அகிசீபு

அகிசீபு (ACHZIB -ஏமாற்றல், வஞ்சகம்) 

  1. மேற்கு யூதர் நாட்டில் கெயீலாவுக் கும். மரேசாவுக்கும் இடையிலுள்ள ஒரு நகரமாகும் (யோசு 15:44). ஒருவேளை ஆதி 38:5-இல் குறிக்கப்படும் கெசிப்பும் இதுவும் ஒரே நகரைக் குறிக்கலாம். இப் பெயரை வைத்து மீக் 1:14 சிலேடை அணியல் ஒரு கூற்றைக் கொண்டுள்ளது.

பழங்கால அகிசீபுக்கு யுசேபியஸ் அதுல்லாம் அருகிலுள்ள ஒரு அழிவுக் குன்றை அடையாளம் காட்டுகிறார். இவ் விடம் அதுல்லாமுக்குக் கிழக்கே 5 கி.மீ தொலைவிலுள்ள இக்கால தெல்-ஏல்- பெய்தா என்று இப்போது ஏற்றுக் கொள்ளப்படும்.

  1. கலிலியோவின் மத்திய தரைக் கடற் கரையில் உள்ள நகரமாகும். இது பெனி சிய எல்லைக்கு அருகில் உள்ளது. ஆசேர் நாட்டைச் சேர்ந்ததாயினும் ஆசேரியர் களால் இந்நகர் கைப்பற்றப்படவில்லை ( 19:29; 5 1:31).

ஆக்கோ நகருக்கு வடக்கே 14 கி.மீ. தொலைவிலுள்ள, இக்கால எஸ்-ஸிப் என்ற இடத்தில் நடந்த தொல்பொருள் அகழ்வாய்வுகளிலிருந்து கி.மு. 19-ஆம் நூற்றாண்டில் இந்நகரை நிறுவியவர்கள் பள்ளம் தோண்டி இதை ஒரு தீவாக்கினர் என்று தெரிகிறது. 11-6-ஆம் நூற்றாண்டு களில் இந்நகர் செழிப்புற்று விளங்கியது. இதில் 10-8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறையில் வெட்டப்பட்ட பல குடும்பக் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செனகெரிப்புவின் தலைமையின் கீழ், கி.மு.701-இல் இந்நகரை வெல்ல அசீரி யர்கள் படையெடுக்குமுன். இந்நகரின் தலைவர்கள் நகரைவிட்டு ஓடிப்போயினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *