுவது நலம் (சங் 1:17)

  1. இஸ்ராயேலரைத் துன்புறுத்தும் புற வினத்தாரின் ஆணவம் 

உண்மைக் கடவுளை அறியாத ஆணவக்காரன் அர சாளும்போது வலுவிழந்தோர் ஊழியம் செய்யவேண்டிய நிலை ஏற்படுகின்றது. இஸ்ராயேல் விடுதலை பெறுவதை பார வோன் தனது ஆணவத்தால் தடுக்கிறார் (யாத் 5:2). இத்தகைய ஆணவக்காரர்கள் இஸ்ராயேலரை அடிமைப் படுத்தப்போவ தாக அச்சுறுத்துவார்கள். கோலியாத்து முதல் அந்தியோக்கு வரை (1 சாமு 17:4: 2 மக் 9: 4-10) பலரும் அகந்தை கொண்டு அலைந்தது கண்கூடு. அகங்காரத்தின் உச்சியிலே நின்றது பாபிலோனிய அரசு. நாடுகளிலே சிறந்த நாடு: எல்லாக் காலமும் நிலைபெறும் நாடு (ஏச 13:19); தானே தனிப்பெரும் நாடு எனப் பெரு மிதம் கொண்ட நாடு இது (ஏச 47:5-10). இந்த மக்களின் கூட்டு ஆணவச் சின்ன மாக பாபேல் கோபுரம் முற்றுப் பெறாமல் நின்று. விண்ணை அடையவேண்டும் என்ற அவர்தம் அகந்தையை எடுத்துக் காட்டுகிறது (ஆதி 11:4).

  1. இறைவனை ஏற்காது ஏழைகளைத் துன்புறுத்துபவர்களின் ஆணவம்:- 

இஸ்ரா யேலரிடையே அகந்தை ஆண்டவனை மறக்கச் செய்தது: அடுத்தவனை ஒடுக்கச் செய்தது. வலுவிழந்தோர்க்கு அன்பு காட்ட வேண்டும் என்று சட்டம் கூறியது யாத் 22:21-27). அரசன் ஆணவத்தால் அளவுக்கு அதிகமான பொன், வெள்ளி யைச் சேர்க்கவோ, அடுத்தவனை விட உயரவோ முயலக்கூடாது (உப 17:17.20). தான் செல்வந்தனாக ஆணவக்காரன் ஏழைகளை வாட்டி வதைக்கிறான் (ஆமோ 8:4-8; எரே 22:13 தொ). ஆனால் ஏழைகளை அவமதிப்பது இறைவனையும் அவரது நீதியையும் அவமதிப்பதாகும். ஆணவக்காரர்கள் இறை பற்றற்றவர்கள்: புறவினத்தவர் போன்றவர்கள். அவர்க ளால் துன்புறுத்தப்பட்டோர் (சங் 10:2 தொ: 123:4) ஆண்டவனை நோக்கிக் கூக்குரலிடு கின்றனர் (சங் 73:6-9). அகந்தையும் பண ஆசையும் கொண்டவர் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய இயலாது (லூக் 16:13 தொ)

  1. ஆணவக்காரனுக்குரிய தண்டனை:- 

ஆண்டவரை விட்டு விலக நினைக்கும் ஆணவக்காரனை அவர் ஏளனம் செய் கிறார் (பழ 3:34; சங் 2: 2 தொ). மக்களினங் களை இரக்கமின்றித் துன்புறுத்தி ஆண வத்தோடு வாழ்ந்தவன் இறந்தபின் அரு வருப்பான அழுகல்போல் கல்லறைக்குப் புறம்பே விடப்படுவான் (ஏச 14:3-20: எச. 28:17 தொ. 31). கொடுங்கோலர்களைப் போல் அவர்தம் அரசுகளும் அழிக்கப் படும். சில சமயங்களில், இவ்வரசர்கள் இஸ்ராயேலரை தூய்மைப்படுத்தும் இறை வனின் கருவிகளாகவும் செயல்படுகிறார் கள். ஆனால் அவர்கள் அகந்தையுடன் தங்கள் வேலையைச் செய்தபோது இறைவன் அவர்களைத் தண்டித்தார் (ஏச 10:12:47:9.11). ஆண்டவரின் நாளிலே ஆணவமிக்க இஸ்ராயேலரும் தண்டிக்கப் படுவர் (எரே 9:3; எச 7:10). அந்த நாளிலே மனிதனின் அகந்தையெல்லாம் அடங்கும்; மனிதர்களின் இறுமாப்பு தாழ்த்தப்படும்; ஆண்டவர் ஒருவரே அந்நாளில் உயர்த்தப் படுவார்” (ஏச 2:6-22). -செருக்குற்று நடப்பவர்களுக்கு அவர் நிறைவான தண்டனை அளிக்கிறார்” (சங் 31:24). நீதி மான் களைப் பழித்தவர் புகைபோல் மறைவர் (ஞான 5:8-14). தன்னைத் தானே உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான் (மத் 23:12).

  1. ஆணவத்தை அடக்குபவர். தாழ்ச்சி யுடையோரின் மீட்பர்:- 

எப்படி ஆண்டவர் “நெஞ்சிலே செருக் குற்றவர்களைச் சிதற டிக்கிறார்” (லூக் 1:51), மனிதனை அகந் தைகொள்ள ஏமாற்றிய பழம்பாம்பும் (ஆதி 3:5) தன்னைக் கடவுளாகத் தொழும் படி உலக முழுவதையும் வசியம் செய்ய விரும்பும் பேயுமான (திருவெளி 12:9: 13:5; 2 கொரி 4:4) சாத்தானை எவ்வாறு ஆண்டவர் வெற்றி கொள்கிறார்?

ஒரு தாழ்ச்சியுள்ள கன்னியும், அவளது குழந்தையும் வழியாக இதை ஆற்றலோடு செயலாற்றுகிறார். மாட் டடைக் குடிலிலே மரியாளின் மடியிலேப் பிறந்த இயேசு பாலன் (லூக் 2:1 தொ) நெஞ்சிலே செருக் குற்றோரைச் சிதற டித்தார். அவரை ஏரோதின் அகந்தை கொல்லத் திட்டம் தீட்டியது (மத் 2:13). ஆணவமிக்க சாத்தானை வென்றார். அவர் பணியிலே தமது சாத்தான் அளித்த இவ்வுலகப் பெருமையை நிராக ரிக்கிறார் (மத் 4:3-10). இறைவனுக்குச் சமமானவர் என்றாலும் (யோவா 5:18). அதனால் ஆதாயம் தேடவில்லை (8:50). தமக்கு பெருமை சேர்க்க அவர் விரும்ப வில்லை. கேவலமான சிலுவை மரணத் தையும் ஏற்றார் (12:31 தொ; பிலி 2:6 தொ). தந்தை தம்மை மகிமைப்படுத்தும்படிக் கேட்பதுவும், தந்தை அவரில் மகிமைப் படுத்தப்படுவதற்காகவே (யோவா 12:28: 17:1). அவர் காட்டிய வழியிலே அவரது சீடர்கள், குறிப்பாக அவரது திருச்சபை யின் ஆயர்கள் நடக்க வேண்டும் (லூக் 22:26 தொ; 1 பேதுரு 5:3; தீத் 1:7). அவர் பெய ராலே சீடர்கள் சாத்தானின் ஆதிக்கத்தை வெல்வார்கள் (லூக் 10:18 தொ). ஆணவத் தின் வல்லமை ஆண்டவரின் மாட்சி வெளிப்படும் நாளன்றுதான் அழிக்கப் படும் (2 தெச 1:7 தொ). அப்போது ஆண்ட வரோடு தங்களைச் சமமாகக் கருதிய இறைபற்றற்றவர்கள் ஆண்டவரின் ஆவி யாலே அழிக்கப்படுவர் (2 தெச 2:4.8). அப் போது கடவுளாக்கப்பட்ட அரசின் அடை யாளமான பாபிலோன் ஒரே அடியில் அழிக்கப்படும் (திருவெளி 18:10.21). தாழ்ச்சியுடையோர் மட்டும் ஆண்டவரின் பிள்ளைகளாக இருப்பர் (மத் 18:3 தொ; 1 யோவா 3:2)

 

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page