பிரசங்க குறிப்புகள் 631-645
631. பரிசுத்த வேதாகமத்தில் குற்றநிவாரண பலியின் பிரமாணத்தைப்பற்றி
- சர்வாங்க தகனப- கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரண ப-யும் வெண்கல பலிபீடத்தின் வலதுபுறத்தில் கொல்லப்பட வேண்டும். (லேவி 7:2; லேவி 1:11).
- ஆசாரியன் இரத்தத்தைப் ப-பீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்க வேண்டும். (லேவி 7:2).
- அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தி-ருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக்கல்லீர-ன்மேல் இருக்கிற ஜவ்வையும் ஆசாரியன் ப-பீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனப-யாகத் தகனிக்கவேண்டும். (லேவி 7:3-5).
- ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும்; (லேவி 7:6).
- பாவநிவாரணப- எப்படியோ குற்றநிவாரணப-யும் அப்படியே ஆசாரியனுடைய பங்கு ஆசாரியனைச் சேரும் (லேவி 7:7).
- ஒருவனுடைய சர்வாங்க தகனப-யைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனப-யின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும். அடுப்பிலே பாகம்பபண்ணப்பட்டதும், சட்டியிலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான போஜன ப-யாவும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாயிருக்கும். எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனப-யும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும். (லேவி 7:8லி-10).
632. பரிசுத்த வேதாகமத்தில் ஆண்மக்களுக்கும் பெண்மக்களுக்கும் இடையே ஒரு சில வேறுபாடுகள் உள்ளன. அவற்றின் விவரம்
- ஆண்பிள்ளைகளுடைய மாம்சத்தில் உடன்படிக்கையின் அடையாளம் இருக்கிறது. (லேவி 12:3; யாத் 12:44-48).
- ஆண்பிள்ளைகள் ஊழியம் செய்வதற்காகத் தேவனுக்குரியவர்கள். (யாத் 13:12,15).
- வருஷத்தில் மூன்றுதரம் ஆண்மக்கள் யாவரும் தேவனுடைய பிரசன்னத்தில் வந்து நிற்க வேண்டும். (யாத் 23:17; உபா 16:16).
- ஆரோனின் ஆண் புத்திரர் பலிகளில் ஒரு பாகத்தைப் புசிக்க வேண்டும். (லேவி 6:18,29; லேவி 7:6; எண் 18:10).
சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த உரிமை ஆதாமின் காலத்திற்குப் போவதாக அவர்கள் நம்பினார்கள். முதலாவது பலிகளின் தோல்களை ஆதாம் உடைகளாகத் தரித்துக் கொண்டார் (ஆதி 3:21).
633. பரிசுத்த வேதாகமத்தில் சமாதானபலிகளின் பிரமாணத்தைப்பற்றி
- அவன் ஸ்தோத்திர ப-யோடுங்கூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்-ய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன். (லேவி 7:11-12).
- அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதான ப-யாகிய ஸ்தோத்திரப-யோடுகூட படைக்க வேண்டும். (லேவி 7:13).
- அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் ப-யாகச் செலுத்துவானாக; அது சமாதான ப-யின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும். (லேவி 7:14).
- சமாதானப-யாகிய ஸ்தோத்திரப-யின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத் தினமே புசிக்கப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது (லேவி 7:15).
- அவன் செலுத்தும் ப- பொருத்தனையாயாவது உற்சாகப-யாயாவது இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியானது மறு நாளிலும் புசிக்கப்படலாம். ப-யின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது. (லேவி 7:16-17).
- சமாதானப-யின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் புசிக்கப்படுமானால், அது அங்கிகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது ப-க்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைப் புசிக்கிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான். (லேவி 7:18) சமாதான பலியின் மாம்சம் பரிசுத்தமானது. அது பாழாய்போகக்கூடாது. இந்த மாம்சம் பாழாய்ப்போனால், அது தேவனுக்கு எதிராகச் செய்யப்பட்ட குற்றமாகக் கருதப்படும். ஏனெனில் இந்த மாம்சம் தேவனுக்குப் பிரதிஷ்டை பண்ணப்பட்டது. சமாதானபலியின் மாம்சம் அழுகிப் போகக்கூடாது. கிறிஸ்துவின் சரீரம் அழிவைக் காண்பதில்லை என்பதற்கு இது அடையாளமாகும். (சங் 16:10; அப் 2:27-30).
- தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது. (லேவி 7:19).
- மற்ற மாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம்.
- ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானப-யின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டு போவான். (லேவி 7:20).
- மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானப-யின் மாம்சத்திலே புசித்தால், அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். (லேவி 7:21).
634. பரிசுத்த வேதாகமத்தில் கொழுப்பு, இரத்தம் ஆகியவற்றை புசிப்பது சம்பந்தமான கட்டளைகள்
- மாடு ஆடு வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது. (லேவி 7:23).
- தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், பீறுண்ட மிருகத்தின் கொழுப்பையும் புசிக்கலாகாது. (லேவி 7:24).
- கர்த்தருக்குத் தகனப-யாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கலாகாது. (லேவி 7:25).
- உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது (லேவி 7:26).
இங்கு முதன்முறையாகக் கொழுப்பைப் புசிப்பதற்கு விரோதமான பிரமாணம் கூறப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பே இரத்தம் புசிப்பது தடைபண்ணப்பட்டிருக்கிறது. (ஆதி 9:4). இந்தக் கட்டளை மோசேயின் பிரமாணத்தில் ஒரு பகுதியாயிற்று (லேவி 1:17; லேவி 7:26-27; லேவி 17:10,12,14). இந்தப் பிரமாணத்தை மீறுகிறவன் அறுப்புண்டு போவான் (லேவி 7:25-27). புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் இரத்தம் புசிப்பது தடைபண்ணப்பட்டிருக்கிறது (அப் 15:19-20,29). கொழுப்பைப் பற்றி புதிய ஏற்பாட்டில் ஒன்றும் கூறப்படவில்லை.
635. சமாதானபலிகளில் ஆசாரியரின் பாகத்தைப்பற்றிய கட்டளைகள்
- கர்த்தருக்குச் சமாதானப- செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானப-யை ஆசாரியருக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டு வருவானாக. (லேவி 7:29=லேவி 7:14).
- கர்த்தருக்குத் தகனப-யாகப் படைப்பவைகளை அவன் கைகளே கொண்டுவரவேண்டும். கொழுப்பு தகனிப்பதற்கும், மார்க்கண்டம் ஆசாரியருக்கும் உரியது (லேவி 7:30-31).
- ஆரோனுடைய குமாரரில், சமாதானப-யின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும். (லேவி 7:32-33).
- இஸ்ரவேல் புத்திரரின் சமாதானப-களில் அசைவாட்டும் மார்க்கண்டமும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையும் எப்போதும் ஆசாரியருக்குச் சேரும். (லேவி 7:34).
636. ஆசரிப்புக்கூடார வாசலில் நடைபெற்ற பல நிகழ்ச்சிகளைப்பற்றி
- ஆரோனும், அவனுடைய குமாரரும் இங்கு பிரதிஷ்டை பண்ணப்பட்டார்கள். (யாத் 29:1-37).
- இஸ்ரவேல் புத்திரர் பாவம்செய்த பின்பு, யெகோவா தேவன் அவர்களை இங்கு சந்தித்தார். (யாத் 33:9-10).
- தொட்டிக்குக் காணிக்கைகள் இங்கு செலுத்தப்பட்டன. (யாத் 33:8).
- இஸ்ரவேலின் எல்லா மிருகஜீவ பலிகளும் இங்குக் கொண்டுவரப்பட்டுக் கொல்லப்பட்டன. (லேவி 1:3; லேவி 3:2; லேவி 4:4; லேவி 12:6; லேவி 17:4-9; லேவி 19:21-22; எண் 6:13-18).
- வருஷாந்திர சுத்திகரிப்பின் நாளில் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் இங்கு கூடிவந்தார்கள். (லேவி 16).
- நசரேய பொருத்தனைகள் இந்த வாசலில் நிறைவேறின. (எண் 6).
