646-660 பிரசங்க குறிப்புகள் 

646660 பிரசங்க குறிப்புகள் 

646.  சந்தோஷத்தோடே

சங்கீதம் 67:4

4 தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர், ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். (சேலா.) 

1.திருவசனத்தை சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

1 தெசலோனிக்கேயர் 1:6,7

நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, 

7.இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள். 

2.சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ண வேண்டும்

பிலிப்பியர் 1:4

நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி, 

3.சந்தோஷத்தோடே கொடுக்க வேண்டும்.

2 கொரிந்தியர் 8:2

அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். 

4.ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்க வேண்டும்.

அப்போஸ்தலர் 20:24

ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன். என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன். என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். 

647. விவேகமுள்ள மனுஷன்

நீதிமொழிகள் 12:23

விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்: மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும். 

1.இலச்சையை மூடுகிறவன் விவேகமுள்ள மனுஷன்

நீதிமொழிகள் 12:16

மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும், இலச்சையை மூடுகிறவனோ விவேகி. 

2.தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறவன் விவேகமுள்ள மனுஷன்

நீதிமொழிகள் 14:15 பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்: விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான். 

3.அறிவை அடக்கிவைக்கிறவன்  விவேகமுள்ள மனுஷன்

நீதிமொழிகள் 12:23

விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்: மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும். 

4.வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள மனுஷன்

நீதிமொழிகள் 28:7

வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்: போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான். 

5.கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவன் விவேகமுள்ள மனுஷன்

நீதிமொழிகள் 15:5

மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்: கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. 

6.ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறவன் விவேகமுள்ள மனுஷன்

நீதிமொழிகள் 22:3

விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்: பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள். 

648. கர்த்தரை விசுவாசியுங்கள் 

1.கர்த்தரை விசுவாசிக்கிறவன் பிழைப்பான்

யோவான் 11:25 

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் ;

ஆபகூக் 2:4; உபாகமம் 8:3; மத்தேயு 4:4; லூக்கா 4:4; யோவான் 6:51,58; எசேக்கியேல் 18; 928; 20:1113; 33:1319 

2.கர்த்தரை விசுவாசிக்கிறவன் செய்வான்

யோவான் 14:12

மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான் , இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.

யோவான் 5:20; வெளிப்.   2:19 

3.கர்த்தரை விசுவாசிக்கிறவன் பதறான்

ஏசாயா 28:16

ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும் விசுவாசிக்கிறவன் பதறான் .

ஏசாயா 35:4; நீதிமொழிகள் 25:8; பிரசங்கி 5:2 

3.கர்த்தரை விசுவாசிக்கிறவன் பாக்கியவான்

யோவான் 20:29

அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்.

5.கர்த்தரை விசுவாசிக்கிறவன் ஜெயிப்பான்

1யோவான் 5:5(15)

இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?

6.கர்த்தரை விசுவாசிக்கிறவன் வெட்கப்படான்

ரோமர் 10:11

அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது.

ஏசாயா 28:16; 29:22; 49:23; 1பேதுரு 2:6; ரோமர் 9:23 

7.கர்த்தரை விசுவாசிக்கிறவன் கெட்டுப்போகான்

யோவான் 3:16(1518)

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

மாற்கு 9:23 

விசுவாசிக்கிறவனுக்கு கூடும்

யோவான் 5:24 

விசுவாசிக்கிறவனுக்கு ஜீவன்

அப்போஸ்தலர் 13:39 

விசுவாசிக்கிறவனுக்கு விடுதலை

அப்போஸ்தலர் 10:43 

விசுவாசிக்கிறவனுக்கு மன்னிப்பு

ரோமர் 1:16 

விசுவாசிக்கிறவனுக்கு இரட்சிப்பு

ரோமர் 10:4 

விசுவாசிக்கிறவனுக்கு நீதி

1தெசலோனிக்கேயர் 2:13 

விசுவாசிக்கிறவனுக்கு பெலன்

649. பாவம் செய்து பதவி இழந்தவர்கள்…..

1) ஆரோன் பாவம் செய்து தன் ஆசாரிய பணியை  இழந்தான். அவன் மகன் எலியாசர்க்கு அது கொடுக்கப்பட்டது. 

2) மோசே பாவம் செய்து தன் தலைமை பதவியை இழந்தார். அது யோசுவாவுக்கு கொடுக்கப்பட்டது.

3) சவுல் பாவம் செய்து ராஜா என்னும் பதவியை இழந்தார். அது தாவீதுக்கு கொடுக்கப்பட்டது.

