அகிசகார் (AHISHAHAR-விடியலின் சகோதரன், சகோதரன் விடியல் ஆனான்)
ஜயப்பாடுகளுக்கு இடம் தருகின்ற பென்யாமின் மரபுப் பட்டியலில் எதியேல் குடும்பத்தைச் சேர்ந்த பிலிகானின் புதல் வர்களில் ஒருவர். ஆற்றல்மிக்க வீரன் (1 நாள் 7:10-11). ஆனால் அதிகாரப்பூர்வ மான பட்டியலில் (1 நாள் 8:1-40) பிலி கான். அகிசகார் போன்ற பெயர்கள் காணப்படவில்லை. எனவே செபுலோன் வழி மரபுப் பட்டியலின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்பது பலரின் கருத்து.