அகழெலி (MOLE)
இது பூச்சிகளை உண்ணும் பாலூட்டி வகை உயிர்களில் ஒன்று. ஒன்பதிலிருந்து இருபத்திரண்டு சென்டிமீட்டர் நீளமுள் ளது. பாலஸ்தீனத்தில் சாதாரணமாய்க் காணக் கூடியது. இந்த எலி பூமிக்கு அடி யில் வாழ்ந்து வேர்களையும் கிழங்குகளை யும் பெறுவதற்காக விடாமுயற்சியோடு பூமியைக் குடைந்து செல்லக்கூடியது. இந்த எலியும் வௌவாலும் இருள் உலகிலே வாழ்ந்தாலும் இவை இரண்டும் ஒரே இடத்தில் வாழ்பவையல்ல என்பது குறிப் பிடப்பட வேண்டும்.
ஏச 2.20-இன் படி இரண்டும் சேர்த்துக் கூறப்படுகின்றன.
இறைவனது தீர்ப்பை எதிர்கொள்ளும் சிலைவழிபாடு செய்வோர் தங்கள் சிலை களை அகழெலிகளுக்கும், வௌவால்களுக்கும் எறிந்துவிடுவர் என்று கூறப்படு கிறது.
லேவி 11:30-இன்படி இந்த அக ழெலி ஒரு அசுத்த விலங்காகும்