4) பெல்ஷாத்சார் பாவம் செய்து  பாபிலோன் நாட்டின் ஆளுகையை இழந்தார். அது மேதியா பெர்சியா ராஜ்யத்தின் கோரேஸ் தரேயு ராஜாவின் ஆழுகைக்கு கொடுக்கப்பட்டது.

5) ஆமான் யூதர்களை அழிக்க நினைத்து பாவம் செய்து ராஜாவுக்கு அடுத்த பதிவியையும் முத்திரை மோதிரத்தையும் இழந்தான். அது மொர்தேகாய்க்கு கொடுக்கப்பட்டது. 

6) யூதாஸ் பாவம் செய்து தன்  சீசத்துவத்தை இழந்தார். அது மத்தியாவுக்கு கொடுக்கப்பட்டது.

7) மூன்றில் ஒரு பங்கு தூதர்கள் பாவம் செய்து தேவனோடு இருக்கும் பரலோக பதவியை இழந்தார்கள்.அது மீட்கப்படும் பரிசுத்தவான்களுக்கு கொடுக்கப்படும்.

650. எலிசபெத்

1) குற்றமற்றவள்  லூக் 1:6

2) தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவள்  லூக் 1:6

3) வேத வசனத்தின்படி வாழ்ந்தவள்  லூக் 1:6

4) முதலாவது மலடியாக இருந்து பின்பு பிள்ளை பெற்றவள் (ஜெபத்தினால்)  லூக் 1:13

5) பரிசுத்த ஆவியால் நிரப்பபட்டவள்  லூக் 1:41

6) பரிசுத்தவான்களை போஷித்தவள்  லூக் 1:56

651. கர்த்தருடைய நாமத்தில்

சங்கீதம் 124:8

 நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. 

1.கர்த்தருடைய நாமத்தில் பாதுகாப்பு

நீதிமொழிகள் 18:10

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்: நீதிமான் அதற்குள் ஓடிச்சுகமாயிருப்பான். 

2.கர்த்தருடைய நாமத்தில் சகாயம்

சங்கீதம் 124:8

 நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது. 

3.கர்த்தருடைய நாமத்தில் நடத்துதல்

யோவேல் 2:26

நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்தி வந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள். என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. 

4.கர்த்தருடைய நாமத்தில் சுகம்

யாக்கோபு 5:14

உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானக. அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். 

5.கர்த்தருடைய நாமத்தில் ஸ்திரத்தன்மை

சங்கீதம் 20:7

சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள், நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். 

  1. அவர்கள் முறிந்து விழுந்தார்கள், நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம். 

6.கர்த்தருடைய நாமத்தில் ஜெயம்

1 சாமுவேல் 17:45

அதற்குத் தாவீது பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன். 

652. மலைகள் சொல்லும் நிலைகள்

1 இராஜாக்கள் 20:28 

கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் .

ஏசாயா 26:4 

[4]கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். 

1 சாமுவேல் 2:2 

[2]கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை .

1 கொரிந்தியர் 10:4 

[4]எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. 

1.அரராத் மலை

           நோவா பேழை

ஆதியாகமம் 8:4(122) 

[4]ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.

அரராத் மலை (Mount Ararat) துருக்கியில் உள்ள மிக உயரமான மலையாகும். எரிமலைக் கூம்பான இம்மலை துருக்கியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளது. இது ஆர்மேனியா நாட்டின் எல்லைக்கு 32 கி.மீ. தெற்காகவும், ஈரான் எல்லைக்கு 16 கீ.மீ. மேற்காகவும் அமைந்துள்ளது.

2.மோரியா மலை

       ஆபிரகாம் ஈசாக்கு (பலி)

ஆதியாகமம் 22:2(118) 

[2]அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார்.

3.சீனாய் மலை

         மோசே 10 கட்டளை

யாத்திராகமம் 19:20(125) 

[20]கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.

யாத்திராகமம் 24:16 

[16]கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது; ஏழாம்நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்.

யாத்திராகமம் 31:18; 34:2 

சினாய் மலை (அரபு: جبل موسى), அல்லது கெபல் மூசா அல்லது ஜபல் மூசா (மோசேயின் மலை) எகிப்தின் சினாய் குடாவிலுள்ள ஒரு மலையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 2,285 மீட்டர் உயரமானதாகும். சூழவுள்ள சமவெளியிலிருந்து செங்குத்தாக உயர்ந்து காணப்படுகிறது.