- இஸ்ரவேல் புத்திரரின் சபையார் ஆசரிப்புக்கூடார வாசலில் வழக்கமாகக் கூடிவந்தார்கள். (எண் 10:3).
- இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பதற்காகத் தேவன் இங்கு இறங்கி வந்தார். (எண் 12:5).
- தேவனுக்கு எதிராகக் கலகம் பண்ணியவர்கள் இங்கு ஒடுக்கப் பட்டார்கள். (எண் 16:18-19; எண் 20:6; எண் 25:6).
- இஸ்ரவேலில் வாதை முடிவுக்கு வந்தபோது, மோசே கூடாரவாசலில் இருந்தார். (எண் 16:45-50).
- இஸ்ரவேலின் நியாயத்தீர்ப்பு இந்த வாசலில் நடைபெற்றது. (லேவி 27:2).
- தேவன் மோசேயைக் கடைசி முறையாக இங்கு சந்தித்தார். (மோசேயின் மரணத்திற்குச் சற்று முன்பாக) (உபா 31:15).
637. ஆசாரியரை பிரதிஷ்டைபண்ணுவதற்கு மோசே செய்த காரியங்களைப்பற்றி
- இஸ்ரவேல் எல்லோரையும் மோசே கூடிவரச்செய்கிறார் (லேவி 8:3-5).
- மோசே இஸ்ரவேலரிடம் பேசுகிறார் (லேவி 8:5).
- மோசே ஆரோனையும், அவருடைய குமாரரையும் வரவழைக்கிறார் (லேவி 8:6).
- மோசே அவர்களை ஜலத்தினால் ஸ்நானம் பண்ணுவிக்கிறார்.
- மோசே ஆரோனுக்கு உள்ளங்கியைப் போடுகிறார் (லேவி 8:7).
- மோசே ஆரோனுக்கு இடைக்கச்சையைக் கட்டுகிறார்.
- மோசே ஆரோனுக்கு மேலங்கியை உடுத்துகிறார்.
- மோசே ஆரோனுக்கு ஏபோத்தைத் தரிக்கிறார்.
- மோசே ஆரோனுக்கு மார்ப்பதக்கத்தை அணிவிக்கிறார் (லேவி 8:8).
- மோசே மார்ப்பதக்கத்திலே ஊரீம், தும்மீம் என்பவைகளை வைக்கிறார்.
- மோசே ஆரோனின் தலையில் பாகையைத் தரிக்கிறார் (லேவி 8:9).
- மோசே பாகையின்மேல் ஆரோனின் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டுகிறார்.
- மோசே, அபிஷேகதைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்துகிறார் (லேவி 8:10).
- மோசே அதில் கொஞ்சம் எடுத்து, ப-பீடத்தின்மேல் ஏழுதரம் தெளிக்கிறார் (லேவி 8:11).
- மோசே ப-பீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், பரிசுத்தப்படுத்தும் படிக்கு அபிஷேகம் பண்ணுகிறார்.
- மோசே தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தப்படுத்தும்படிக்கு அபிஷேகம் பண்ணுகிறார்.
- மோசே அபிஷேகதைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவரைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம் பண்ணுகிறார் (லேவி 8:12).
- மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்ட படியே, ஆரோனின் குமாரரை வரவழைக்கிறார்.
- மோசே அவர்களுக்கு அங்கிகளை உடுத்துகிறார் (லேவி 8:13).
- மோசே அவர்களுக்கு இடைக் கச்சைகளைக் கட்டுகிறார்.
- மோசே அவர்களுக்குக் குல்லாக்களைத் தரிக்கிறார்.
- ஆரோனுக்கும், அவருடைய குமாரருக்கும் பாவநிவாரண ப-க்கான காளையை மோசே கொண்டுவருகிறார் (லேவி 8:14).
- மோசே காளையை அடிக்கிறார் (லேவி 8:15).
- மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன் விர-னால் ப-பீடத்தின் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசுகிறார்.
- மோசே மற்ற இரத்தத்தைப் ப-பீடத்தின் அடியில் ஊற்றிவிடுகிறார்.
- கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே, குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீர-ன்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, ப-பீடத்தின் மேல் தகனிக்கிறார் (லேவி 8:16).
