அகித்தோபல் (AHITOPHEL – மடமையின் சகோதரன்)
தாவீதின் அறிவுக் கூர்மைமிக்க ஆலோசகராய் பணிபுரிந்த அகித்தோபல் யூதா மேட்டு நிலங்களிலுள்ள கீலோ (யோசு 15:31) என்ற ஊரினைப் பிறப்பிட மாகக் கொண்டவர். இவர் நாடறிந்த மதி நுட்பம் நிறைந்தவர். இவருடைய அறிவு ரைகளெல்லாம் இறைவனின் கூற்று களுக்கு இணையானவை என்று இவரு டன் வாழ்ந்தவர்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டன (2 சாமு 16:23).
அபிசலோம் தனது தந்தை தாவீதுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து கெபிரோனில் முடிசூட்டிக் கொண்டபொழுது அகித் தோபல் அவரது ஆதரவாளராகச் சேர்ந் துக்கொண்டார். எருசலேமை எந்த விதச் சண்டையுமின்றிக் கைப்பற்றியபின் அகித் தோபலின் அறிவுரையின்படி, இஸ்ரா யேல் முழுமையும் அறியும்வண்ணம், தன் தந்தையின் வைப்பாட்டிகளுடன் அபிச லோம் படுத்தான். இந்த நிகழ்ச்சி அவனைப் பின் தொடர்பவர்களுக்கு மனத் துணிவைக் கொடுத்தது (2 சாமு 16:20-22). மேலும் தாவீதின் படையானது விலிமை பெறுமுன்னே அவரை அழித் தொழிக்க வேண்டும் என்றும் அபிச லோம் பன்னிராயிரம் வீரர்களோடு உடனே தாவீதைத் துரத்திச் சென்று, தாவீது அரசனை அழித்து விட வேண்டும் என்று அகித்தோபல் அறிவுரை வழங்கி னார் (17:1-3). இத்தகைய அறிவுரைகள னைத்தையும் நல்லவையாகத் தோன்றினா லும், தாவீதைத் துரத்திச் செல்வதைத் (1 தள்ளிப்போடவேண்டும் என்று தாவீதின் ஒற்றன் கூசாய் அபிசலோமுக்குக் கொடுத்த மடமைமிக்க திட்டங்களின் காரணத்தால் கைவிடப்பட்டன (17:5-14). அகித்தோபலின் அறிவுரைகள் அனைத் தும் விழலுக்கு இறைத்த நீராக மாறிய தால், அபிசலோமின் விதி முடிந்து விட்டது என்றும், தன்னுடையவும் மற்ற சதிகாரர்களின் முடிவும் தெளிவாயிற் றென்பதாலும், அவர் வீட்டிற்குச் சென்று தற்கொலை செய்துகொண்டார் (17:23:1 27:33-34).
அகித்தோபல் எலியாமின் தந்தையா வார் (2 சாமு 23:24). ஊரியாவின் மனைவி யாகிய பதுசேபா எலியாமின் மகளா வாள் (2 சாமு 11:3). இவளை மணந்து கொள்ள தாவீது இவளது கணவன் ஊரியாவைக் கொலைச் செய்தார் (11:17-27). பதுசேபாவோடு தாவீது கொண்ட இழி வான செயல்தான் அபிசலோம் தாவீ துக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தபோது ஆலோசகர் பதவியிலிருந்து அகித்தோ பல் விலகிக் கிளர்ச்சியாளர் குழுவில் சேர்ந்ததற்குக் காரணமாக இருக்கலாம் (16:15).
இறையியல் மட்டத்தில், விவிலிய விவரிப்பு தாவீதைக் காட்டிக் கொடுத்த லில் அகித்தோபல் காட்டிய தாழ்ச்சியின் மையை, இவரது பேத்தியான பதுசேபா வோடு தாவீது இழிவாக நடந்துகொண்ட தற்கு தாவீது காட்டிய மனத்துக்கத்தோடு ஒப்பிட்டு வேறுபடுத்துகிறது (2 சாமு 12:13). இறைவன் தாவீதின் மன்றாட்டைக் கேட் டருளினார் (15:3). அகித்தோபலின் ஆலோ சனையை முழுவதும் மடமைமிக்கதாக்கி னார். இதை, அகித்தோபலுக்கு அளிக்கப் பட்ட தண்டனை என்பதைவிட, அபிசலோ முக்கு அளிக்கப்பட்ட தண்டனையாக எடுத் துக்கொள்ள வேண்டும் (17:14).