அகிபான், அகிமாசு, அகிமான்
அகிபான் (AHBAN-
(விவேகம் உள்ளவனின் சகோதரன், ஞானியின் சகோதரன்)
இவர் அபிசூர், அபிகயில் ஆகியோ ரின் புதல்வர்களில் ஒருவர். மோலீத்தின் சகோதரன். யூதர் குலத்தைச் சேர்ந்தவர். எரகுமேலின் குல மரபுப்பட்டியலில் இவர் பெயர் வருகிறது (1 நாள் 2:29).
அகிமாசு (AHIMAAZ-
(சினத்தின் சகோதரன்)
- சவுலின் மனைவியாகிய அகினோ வாமின் தந்தை அகிமாசு என்றழைக்கப் படுகின்றார் (1 சாமு 14:50).
- அகிமாசு தலைமைக் குருவான சாதேக்கின் மகனாவார் (2 சாமு 15:27: 1 நாள் 6:8.53). இவர் அசரியாவின் தந்தை யுமாவார் (1 நாள் 6:9). அபிசலோமின் கிளர்ச்சியின் பொழுது சாதோக்கும், அபி யத்தாரும் எருசலேமிலிருந்தனர். அகிமா சும், யோனத்தானும் தாவீதோடு தொடர்பு கொள்வதற்காக ஏன்-ரோகேல் நீரூற்றரு கில் மறைந்திருந்தார்கள். அங்கிருந்து தாவீதுக்குச் செய்தி அனுப்பிவந்தனர். அபிசலோமின் திட்டங்களனைத்தும் குருக் களாலும், கூசாயினாலும் இவர்களுக்கு அறிவிக்கப்பட்டன. ஆனால் அபிசலோ மின் ஆட்கள் ஒரு சிறுவனின் உதவியால் எதிரிகள் இருக்குமிடத்தை இனம் கண்டுக் கொண்டனர். எனவே அவர்கள் பகுரிமில் ஒரு வீட்டு முற்றத்திலுள்ள கிணற்றில் இறங்கி மறைந்து கொண்டார்கள் (2 சாமு 17:17 தொ). பின் அவர்கள் அபிசலோமின் திட்டங்களைத் தாவீதிடம் சொல்ல விரைந்துசென்றனர். மேலும் எப்பிராயி மில் நடந்தபோரில் அபிசலோமின் படை கள் முறியடிக்கப்பட்டன. அவரும் கொலை செய்யப்பட்டார். இந்த LOIT பெரும் வெற்றியைத் தாவீதிடம் அறிவிக்க அகிமாசு யோவாபிடம் அனுமதி கேட் டார். ஆனால் அவர் இந்த வெற்றியை அறிவிக்க அனுமதி அளிக்கவில்லை. ஏனென்றால் அபிசலோமின் இறப் பானது வெற்றியை மறைத்து தாவீதிற்கு ஆழ்ந்த வருத்தத்தை தரக்கூடும். எனவே நற்குணசீலர் அகிமாசை இந்த துக்கச் செய்தியைக் கூற அனுமதியளிக்கவில்லை. மாறாக ஒரு கூசியரை அனுப்பினர். இருப்பினும் அகிமாசு வலியுறுத்திக்கேட்டதால் அனுமதி வழங்கப்பட்டது. கூசியருக்கு முன்பே வந்து, அவர் மன்னரை அணுகித் தாங்கள் அடைந்த வெற்றியை அறிவித்தாரே ஒழிய அபிசலோமின் இறப்பினை எடுத்துச் சொல்ல அவரால் இயலவில்லை. பின்பு வந்த கூசியர் கிளர்ச்சி செய்தவரின் அவல முடிவை அறிவித்தார் (2 சாமு 18:19-33). அகிமா சின் பிற்கால வாழ்வு பற்றி ஒன்றும் தெரியவில்லை. அவரது தந்தை சாதோக் குக்குப்பின் பெரிய குருவானார் என்ப தற்கு ஒரு சான்றுமில்லை.
- தாவீதால் நியமிக்கப்பட்ட 12 மாவட்ட அதிகாரிகளில் ஒருவர் நப்தலி நாட்டிற்குத் தலைவனாவார் (1 அர 4:15). அரசருக்கும் அவரது அரண்மனைக்கும் வேண்டிய உணவுப் பொருட்களைச் சேகரித்துக் கொடுப்பது இவர்களுடைய வேலையாகும் (4:7). அகிமாசு சாலமோ னின் மகள் பாசமத்தை மணந்தார். சில ஆய்வாளர்கள் இப்பெயர் ஒரு அதிகாரி யின் தந்தையின் பெயராகும் என்றும் அந்த அதிகாரியின் பெயர் விடப் பட்டுள்ளது என்றும் கருதுகின்றனர். இவர் அகிமாசு 2-இல் குறிக்கப்படுவரே என்பது அவர்கள் கருத்தாகும்.
அகிமான் (AHIMAN –
( என் சகோதரன் கொடை ஆவான்)
- கெபிரோனில் வாழ்ந்த ஆனாக்கின் மூன்று புதல்வர்களில் ஒருவர் அதிமான் என்று அழைக்கப்படுகிறார் (எண் 13:32: யோசு 15:14; நீதி 1:10). இஸ்ராயேல் மக்கள் பாலஸ்தீனத்தில் குடியேறும் முன்னால் கெபிரோனிலும், எருசலேமிற்குத் தெற்கி லும் வாழ்ந்து கொண்டிருந்தவர்களும் அனாக்கின் வழிவந்தவர்களாகக் கருதப் பட்டனர். கெபிரோனில் இவர்கள் தோற் கடிக்கப்பட்டனர். இந்த வெற்றி நீதி 18:10 -இல் யூதாவைச் சேர்ந்தவர்களுக்கும், யோசு 15:14-இல் கலேபுக்கும் சாற்றிக் கூறப்பட்டுள்ளது.
அனாக்கின் வழிவந்தவர்களாகிய அகி மான். சேகாய், தல்மாய் ஆகியவர்களின் பெயர்கள் இவர்கள் அரமேயர்கள் என்று சுட்டுகிறது.
- ஒரு லேவியர். இஸ்ராயேலர் நாடு கடத்தப்பட்டுத் திரும்பியபின் எருசலேம் நகரில் வாழ்ந்தவர். ஆலயத்தின் நான்கு தலைமை வாயில் காப்பாளர்களில் அகிமானும் ஒருவராவார் (1 நாள் 9:17-18)