அகிசா (ACHSAH சிலம்பு. கணுக்கால் அணி)
காலேபுவின் மகள். காலேபு தன் தம்பி கெனாசின் மகன் ஒதினியேல் என்பவ னுக்கு, கிரியத்து சேபரைப் (தெபீர்) பிடித் ததற்குச் சன்மானமாக, தான்கொடுத்த வாக்கின்படி அவனுக்கு இவளை மண முடித்துக்கொடுத்தார் (யோசு 15:16-19; நீதி 1:12-13: 1 நாள் 2:49). மேலும் அகிசாவின் விருப்பத்திற்கிணங்கி, நெகேபில் நீர் ஊற்றுக்களைச் சீதனமாக காலேப்பு அவளுக்கு அளித்தார் (யோசு 15:19; நீதி 1:15)