அகவா (AHAVA)
அசுவா என்ற பெயருடைய ஓர் ஆற்றின் கரையில் அமைந்திருந்த ஒரு பாபிலோனிய நகரம் (எஸ் 8:15. 21.31). இங்குதான் தன்னோடு எருசலேமுக்கு திரும்பிவர இருந்த யூதர்களை எஸ்ரா ஒன்று கூட்டினார். இங்கு இவர்கள் மூன்று நாள் தங்கி (8:15) ஆண்டவர் திரு முன் தங்களையே தாழ்த்தி, நல்ல முறை யில் எருசலேம் போய் சேரவேண்டி. நோன்பு இருந்தனர் (8:21). இந்த மன்றாட்டு கேட்கப்பட்டது. யாவரும் எந்தக் கேடுமின்றி எருசலேம் போய்ச் சேர்ந்தனர் (8:31-32).
அகவா ஆறு பாபிலோனியாவின் முக்கிய ஓடைகளில் ஒன்றாக இருக்க லாம். இது வடிகாலாகவும், நீர்ப்பாசனத் திற்கும் பயன்பட்டிருக்கலாம். இது நாடு கடத்தப்பட்ட யூதர்கள் பலர் வாழ்ந்த தலை நகருக்கு அருகில் இருந்திருக்கலாம்.
அகலமான மதில், பெரிய மதில்
நெகமியாவால் பழுது பார்க்கப்பட்ட எருசலேம் மதிற் சுவரின் ஒரு பகுதி. சூழ் நிலையிலிருந்து இது நகரின் வடமேற்கு சுவராக இருக்கலாம் எனத் தோன்று கிறது (நெக 3:8:12:38).