அகாகு (AGAG)
பொருள்: அனற் பிழம்பு, சீற்றம் உடையவன், மூர்க்கன்)
- பெனிசியா மொழியில் இவ்வார்த்தை காணப்படுகின்றது. அநேகமாக இந்த வார்த்தை பாரவோன் என்பது போன்ற ஓர் அரச பட்டமாகும். தனி ஆளின் பெயரன்று. எண் 24:7-இல் வரும் அகாகு இப்படிப்பட்ட பட்டமாக இருக்க லாம். இதனுடைய சூழ்நிலை அமைப்பு இது ஒரு புராணக்கதை என்று காட்டு கிறது. இறையரசுக்கும், உலகிற்குமிடையே யுள்ள பகைமைக்கு அடையாளமாகிறது.
- சவுலினால் தோற்கடிக்கப்பட்டு, சாமுவேலால் கொல்லப்பட்ட ஓர் அமலேக்கிய அரசன் (1 சாமு 15:8-9. 20.32-33). சவுல் மன்னருக்கும். அகாகு மன்னன் தலைமையில் வந்த அமலேக்கியருக்கும் இடையில் நடைபெற்ற போரானது. சாமு வேலும் சவுலும் நிரந்தரமாகப் பிரிவதற்கு ஒரு தருணமாய் அமைந்தது. “அமலேக் கியர்களையும், அவர்களுடைய சொத்துக் கள் அனைத்தையும் அழித்துவிட வேண் டும்” என்ற சாமுவேலின் கட்டளைக்கு சவுல் கீழ்ப்படியவில்லை. சாமுவேல் இந்த கீழ்ப்படியாமையைப் பற்றிச் சவுலிடம் வினவியபொழுது, “சுடவுளுக்கு ஒப்புக் கொடுப்பதற்காக இவைகளை அழிக்க வில்லை” என்று முதலில் சாக்கு சொன் னாலும், பின்பு பழியை முழுவதும் மக்கள் மேல்போட்டார். சாமுவேல்தானே அகாகு வைக் கொலை செய்தார் (1சாமு 15:33).
சவுல் கீழ்படியாததும், அதன் விளை வாக அரச பதவி பறிபோனதும், ஆதி பெற்றோர் கீழ்ப்படியாததற்கும் அதன் விளைவாக இன்பவனத்திலிருந்து விரட்டப்பட்டதற்கும் ஒத்துள்ளன என்று இறை யியல் விவரிப்பு எடுத்துக்காட்டுகிறது.