- மோசே காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரிக்கிறார் (லேவி 8:17).
- ஆரோனுக்கும், அவருடைய குமாரருக்கும் சர்வாங்க தகனப-க்கு மோசே ஆட்டுக்கடாவைக் கொண்டு வருகிறார். (லேவி 8:18).
- மோசே ஆட்டுக்கடாவைக் கொல்லுகிறார் (லேவி 8:19).
- மோசே அதின் இரத்தத்தைப் ப-பீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கிறார்.
- மோசே ஆட்டுக்கடாவைச் சந்து சந்தாகத் துண்டிக்கிறார் (லேவி 8:20).
- மோசே அதின் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் தகனிக்கிறார்.
- மோசே குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவுகிறார் (லேவி 8:21).
- மோசே ஆட்டுக்கடா முழுவதையும் ப-பீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான சர்வாங்க தகனப-யாகத் தகனிக்கிறார்.
- மோசே ஆரோனையும், அவருடைய குமாரரையும் பிரதிஷ்டைப் படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டு வருகிறார் (லேவி 8:22).
- மோசே அந்த ஆட்டுக்கடாவைக் கொல்லுகிறார் (லேவி 8:23).
- மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மட-லும் வலதுகையின் பெருவிர-லும் வலதுகா-ன் பெருவிர-லும் பூசுகிறார்.
- மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் ஆரோனின் குமாரருடைய வலதுகாதின் மட-லும் வலதுகையின் பெருவிர-லும் வலதுகா-ன் பெருவிர-லும் பூசுகிறார் (லேவி 8:24).
- மோசே இரத்தத்தைப் ப-பீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கிறார்.
- மோசே ஆட்டுக்கடாவின் ஒருசில பகுதிகளை எடுத்து, அதோடு போஜனபலியையும் எடுத்து, அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் ஆரோனின் குமாரருடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும் ப-யாகக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டுகிறார் (லேவி 8:25-27).
- மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளி-ருந்து எடுத்து, ப-பீடத்தின்மே-ருக்கிற தகனப-யின்மேல் தகனிக்கிறார் (லேவி 8:28).
- மோசே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் ப-யாக அசைவாட்டுகிறார். இது மோசேயின் பங்கு. (லேவி 8:29).
- மோசே அபிஷேகதைலத்திலும், ப-பீடத்தின்மே-ருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவர் வஸ்திரங்கள்மேலும், அவர் குமாரர்மேலும் அவர்கள் வஸ்திரங்கள் மேலும் தெளித்து, அவர்களையும், அவர்கள் வஸ்திரங்களையும் பரிசுத்தப் படுத்துகிறார் (லேவி 8:30).
- மோசே ஆரோனையும் அவருடைய குமாரரையும் நோக்கி, அந்த மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாச-லே வேவிக்க வேண்டுமென்று கூறுகிறார். (லேவி 8:31) அந்த மாம்சத்தைப் போஜன பலியோடு அவர்கள் புசிக்க வேண்டும். மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை அக்கினியிலே சுட்டெரிக்க வேண்டும். (லேவி 8:32) பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாள் ஆசரிப்புக்கூடாரவாசலை விட்டு அவர்கள் புறப்படக்கூடாது. (லேவி 8:33-36)
638. ஆசாரியர் பிரதிஷ்டைபண்ணப்படும் விதம்பற்றி
- மோசே அவர்களைக் கர்த்தரிடத்தில் அழைத்து வருகிறார் (லேவி 8:1-5).
- மோசே அவர்களை ஜலத்தினால் ஸ்நானம் பண்ணுவிக்கிறார் (லேவி 8:6).
- மோசே அவர்களுக்கு வஸ்திரங்களை அணிவிக்கிறார் (லேவி 8:7-9,13).
- மோசே அவர்களை அபிஷேகம் பண்ணுகிறார் (லேவி 8:10-12).
- அவர்கள் கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்துகிறார்கள். (லேவி 8:14-30).
- தேவனோடு ஆசாரியருடைய ஐக்கியம். (லேவி 8:31-32).
