பிரசங்க குறிப்புகள் 661 – 670

பிரசங்க குறிப்புகள் 661 – 670

661.நாவு (சங்கீதம் 45 : 1)

 பலவிதமான நாவுகள்

  • 1. சங். 37: 30 (நீதியானதை பேசும்) நீதிமானுடைய நாவு.
  • 2. நீதி 12 : 18 (ஞானமுள்ளவைகளை பேசும்) ஞானமுள்ள நாவு.
  • 3. நீதி 15: 4 (ஆரோக்கியமான உபதேசத்தை பேசும்) ஆரோக்கியமுள்ள நாவு.
  • 4. நீதி 25 : 15 (மென்மையான உத்தரவு சொல்லும்) இனிய நாவு.
  • 5. ஏசா 50 : 4 (அறிவாக பேசும்) கல்விமானின் நாவு.

குறிப்புகள்

  • நாவு = நெருப்பு (யாக் 3 : 6)
  • நாவு = சுக்கான் (யாக் 3: 4)
  • நாவு = அநீதி நிறைந்த உலகம் (யாக் 3 : 6) ஆனால் நீதிமானுடைய நாவோ ஔஷதம்

662. யோவான் ஸ்நானன் ( 11 : 11, லூக்கா 7 : 28)

  • a. தேவனால் அனுப்பப்பட்டவன் (யோவா 1 : 6)
  • b. உன்னதமானவருடைய தீர்க்கதரிசி (லூக்கா 176)
  • C. ஆவியிலே பெலன் கொண்டவன் (லூக்கா 1 : 80) 

இவரின் சிறப்புகள் :

  • 1. அடையாளம் காட்டினவன் (யோவான் 1:29) இதோ உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. இயேசுவை மக்களுக்குக் காட்டினான்.
  • 2. அஸ்திபார உபதேசத்தை நாட்டினவன் (மாற்கு 1:4) அஸ்திபார உபதேசமாகிய பாவ மன்னிப்புக்கான ஞானஸ்நானத்தை அறிமுகம் செய்து அரங்கேற்றியவர்
  • 3. அடக்கமுள்ளவன் தன்னை தாழ்த்தினவன் (யோவான் 1:27)
    • a. நான் கிறிஸ்துவல்ல
    • b. நான் வார்த்தையல்ல, சத்தம்
    • C. அவர் பெருக நான் சிறுக
    • d. அவர் என்னிலும் பெரியவர்
    • e. அவர் பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கு தகுதியல்ல
  • 4. ஆலோசனை சொல்லுகிறவன். (லூக்கா 3: 11-14) தன்னிடம் வருகிறவர்களுக்கு தகுந்த ஆலோசனை கொடுத்தான். 
  • a) பொதுமக்களே இரண்டு அங்கி இருந்தால் ஒன்றை மற்றொருவனுக்கு கொடு 
  • b) ஆயக்காரரே அதிகமாக வசூல் செய்யாதீர்கள் 
  • c) அரசு அதிகாரிகளே! உங்கள் சம்பளமே போதுமென்று இருங்கள்
  • 5. அதிகாரத்தோடே கடிந்து கொள்ளுகிறவன். (மத் 14:4) ஏரோதை முகமுகமாய் தன் சகோதரனின் மனைவியை வைத்துக்கொண்டிருப்பது தவறு என்று கண்டித்தான்.

663. ஆவியிலே…. (.அப் 1 : 8)

ஆவியினாலே நாம் செய்ய வேண்டியவைகள்:

  • 1. பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி (எபே 6 : 18)
  • 2. ஆவியிலே ஆராதித்தல் (பிலிப் 3: 3)
  • 3. ஆவியிலே சந்தோஷமாயிருத்தல் (1 தெச 1:6)
  • 4. ஆவியிலே சரீரத்தின் கிரியைகளை அழித்தல் (ரோம 8 : 13)

குறிப்பு :

  • இல்லாத போதும் நாம் ஆவியில் சந்தோஷமாய் இருந்தால் சாத்தான் வெட்கப்பட்டுப் போவான் 

664. சகோதரர்கள் ஒருமித்த வாசம் (. சங்கீதம் 133)

இதனால் வரும் காரியங்கள் :

  • 1. நன்மை (Gain)
  • 2. இன்பம் (Pleasant)
  • 3. தைலம் (பரிசுத்தம்-Holyness) (யாத் 30 : 32) 
    • ஆசாரியன் மேல் ஊற்றப்படுகிற தைலம் பரிசுத்தத்திற்கு அடையாளமாய் இருக்கிறது.
  • 4. பனி (செழுமை-Prosperity)
    • மகா வறட்சியான காலத்திலேயும் எர்மோன், சீயோன் மலை மீது இரவில் பனிபெய்வதால் மழை பெய்தது போல் ஈரமாக இருக்கும்.
  • 5. ஆசீர்வாதம் (Fullness)
  • 6. ஜீவன் (Life)

665. ஞானவான்களாய் நடந்து கொள்ளுதல்! ( எபே 5 : 15)

எபேசு சபைக்கு பவுல் எழுதுகிறபொழுது பரிசுத்தவான்களே, ஞானமற்றவர்களைப் போல் நடக்காமல் (முட்டாள்களைப்போல்) ஞானவான்களைப்போல் நடக்க வேண்டும் என்கிறார்.