3.சீயோன் மலை

 தாவீதின் நகரம் பரிசுத்த மலை

2 சாமுவேல் 5:7 

[7]ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று.

எபூசியர்களின் கோட்டை நகரமாகிய எபூசுவின் பெயர்தான் சீயோன். இது எருசலேமின் தென்கிழக்கு மலைமீது இருந்தது. தாவீது இந்த நகரத்தைக் கைப்பற்றிய பின்பு, இங்கே தன் அரண்மனையைக் கட்டினார். இது “தாவீதின் நகரம்” என்று அழைக்கப்பட்டது. (2சா 5:7, 9) ஒப்பந்தப் பெட்டியை தாவீது சீயோனுக்குக் கொண்டுவந்த பின்பு, இந்த மலை யெகோவாவுக்குப் பரிசுத்தமான மலையாக ஆனது

சங்கீதம் 14:7; 20:2; 48:2; 78:68; 87:2; 128:5; 134:3 

4.கர்மேல் மலை

எலியா 450 பாகால் தீர்க்கத்தரிசிகள்

1 இராஜாக்கள் 18:39(140) 

[39]ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.

கார்மேல் மலை (Mount Carmel, எபிரேயம்: הַר הַכַּרְמֶל, Har HaKarmel / Har ha Karmell (அர்த்தம்: கடவுளின் திராட்சைத் தோட்டம்); கிரேக்க மொழி: Κάρμηλος, Kármēlos; அரபு மொழி: الكرمل, Kurmul or جبل مار إلياس Jabal Mar Elyas ‘Mount Saint Elias’) என்பது தென் இசுரேலில் மத்தியதரையிலிருந்து தென் கிழக்காக நீண்டிருக்கும் கடற்கரையோர மலைத்தொடராகும். இத்தொடர் யுனெஸ்கோவின் உயிர்க்கோளம் ஓதுக்கீட்டுப் பகுதியும் பல நகரங்களினைக் கொண்டதும் ஆகும். குறிப்பாக, இசுரேலின் மூன்றாவது பெரிய நகரான கைஃபா இதன் தென் சரிவில் அமைந்துள்ளது.

5.ஒலிவ மலை

  இயேசுவின் ஜெபம் வருகை

லூக்கா 21:37 

[37]அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார்.

அப்போஸ்தலர் 1:11(112) 

[11]கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள்.

ஒலிவ மலை (Mount of Olives அல்லது Mount Olivet, எபிரேயம்: הַר הַזֵּיתִים, Har HaZeitim; அரபு மொழி: جبل الزيتون, الطور, Jabal azZaytūn, AțȚūr) என்பது எருசலேம் பழைய நகருடன் கிழக்கிலிருந்து இணையும் மலைத் தொடராகும்.[1] இதன் சரிவுப் பகுதிகளை ஒலிவ மரங்கள் மூடியிருந்ததால் இதற்கு ஒலிவ மலை என்ற பெயர் கிடைத்தது.

653. உசியா ராஜா (2 நாளா 26)