- ஆசாரியர் வேறுபிரிக்கப்படுவதும், அவர்களுடைய ஊழியமும். (லேவி 8:33-36).
639. ஆசாரியருடைய பிரதிஷ்டையின் கடைசி கட்டளைகளைப்பற்றி
- பலிகளின் மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாச-லே வேவிக்க வேண்டும். (லேவி 8:31).
- ஆரோனும், அவருடைய குமாரரும் அதே இடத்தில் அதைப் புசிக்க வேண்டும்.
- ஆரோனும், அவருடைய குமாரரும் அதையும் கூடையிலிருக்கிற அப்பத்தையும் புசிக்க வேண்டும்.
- மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை அக்கினியிலே சுட்டெரிக்க வேண்டும். (லேவி 8:32).
- ஏழுநாள் இரவும் பகலும் ஆசரிப்புக் கூடாரவாச-ல் இருக்க வேண்டும். (லேவி 8:33,35).
- இன்று செய்ததுபோல , அவர்கள், தங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் ஏழுநாட்களுக்குச் செய்யவேண்டும். (லேவி 8:34; யாத் 29:35-37).
- ஏழுநாள் இரவும் பகலும் கர்த்தருடைய காவலைக் காக்க வேண்டும். (லேவி 8:35).
640. சந்தோஷமாயிருங்கள்
பிலிப்பியர் 4:4
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
1தெசலோனிக்கேயர் 5:16
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்
- துக்கத்தில் சந்தோஷமாயிருங்கள்
யோவான் 16:20 (20-24)
நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்
எரேமியா 31:13
- உபத்திரவத்தில் சந்தோஷமாயிருங்கள்
2கொரிந்தியர் 7:4(4-16)
எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்.
1தெசலோனிக்கேயர் 1:6; மத்தேயு 5:11,12
- பலவீனத்தில் சந்தோஷமாயிருங்கள்
2கொரிந்தியர் 12:9
கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மை பாராட்டுவேன்
- சோதனையில் சந்தோஷமாயிருங்கள்
யாக்கோபு 1:2-3
நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும் போது… அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்
- நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்
ரோமர் 12:12
நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்
1சாமுவேல் 2:1
அன்னாள் இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்
- இல்லாமையில் சந்தோஷமாயிருங்கள்
ஆபகூக் 3:17,18
அத்திமரம் துளிர்விடாமல்போனாலும்… நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் தேவனுக்குள் களிகூருவேன்.
- கொடுப்பதில் சந்தோஷமாயிருங்கள்
1நாளாகமம் 29:9-17
தாவீது தன் தேவனுடைய ஆலயத்தின்மீது வைத்தி ருந்த வாஞ்சையினிமித்தம் தான் சேர்த்துவைத்த அத்தனையும் கர்த்தருக்காக கொடுத்தான்; மக்களும் கொடுத்தனர்.
641. அதிகம் பேசக்கூடாது என்று சொன்னவர்கள்
1) சாலமோன் → சொற்களின் மிகுதியில் பாவமில்லாமல் போகாது – நீதி 10:19
2) பிரசங்கி → உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக – பிரச 5:2
3) எலிப்பாஸ் → பிரயோஜனமில்லாத வார்த்தைகளை பேச கூடாது – யோபு 15:3
4) பவுல் → வீண் பேச்சு அவபக்தியை உண்டாகும் – 2 தீமோ 2:16
5) யோபு → நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும். அது உங்களுக்கு ஞானமாயிருக்கும் – யோபு 13:5
6) சாலமோன் → பேசாமலிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான் – நீதி 17:28
7) பவுல் → ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கத்தை கெடுக்கும் – 1 கொரி 15:33
8) இயேசு → மனுஷர் பேசும் வீண் வார்த்தைகளுக்கு நியாயத்தீர்ப்பு உண்டு – மத் 12:3
9) சாலமோன் → உதடுகளை விரிவாக திறந்தால் கலக்கமடைவோம் – நீதி 13:3
10) யாக்கோபு → நாவை அடக்காதவன் தேவபக்தி வீண் – யாக் 1:26 / பேசுகிறதற்குப் பொறுமையாயும் இருக்ககடவர்கள் – யாக் 1:19
642. தேவனுக்கு சித்தமாயிருக்கிறது
1 பேதுரு 2:15 , கொலோ 4:12
நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
- பரிசுத்தமுள்ளவர்களாக இருப்பது தேவனுக்கு சித்தமாயிருக்கிறது
1 தெசலோனிக்கேயர் 4:3 to 5
நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,
- தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல்,
- உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து:
- புத்தியீன மனுஷரிடத்தில் போராடாமல் நன்மைசெய்கிறது தேவனுக்கு சித்தமாயிருக்கிறது
1 பேதுரு 2:15
நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
3.ஸ்தோத்திரஞ் செய்வதே தேவனுக்கு சித்தமாயிருக்கிறது
1 தெசலோனிக்கேயர் 5:18
எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள். அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.