 

ஞானவான்களாய் நடக்க நமக்கு தேவையான 5 காரியங்கள் :

  • 1. ஞானபோஜனத்தை புசிக்க வேண்டும். (I கொரி 10:2) ஞானபோஜனம் = மன்னா
    • பழைய ஏற்பாட்டில் மன்னா வானத்திலிருந்து இறங்கியது. புதிய ஏற்பாட்டில் நாம் புசிக்கவேண்டிய ஞானபோஜனம் என்னவென்று தெரியுமா? பிதாவின் சித்தம். (யோவான் 4: 34)
  • 2. ஞானபானம் குடிக்க வேண்டும். (பரிசுத்தாவியின் நிறைவு) (I கொரி 10 : 2)
  • 3. ஞானவரங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். (1 கொரி 14: 1)
  • 4. ஞான இருதயம் வேண்டும் யாத் 36:2, யாத் 35 : 25 தேவனுடைய சித்தத்தையும் திட்டத்தையும் புரிந்து கொள்ளத்தக்க விவேகமுள்ள இருதயம் நமக்கு வேண்டும்.
  • 5. ஞானபாடல்கள் (எபே. 5:19) எப்பொழுதும் ஆவிக்குரிய பாடல்களைப் பாடி ஆவியில் சந்தோஷமாயிருக்க வேண்டும்.

666. கேட்டின் மகனாகிய யூதாஸ்!

குறிப்பு :

  • a. நீண்ட நேர ஜெபத்திற்கு பிறகு இயேசுவே இவனை அப்போஸ்தலனாக தேர்ந்தெடுத்தார்.
  • b. மற்ற அப்போஸ்தலர்களைப் போல் பிசாசுகளைத் துரத்த வரம் பெற்றிருந்தான்.
  • c. நம்பிக்கைக்குரியவனாகி பணப்பையை வைத்திருந்தான். ஆனாலும் ஆகாதவன் ஆனான். 

அது ஏன்? ஏன்? காரணங்கள் :

  • 1. திருடன் (யோவான் 12 : 6)
  • 2. தீய எண்ணம் உள்ளவன். (மத் 26:15) (பொருளாசை)
  • 3. கடின இருதயமுள்ளவன் (மத் 26: 25) கர்த்தர் அன்பாக பேசியும், மனந்திரும்பவில்லை.
  • 4. தீய வார்த்தை (மத் 26: 48) ‘அவர்’ என்று சொல்வதற்குப் பதிலாக ‘அவன்’ என்று தரக்குறைவாக பேசினான்.
  • 5. மாய்மாலமான வாழ்க்கை (மத் 26 : 49) காட்டியும் கொடுத்தான், கட்டியும் பிடித்தான்.
  • 6. சாத்தான் அவனுக்குள் புகுந்தான். (லூக்கா 22 : 3)

667. ஆரம்ப கிறிஸ்துமஸ் (லூக்கா 2: 11)

  • 1. லூக்கா 2:19 மரியாள் சிந்தனை பண்ணினாள். (கிறிஸ்துமஸ் அன்று கிருபைகளை சிந்திப்போம்)
  • 2. லூக்கா 2:17 மேய்ப்பர்கள் பிரசித்தம் பண்ணினார்கள். (கிறிஸ்துமஸ் அன்று கிறிஸ்துவை பிரசங்கம் பண்ணுவோம்)
  • 3. மத்தேயு 2: 12 சாஸ்திரிகள் வேறு வழியாய் திரும்பினார்கள். (கிறிஸ்துமஸ் அன்று நமது வழிகளை விட்டு தேவ வழியில் நடப்போம்)

668. திரும்ப உங்கள் ஸ்தானத்தில் நிறுத்துவார்! (2 நாளா 33:13-16)

மனாசே செய்த ஐந்து காரியங்கள் :

  • 1. Ii நாளா 33:15 விக்கிரகங்களை எடுத்துப்போட்டான்.
  • 2. II நாளா 33: 15 தான் கட்டின பலிபீடங்களை எடுத்தான்.
  • 3. II நாளா 33: 16 கர்த்தரின் பலிபீடத்தை செப்பனிட்டான்.
  • 4. II நாளாக 33: 16 காணிக்கை செலுத்தினான்.
  • 5. II நாளாக 33: 16 ஜனங்களுக்கு எடுத்துரைத்தான்.

669. வருகைக்கு அடையாளங்கள்! (மத்தேயு 24:3)

  • 1. அறிவு பெருகிப்போகும் (தானி 12: 4)
  • 2. வேகமான வாகனங்கள் (நாகூம் 2 : 4)
  • 3. வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும் (மத் 24:29)
  • 4. சுவிசேஷம் எங்கும் அறிவிக்கப்படும் (மத் 24: 14)
  • 5. அத்திமரம் (இஸ்ரவேல்) துளிர்விடும் (மத். 2432)

670. ஊழியன் எப்படி இருக்க வேண்டும்? (. எபே 3:7)

  • 1. எபி 5: 4 – அழைக்கப்பட்டவனாய் இருக்க வேண்டும்
  • 2. யாத் 32: 26 பிரதிஷ்டை உள்ளவனாய் இருக்க வேண்டும்
  • 3. உபா 18 : 1 – சுதந்திரமில்லாதவனாய் இருக்க வேண்டும்
  • 4. லேவி 8:12 – அபிஷேகம் பண்ணப்பட்டிருக்க வேண்டும்
  • 5. லேவி 8: 6,9 பரிசுத்த வஸ்திரத்தோடு இருக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *