பிரசங்க குறிப்புகள் 691-700
691. கிருபை! கிருபை!! ( லூக்கா 1 : 28)
யாருக்கு எப்போது
- 1. நம்பிக்கையுள்ளவனுக்கு : சங். 32:10
- 2. தாழ்மையுள்ளவனுக்கு : நீதி. 3 : 34
- 3. அவருக்கு பயப்படுவோருக்கு : சங். 103 : 11
- 4. நல்லோசனை செய்வோருக்கு நீதி. 14 : 22
- 5. ஸ்தோத்தரிப்போருக்கு 2 கொரி 4: 15
692. இதோ நுகங்கள் முறிகிறது! (.எசே 34:27)
- நுகங்கள் முறியும் காலம் இதுவே -ஆதி. 27:40
நுகங்கள் எப்படி முறியும்?
- 1.பிதாவாகிய தேவனின் வல்லமையால் லேவி 26: 13
- 2. குமாரனாகிய தேவனின் பிறப்பால் – பிரசன்னத்தால் ஏசா 9: 4-6
- 3. பரிசுத்த ஆவியாகிய தேவனின் அபிஷேகத்தால். ஏசா 10: 27
குறிப்பு :
- தமிழ் வேதாகமத்தில் அபிஷேகத்தின் நுகம் என்று எழுதப்பட்டுள்ளது. அபிஷேகத்தினால் என்பதே சரியான மொழிபெயர்ப்பு.
693. ஆம் சங்கீதத்தில்!
- 1. விடுவிக்கிற கர்த்தர் வசனம் 14
- 2. உயர்த்துகிற கர்த்தர் வசனம் 14
- 3. பதிலளிக்கும் கர்த்தர் வசனம் 15
- 4. உடனிருக்கும் கர்த்தர் வசனம் 15
- 5. தப்புவிக்கும் கர்த்தர் வசனம் 15
- 6. கனப்படுத்தும் கர்த்தர் வசனம் 15
- 7. திருப்தியாக்கும் கர்த்தர் வசனம் 16
694. என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர் (சங்கீதம் 23:5)
பழைய ஏற்பாட்டில் சிறப்பு அபிஷேகம் பெற்ற மூன்று கூட்டத்தினர்.
அ) ஆசாரிய அபிஷேகம் (சங். 133:2)
- உதாரணம் ஆரோன் ஆசாரிய அபிஷேகம் எதற்கு? நாம் பரிசுத்தமாய் வாழ்வதற்கு.
ஆ) இராஜ அபிஷேகம்
- உதாரணம் : சவுல், தாவீது (I சாமு 9 16, 16:12) இராஜ அபிஷேகம் எதற்கு? கழுதையை தேடவோ, ஆட்டை மேய்க்கவோ அல்ல. ஆளுகை செய்யவும், அதிகாரத்தை பயன்படுத்தவுமே.
இ) தீர்க்கதரிசன அபிஷேகம்.
- உதாரணம் எலிசா (1 இராஜா 19 16) தீர்க்க தரிசன அபிஷேகம் எதற்கு? தேவனுடைய வார்த்தையை சொல்லுவதற்கு. தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதற்கு. நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமே ஒரு தீர்க்கதரிசி தான். (ஆதி. 20: 7)
ஆகவே, நீங்கள் பரிசுத்தமாய் வாழ நீங்கள் ஆளுகை செய்ய ஆசாரியராய் இராஜாவாய் நீங்கள் வேதத்தை விளம்ப தீர்க்கதரிசியாய் மும்மடங்கு அபிஷேகம் பெற்று உள்ளீர்கள்
695. சிலநேரங்களில் இதுவும் தேவை தான். (பவுலின் வாழ்விலிருந்து)
- பவுல் சினங்கொண்டு அப். 16 : 18
- ஆவிகளை பகுத்தறிய வேண்டும். இனங்கண்டு சினங்கொண்டு கடிந்து கொள்ள வேண்டும்.
- பவுல் வைராக்கியம் கொண்டு . அப் 18 : 5
- உபதேசத்தின் மேல், கிறிஸ்துவின் மேல் வைராக்கியம் நமக்கு தேவை.
- பவுல் தைரியங் கொண்டு தர்க்கித்தான் – அப். 9 : 29
- சத்தியத்திற்காக வாதாட அஞ்சக்கூடாது.
கொஞ்சம் சினம், கொஞ்சம் வைராக்கியம், கொஞ்சம் தர்க்கம் நமக்கு தேவை.
696. உயிர்த்தெழுந்த இயேசு தந்தது. ( யோவான் 20:19-23)
- 1. தேவ சமூகம் (நின்று) – Presence யோவான் 20:19
- 2. சமாதானம் – Peace யோவான் 20 : 19
- 3. சந்தோஷம் Pleasure யோவான் 20: 20
- 4. பரிசுத்தஆவி Power யோவான் 20:22
- 5. சிலாக்கியம் Privilege யோவான் 20 : 23
697. கர்த்தரை கண்ட அன்னாள்! ( லூக்கா 2 :36)
- முதலாம் வருகையில் அன்னாள் கிறிஸ்துவை கண்டதுபோல் நாமும் அவரை இரண்டாம் வருகையில் முகமுகமாய் தரிசிப்போம். நிலையோ, வயதோ (விதவை, வயதானவள்) அவளை பின்னடையச் செய்யவில்லை.
அன்னாளுக்கு இருந்த ஐந்து குணாதிசயங்கள்.
- 1. தேவாலயத்தை விட்டு நீங்காமல் – லுாக். 2: 37
- 2. உபவாசித்து – லூக். 2: 37
- 3. ஜெபம் பண்ணி . லூக்கா 2: 37
- 4. ஆராதனை செய்து லூக். 2:37
- 5. இயேசுவைக் குறித்து பேசினாள் லூக் 2:38
698. கிழக்குத் திசை சாஸ்திரிகள்! (மத்தேயு 2: 1-12)
- 1. ஆராய்ந்ததினால் அறிந்து கொண்டு வந்தார்கள் மத். 2: 2
- 2. ஆவலுடன் ஆராதிக்க வந்தார்கள் (பணிந்து கொள்ள) . மத் 2: 2
- 3. ஆனந்தமாய் அள்ளி கொடுத்தார்கள் – மத். 2: 11
- 4. ஆண்டவரின் ஆலோசனை பெற்று திரும்பினார்கள் மத். 2: 12
- 5. ஆட்சியாளர்களின் ஆணையை அலட்சியம் பண்ணினார்கள் – மத். 2 : 12
699. சர்வ வல்லவர்! (மாற் 2 : 2-12)
- 1. போதிக்கும் கிறிஸ்து – மாற்கு 2:2
- 2. விசுவாசத்தை கனப்படுத்துகிறவர் – மாற்கு 2: 5
- 3. பாவங்களை மன்னிக்கிறவர் – மாற்கு 2: 5
- 4. சிந்தைகளை அறிகிறவர் மாற்கு 2:8
- 5. வியாதிகளை சுகமாக்குகிறவர் – மாற்கு 2: 11
700. பிரியமான காயுவே! (III யோவான் 1 முதல் 14 வரை)
- 1. பிரியமானவன் வசனம் 2
- 2. சத்தியத்தில் நடக்கிறவன் வசனம் 3
- 3. உண்மையுள்ளவன் வசனம் 3
- 4. அன்புள்ளவன் வசனம் 6
- 5. சத்தியத்தில் உடன் வேலையான் வசனம் 8