அகிக்காரின் நூல் (BOOK OF AHEKAR)
ஒரு பழமையான ஞான நூல். பழ மொழிகளையும், நீதிக் கதைகளையும் கொண்டது. முகவுரை அகீக்கார் என்ற ஞானியின் வாழ்க்கைக் குறிப்பைக் காட்டு கிறது. நூலில் காணப்படுபவை அவர் தனது மகனுக்கு அறிவுரையாகக் கூறப் பட்டதாக அமைந்துள்ளன. அந்நூல் சீரியா, அராபிய, அரமேயா மற்றும் சில மொழிகளில் காணப்படுகிறது. ஆயினும் பழைய அரமேயிக் வடிவம் எலெபென் டைன் ஏடுகளில் திரும்பக் கண்டுபிடிக்கப் பட்டது பெரிய வியப்பை ஊட்டியது. அது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இது கண்டுபிடிக்கப்படும்வரை இந் நூலுக்கும் தோபித்து நூலுக்கும் இடையே யுள்ள தொடர்பை ஒருவரும் எண்ணிப்
பார்க்கவில்லை. அகிக்கார் அசீரிய அரசன் சென கெரிப்பின் கீழ் ஒரு மேலதிகாரியாக இருந்தார். அவருக்கு மகன் இல்லாத தால், தனது சகோதரியின் மகன் நாட னைத் தத்து எடுத்துக்கொண்டார். அவனை நூலில் பிறகு வரும் அறிவுரை களால் கல்வி கற்றவனாக்கி அரசன் எசர் கதோனிடம் கொண்டுவந்தார். நாடன் அகிக்காரின் வாரிசாக நியமிக்கப் பட்டார். அகிக்கார் ஓய்வுபெற்று தனது வீடு திரும்பினார். ஆனால் நாடன் தனது வளர்ப்புத் தந்தையான அகிக்கார் கற்றுக் கொடுத்தவையால் பயன்பெறவில்லை. அகிக்கார் அரசுக்கு எதிராகச் சதிச்செய் வதாகக் குற்றம் சாட்டி அவரது பெயரைக் கெடுத்தான். அரசனும் அதை நம்பி, சினந்து, நபு-சும்-இங்குன்னையும் மற்றும் இரண்டு பேரையும் அகிக்காரைக்கொல்ல அனுப்பினார். அவர்கள் அகிக்காரை அவரது திராட்சைத் தோட்டத்தில் இரு மலைகளுக்கிடையில் கண்டனர். அகிக் கார் நபு-சும்-இங்குன்னிடம், சென கொரிபு அவரைக் கொலை செய்ய உத்தர விட்டபோதுதான் அவரைக் காப்பாற்றி யதை எடுத்துரைத்தார். மேலும் அவன் குற்றமற்றவன் என நிரூபிக்கப்பட்டபோது அரசன் மகிழ்ந்ததையும் நினைவுப்படுத் தினார். அகிக்கார் அதேபோன்ற பதிலு தவி எதிர்பார்த்தார். மூவரும் இரகசியத் தைக் காப்பாற்றுவதாக உறுதி எடுத்துக் கொண்டனர். இதன் பின் ஒரு அடிமை யைக்கொன்று அகிக்காரை மறைத்து வைத்துப் பாதுகாத்தனர். எகிப்தியரோடு போர் தொடங்கியபோது, அகிக்கார் மட்டுமே கொடுக்கக்கூடிய ஆலோசனை அரசனுக்குத் தேவைப்பட்டது. ஆகவே அரசன் தனது தண்டனைத் தீர்ப்பைப் பற்றி வருந்தினார். அச்சமயத்தில் கொலையை நிறைவேற்றுபவர் அகிக் காரை அரசர் முன்கொண்டு வந்தார். அரசனும் மகிழ்ந்து அவரைப் பயன் படுத்தினார். அகிக்கார் தனது மதியால் எகிப்திய மன்னனை வென்ற பின் மகிமை யோடு நாடு திரும்பினார். நாடன் மக்க ளால் பழித்துக்கூறப்பட்டு, கைதியாக்கப் பட்டார். சிறையில் ஊதி, வெடித்து மிகக் கேவலமாக மடிந்தார். இவ்வாறு அகிக் காரின் கதை நேர்மைக்காக எண்பிக்கப்பட்டவரது வரலாறு ஆகும்.
அரேமேயிக் நூல் அசீரிய நூலி லிருந்து வந்ததென்பதை நம்பக் காரணங் கள் உள்ளன. இதில் வரும் சில மனிதர் கள் உண்மையிலேயே வாழ்ந்தவர்களாக இருக்கலாம். செனகெரிபுவின் கீழ் நபு – சும்-இங்குன் என்ற உயர் அதிகாரி இருந்ததாகத் தெரிகிறது. அகிக்கார் இருந்தாரா என்பது தெளிவாகத் தெரிய வில்லை. ஆனால் அது ஒரு அசீரியப் பெயர். நாடன் அல்லது நாடின் என்பது அதாத்-நாடின்-சும் போன்ற பெயர் களின் சுருக்கமாக இருக்கலாம். அகிக் கார் புரட்சி செய்ததாகக் கூறப்படுகிறது உண்மையாக இருக்கலாம். அசீரிய நூற் களின்படி ஆட்சிக்கு வரவேண்டியவர் களைத் தோற்கடித்து ஏசர்கதோன் ஆட்சியைக் கைப்பற்றினார்.
அரமேயிக் படிவம் வழியாகத்தான் இந்நூல் பரவலாக அறியப்பட்டது ஆனால் இன்றைய வடிவில் இது கி.மு. 500-க்கு முந்தியதாக இருக்க முடியாது. கிரேக்க ஆசிரியர்கள் அகிக்காரின் கதையை பலவாறு பயன்படுத்தியுள்ளனர்.
இவற்றில் ஞானியான அகிக்காரைப் போற்றும் கதையைப்பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். தோபித்து நூல் ஆசிரியர் தன் கதையில் அகிக்காரைத் தோபித்தின் உறவினர் ஆக அறிமுகப்படுத்துவது. ஏற் கெனவே நன்கு அறியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கதையோடு தமது கதையை இணைத்துத் தமது கதைத் தலைவரின் புகழை அழுத்திக் கூறுகிறார் எனலாம். ஒருவேளை ஆசிரியர் தோபித் தை ஒரு யூத அகிக்காராக எண்ணியிருக்க வேண்டும். ஒரு பழங்கால கதையின் ஒழுக்கப்பாடத்தைத் தமது மக்களின் மொழியிலும் சிந்தனை வடிவிலும் எடுத் துக்கூற விரும்பியிருக்கலாம். அகிக்கா ரின் கதையில் அவர் கூறியதாகப் பல ஞானமிக்க கூற்றுக்கள் வருகின்றன. அவற்றிற்கு இணையானக் கூற்றுக்கள் தோபி 4-இல் காணப்படுகின்றன