அகிசாபு (ACHSHAPH மாயவித்தை. கவர்ச்சி, ஈர்ப்பு)
இது ஆசேர் புதல்வர்களின் கோத்திரத் திற்குக் கிடைத்த எல்லைப்புற பகுதிகளில் ஒன்று (யோசு 19:25). இஸ்ராயேல் மக்கள் யோசுவாவின் தலைமையின் கீழ் பாலஸ் தீன நாட்டில் நுழைந்தபோது காணப் பட்ட ஒர் பழைய நகரம். இந்த கானானிய நகரம் மற்ற பல நகரங்களோடு சேர்ந்து யோசுவாவை எதிர்த்த கூட்டணி தோல்வி யுற்றபோது, அதன் அரசன் கொல்லப் பட்டான். நகரமும் அழிந்து போனது ( 11:1:12:20).
எகிப்திய ஏடுகளிலும் (கி.மு.19-18-ஆம் நூற்றாண்டு), மூன்றாம் துத்-மோஸ் (கி.மு.1440-1435) வென்ற நகரங்களின் கர்னாக் பட்டியலிலும் (15-ஆம் நூற் றாண்டு) அமர்னா ஏடுகளிலும் (14-ஆம் நூற்றாண்டு) அனஸ்தாசின் புல்தாள ஏடு களிலும் (13-ஆம் நூற்றாண்டு) இந்நகரம் குறிக்கப்படுகிறது. இந்த இடத்தை உறுதி யாக அடையாளம் காட்டமுடியாது. ஆனா லும் ஆக்கோ சமவெளியில் ஆக்கோவுக்கு தென் கிழக்கில் 10 கி.மீ. தொலைவிலுள்ள தேல்-கிசானை அடையாளம் காட்டுவர். அடையாளங் காட்டக்கூடிய மற்ற இடங் கள் தேல்-பெர்வேயும். தேல்-கர்பாக்கும் ஆகும்