- கொடுப்பது தேவனுக்கு சித்தமாயிருக்கிறது
2 கொரிந்தியர் 8:1 to 5
அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.
- அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.
- மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்;.
- தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்.
- மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.
5.எல்லா மனுஷருக்காகவும் ஜெபிப்பது தேவனுக்கு சித்தமாயிருக்கிறது
1 தீமோத்தேயு 2:1 to 4
நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்.
- நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
- நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
- எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
- கர்த்தருக்கு ஊழியஞ்செய்வது தேவனுக்கு சித்தமாயிருக்கிறது
எபேசியர் 6:6
மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள்.
643. தாழ்மை
1) தாழ்மையை அணிய வேண்டும் – 1 பேது 5:5
2) தாழ்மையாய் நடக்க வேண்டும் – மீகா 6:8
3) தாழ்மையாய் சிந்திக்க வேண்டும் – லூக் 1:51
4) தாழ்மையாய் பேச வேண்டும் – 1 சாமு 2:3
5) தாழ்மையாய் ஜெபிக்க வேண்டும் – 2 நாளா 7:14, லூக் 18:13
644. கண்ணீரால் நனைத்தவர்கள்
- கண்ணீரால் அறையை நனைத்த எசேக்கியா
1இராஜாக்கள் 20:2-3(1-6); ஏசாயா 38:5
எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப் புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மனஉத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான் எசேக்கியா மிகவும் அழுதான்.
- கண்ணீரால் கட்டிலை நனைத்த தாவீது
சங்கீதம் 6:6,8
என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன். கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
சங்கீதம் 42:3; சங்கீதம் 56:8; சங்கீதம் 80:5; சங்கீதம் 102:10
- கண்ணீரால் உடலை நனைத்த யோபு
யோபு 16:16,20
அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்ணிமைகளின்மேல் உண்டாயிருக்கிறது. என் சிநேகிதர் என்னைப் பரியாசம் பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது.
- கண்ணீரால் கன்னங்களை நனைத்த நகரி (எருசலேம்)
புலம்பல் 1:2 (1-10)
இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்; அவளு டைய கண்ணீர் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக் குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை
- கண்ணீரால் கால்களை நனைத்த மரியாள்
யோவான் 12:3
அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங் களைத் துடைத்தாள்; லூக்கா 7:38-44 யோவான் 11:2
- கண்ணீரால் சுருள்களை நனைத்த பவுல்
2கொரிந்தியர் 2:4
நீங்கள் துக்கப்படும்படிக்கு
எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மனயிடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன். கலாத்தியர் 6:11; பிலேமோன் 1:19
645. ஜெபத்தில் இருக்க வேண்டியவை
1) ஸ்தோத்திரம் – பிலி 4:6
2) பாவ அறிக்கை – நெகேமியா 1:6
3) தாழ்மை – 2 நாளா 7:14
4) பொருத்தனை – சங் 50:15
5) தேவ சித்தம் – 1 யோ 5:14
6) மற்றவர்களை மன்னித்து – மாற் 11:25
7) இயேசுவின் நாமம் – யோ 16:24
8) விசுவாசம் – மாற்கு 11:24
9) பொறுமை – சங் 40:1