அகாபே (AGAPE – அன்பு) -சொல் தோற்றம்
இது ஓர் கிரேக்க வார்த்தை. இதை மொழி பெயர்க்காமல் அப்படியே சில மொழிகளில் எழுதப்படுகிறது. அன்பைக் குறிக்கப்பயன்படுத்தப்படும் பல கிரேக்க வார்த்தைகளில் இதுவும் ஒன்று. இதன் அடிப்படைப் பொருளில் பிறர் நன்மைக் காகத் தன்னையே எந்த அளவுக்கும் தியாகம் செய்யும் இறை தன்மையுடைய, தன்னலமற்ற அன்பைக் குறித்தது (காண்க: அன்பு). ஆதித் திருச்சபையிலே இது தனிப்பட்ட ஓர் முறையிலே பயன்படுத்தப் பட்டது. இதற்கு அன்பு விருந்து என்பது பொருள். காண்க: அன்பு விருந்து.