கர்த்தரை தேடியதால் அவனுக்கு கிடைத்த ஆசிர்வாதங்கள்

1) 16 வயதில் கர்த்தரை தேடி, கர்த்தருக்கு பயந்து வாழ்ந்தவன்  26:3,4

2) கர்த்தரை தேடியதால் உசியா காரியங்கள் செழிப்படைந்தது  26:5

3) தேவன் துணை நின்றதால் அவன் வெற்றி வாகை சூடினான்  26:7

4) உசியாவின் கீர்த்தி பரவியது  26:8

5) உசியாவுக்கு ஐசுவரியமும், மகிமையும் உண்டாயிற்று  26:10

உசியா ‌கர்த்தரை விட்டு விலகிய போது

1) அவன் இருதயம் மேட்டிமை கொண்டது  26:16

2) அவன் கோபம் கொண்டான்  26:19

3) உசியா தன் ராஜ பதவியை இழந்தான்  26:24

4) அவன் நெற்றியில் குஷ்ட ரோகம் வந்தது  26:19,20

5) கர்த்தர் அவனை அடித்தார்  26:20

6) மரண நாள் மட்டும் குஷ்டரோகம்  26:21 

7) தேவனுடைய ஊழியக்காரரோடு கோபமாக பேசினான்  2 நாளா 26:19

654. பரிசுத்த வேதாகமத்தில்  எட்டாம் நாளைப்பற்றி 

  1. மிருகஜீவன்களில் ஆண்தலையீற்றுகளை எட்டாம் நாளில் தேவனுக்குக் கொடுக்க வேண்டும். (யாத் 22:30).
  1. ஆசாரியர் எட்டாம் நாளில் ஊழியத்தை ஆரம்பிக்கவேண்டும் (லேவி 9:1).
  1. எட்டாம் நாளில் இஸ்ரவேலின் ஆண்மக்கள் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள வேண்டும்          (லேவி 12:3).
  1. குஷ்டரோகிகள் எட்டாம் நாளில் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்           (லேவி 14:10,23).
  1. எட்டாம் நாளில் பிரமியமுள்ளவன் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்        (லேவி 15:1415).
  1. எட்டாம் நாளில் உதிர ஊறல் உள்ளவள் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.          (லேவி 15:29).
  1. கூடாரங்களின் பண்டிகையின்போது எட்டாம் நாள் சபை கூடும் பரிசுத்த நாளாகும்.  (லேவி 23:36,39;         எண் 9:35).
  1. நசரேயனுடைய கடைசி சடங்குகள் எட்டாம் நாளில் நிறைவேற்றப்படும்.    (எண் 6:10).

655. லேவி 9ஆவது அதிகாரத்தில் ஆரோனுடைய நடபடிகளைப்பற்றி  

  1. ஆரோன் பபீடத்தண்டையில் சேருகிறார்  (லேவி 9:8).
  1. தன் பாவநிவாரணபயாகிய கன்றுக் குட்டியைக் கொல்லுகிறார்  (லேவி 9:8;  எபி 5:14; எபி 7:2728).
  1. ஆரோன்    தன்   விரலை பாவநிவாரணபயின் இரத்தத்தில் தோய்த்து, பபீடத்தின் கொம்புகளின் மேல் பூசுகிறார் (லேவி 9:9).
  1. மற்ற இரத்தத்தைப் பபீடத்தின் அடியிலே ஊற்றுகிறார்.
  1. பாவநிவாரணபயின் கொழுப்பையும், குண்டிக்காய்களையும், கல்லீரல் எடுத்த ஜவ்வையும், பபீடத்தின் மேல் தகனிக்கிறார்  (லேவி 9:10).
  1. மாம்சத்தையும்   தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரிக்கிறார் (லேவி 9:11).
  1. ஆரோன் சர்வாங்க தகனபயைக் கொல்லுகிறார் (லேவி 9:12).
  1. ஆரோன் சர்வாங்க தகனபயின் இரத்தத்தைப் பபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கிறார்.
  1. சர்வாங்க      தகனபயின் துண்டங்களையும் தலையையும்        பபீடத்தின்மேல் தகனிக்கிறார்  (லேவி 9:13).
  1. குடல்களையும்     தொடைகளையும் கழுவுகிறார் (லேவி 9:14).
  1. அவைகளைப் பபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபயின்மேல் தகனிக்கிறார்.
  1. ஆரோன் ஜனங்களின் பாவநிவாரண பயை வெண்கல பலிபீடத்திற்குக் கொண்டு வருகிறார் (லேவி 9:15).
  1. ஜனங்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவை ஆரோன் கொன்று, முந்தினதைப் பயிட்டது போல, அதைப் பாவநிவாரண              பயாக்குகிறார்.
  1. சர்வாங்க தகனபயையும் கொண்டு வந்து, நியமத்தின்படி ஆரோன் அதைப் பயிடுகிறார் (லேவி 9:16).
  1. போஜனபயையும்  கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்க தகனபயுடனே பபீடத்தின்மேல் தகனிக்கிறார் (லேவி 9:17).
  1. ஆரோன்   ஜனங்களின்  சமாதானபகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொல்லுகிறார்   (லேவி 9:18).
  1. ஆரோன் அவைகளின் இரத்தத்தைப் பபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கிறார்.
  1. ஆரோன் கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், குண்டிக்காய்களையும், கல்லீரன்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து, அவைகளைப்  பபீடத்தின்மேல் தகனிக்கிறார்            (லேவி 9:1920).
  1. ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் மார்க்கண்டங்களையும் வலது முன்னந்தொடையையும் அசைவாட்டும் பயாக அசைவாட்டுகிறார்         (லேவி 9:21).
  1. ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதிக்கிறார்  (லேவி 9:22).
  1. ஆரோன் பகளைச் செலுத்தின பலிபீடத்திலிருந்து இறங்குகிறார்.

656. உன்னைக் கைவிடுவதுமில்லை

உபாகமம் 31:8

கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார், அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை, நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான். 

1.உன்னோடு இருந்து உன்னைக் கைவிடுவதுமில்லை

யோசுவா 1:5

நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை. நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. 

2.சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை

ஆதியாகமம் 28:15

நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன். நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். 

3.சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும் உன்னைக் கைவிடுவதில்லை

1 நாளாகமம் 28:20

தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி, நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு, தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார், கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார். 

657. நடந்துக்கொள்ளுங்கள்

1 யோவான் 1:7

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 

1.சத்தியத்திலே நடந்துகொள்ளுங்கள்

3 யோவான் 1:3

சகோதரர் வந்து நீ சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். 

2.அன்பிலே நடந்துகொள்ளுங்கள்

எபேசியர் 5:2

கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். 

3.ஒளியிலே நடந்துகொள்ளுங்கள்

1 யோவான் 1:7

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம். அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 

  1. இயேசு கிறிஸ்துவுக்குள் நடந்துகொள்ளுங்கள்

கொலோசெயர் 2:6

ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, 

5.ஞானமாய் நடந்துகொள்ளுங்கள்

கொலோசெயர் 4:5

புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளுங்கள். 

6.ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள்

கலாத்தியர் 5:16

பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். 

658. ஒருவனே பந்த பொருளை பெறுவான் (1 கொரி 9:24) 

1) இரண்டு பேர் ஜெபம் பண்ண ஆலயத்துக்கு போனார்கள்   ஒருவனே நீதிமானாக்கபட்டவனாக தன் வீட்டுக்கு போனான்  லூக் 18:1014

2) 2 பேர் வயலில்  ஒருவன் ஏற்றுக் கொள்ளப்படுவான்  மத் 24:40

3) 2;ஸ்திரிகள் எந்திரம் அரைத்தல்  ஒருத்தி ஏற்றுக் கொள்ளப்படுவாள்   மத் 24:41

4) 2 பேர் படுக்கையில்  ஒருவர் ஏற்றுக் கொள்ளப்படுவார்  லூக் 17:34

5) 2 குற்றவாளி சிலுவையின் அருகில்  ஒருவன இரட்சிக்கபட்டான்  லூக் 23:3943

6) 2 குமாரர்  இளையவன் தகப்பனிடம் வந்தான்  மூத்த குமாரன் உள்ளே போகமனமில்லை  லூக் 15:20,28

7) 2 சகோதரி  மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டாள்  லூக் 10:3842

8) 2 சகோதரர் காணிக்கை  ஆபேலின் காணிக்கையை அங்கிகரித்தார் ஆதி 4:4,5

9) 2 மருமக்கள்  ஒருத்தி மாமியை முத்தமிட்டு போனாள்  மற்றவள் விடாமல் மாமியை பற்றிக் கொண்டாள்  ரூத் 1:14

10) இரட்டை பிள்ளைகள்  யாக்கோபை கர்த்தர் சிநேகித்தார்  ரோ 9:13

11) லாசரு, ஜசுவரியவான்  லாசரு ஆபிரகாம் மடியில்  லூக் 16:13

12) ஜசுவரியவான்கள், ஏழை விதவை காணிக்கை  ஏழை விதவை காணிக்கை அங்கிகரிக்கபட்டது  லூக் 21:1,2

659. கருத்தாய்

1) ஜெபிக்க வேண்டும்  யாக் 5:17

2) பாட வேண்டும்  1 கொரி 14:15

3) கர்த்தரை தேட வேண்டும்  ஒசியா 5:15

4) வசனத்தை கைக்கொள்ள வேண்டும்  சங் 119:4, உபா 6:17

5) வசனத்தை பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டும்  உபா 6:7

660. யாருக்கு நன்மை செய்கிறார்

சங்கீதம் 125:4

கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்யும். 

  1. தம்முடைய ஜனத்திற்க்கு நன்மை செய்கிறார்

எரேமியா 32:40,41

அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து, 

  1. அவர்களுக்கு நன்மைசெய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன். 
  1. தேவனுடைய காரியமாய் நிற்கும் போது (மருத்துவச்சிகள்) கர்த்தர் நன்மை செய்வார்

யாத்திராகமம் 1:19 to 21

 அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள். மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள். 

  1. இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனர்கள். 
  2. மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். 

3.நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்கிறார்

சங்கீதம் 125:4

கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்யும். 

  1. சீயோனுக்கு (பரிசுத்த கூட்டத்திற்க்கு) நன்மை செய்வார்

சங்கீதம் 51:18

சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும், எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *