அகபு (AGABUS)
பொருள்: (வெட்டுக்கிளி)
தூய ஆவியால் பேசும் வரம் பெற்ற, யூதேயாவிலிருந்து வந்த ஒரு கிறிஸ்தவ இறைவாக்கினார். இவர் மற்ற இறை வாக்கினருடன் எருசெலேமிலிருந்து அந்தியோக்கியாவிற்குச் சென்று, உலகம் முழுவதும் (அநேகமாக உரோமைப் பேரரசு முழுவதும் அல்லது) யூதேயாவில், பஞ்சம் நிலவும் என்று முன்னுரைத்தார். (அ.ப. 11:27-30). பேரரசர் கிளதியு ஆட்சிக் காலத்தில் (46-47 கி.பி.) யூதேயா முழுவ தும் பஞ்சம் நிலவியது. இவரது வார்த் தையை நம்பி அந்தியோக்கியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் காணிக்கை எடுத்து எருச லேமிலுள்ள ஏழைக் கிறிஸ்துவர்களுக்குப் பொருளுதவி அனுப்பினர் (11:30), அ.ப. 21:10-11-இல் பவுலின். மூன்றாம் பயண முடிவில் அவர் எருசலேமிலுள்ள யூதர் களால் பிடிக்கப்பட்டு புறவினத்தாருக்குக் கையளிக்கப்படுவார் என்பதை அகபு ஓர் அடையாளச் செய்கையின் மூலம் முன்னு ரைக்கின்றார்; ஆனால் இந்த இறைவாக்கு அப்படியே நிறைவு பெறவில்லை. இவரை ஒரு வேத சாட்சி எனக் கருதி, கிரேக்கத் திருச்சபை இவருடைய திருவிழாவை மார்ச் மாதம் 8-ஆம் நாள் கொண்டாடு கின்றது.