அகி (AHI- என் சகோதரன்)
யாவே என் சகோதரன் என்று பொருள்படும் அபியா என்ற பெயரின் சுருக்கமாக இருக்கலாம். நாளாகம நூல் களில் தந்துள்ள மரபுமுறை அட்டவணை யில் இந்தச் சொல்லானது இரண்டுமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஐயத்திற்குரியவை. வாசகங்கள்
- பாசானில் வாழ்ந்த காது குலத்தின ரான அபிதியேல் என்பவரின் மகனாவார் (1நாளா 5:15).
- செமேரின் புதல்வர்களில் ஒருவர் ( 1 நாள் 7:34). இப்பகுதியில் எபிரேயச் சொல், ஒரு ஆளின் பெயராக எடுத்துக் கொள்ளப்படுவதைவிட “என் சகோதரன்” என்று இடுபெயராக எடுத்துக் கொள்வது மேல்.