பிரசங்க குறிப்புகள் 701-710

பிரசங்க குறிப்புகள் 701-710

701. நமக்கு எட்டாத பெரிய காரியங்கள். (எரேமியா 33ஆம் அதிகாரம்)

  1. நான் ஆரோக்கியம் வரப்பண்ணுவேன் (வசனம் 6)
  • அ. செளவுக்கியம்
  • ஆ. சமாதானம்
  • இ. குணமாகுதல்
  • ஈ. பூரணசத்தியம்
  1. நான் சிறையிருப்பைத் திருப்பி முன்போல் கட்டுவேன் (வசனம் 7)
  • அ. முன்பு இருந்ததுபோல
  • ஆ. அக்கிரமத்துக்கு நீங்கலாக்கி
  • இ. சுத்திகரித்து
  1. நான் சொன்ன நல்வார்த்தைகளை நிறைவேற்றுவேன். (வசனம் 14)
  2. நான் வர்த்திக்கப் பண்ணுவேன் (வசனம் 22)
  • அ. ஊழியம் செய்கிறவர்கள்

702. சீமோன் பேதுரு! (யோவான் 21: 17)

  • 1. ஸ்திரிகளும் முந்தி வந்த யோவானும் அஞ்சி வெளியே நின்றார்கள். பேதுருவோ கல்லறையின் உள்ளே சென்றான். – கிறிஸ்துவுக்காய் துணிவு. (யோவான் 20: 6)
  • 2. யோவானோ அது கர்த்தர் என்றான். சீமோனோ பாய்ந்து கடலில் குதித்து வந்தான். – கிறிஸ்துவுக்காய் கனிவு (யோவான் 21:7)
  • 3. சீஷர்களை பார்த்து மீன்களை கொண்டு வாருங்கள் என்று சொன்னார். அவர்கள் சும்மாயிருந்து விட்டார்கள். 153 மீன்கள் உள்ள வலையை பேதுரு தனியே இழுத்து வந்தான். கிறிஸ்துவுக்காய் உழைப்பு (யோ. 21: 11)
  • 4. இயேசு பேதுருவுக்கு எத்தனையோ சிலாக்கியங்களை கொடுத்தார். அவனோ யோவான் மேல் அக்கறையுள்ளவனாக இருந்தான். ஆத்துமாக்களுக்காய் பரிவு (யோ. 21 :21)
  • 5. மரணத்திலும் அவரை பின்பற்றி அவருடைய வார்த்தையின்படியே அவருக்கு பின் சென்றான். கிறிஸ்துவுக்காய் அர்ப்பணிப்பு (யோ. 21 : 19)

703. ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? (யோபு 28: 12)

ஞானத்தைப் பெற வழிகள் :

  • 1. கர்த்தருக்கு பயப்படு – யோபு 28 : 28 (நீதி 1:7)
  • 2. வசனத்தைக் கைக்கொள் ພໍ 119: 98 (சங்கீதம் 119: 100) ( கொலோ 3: 16) ( சங்கீதம் 19 : 7)
  • 3. தாழ்மையில் சிந்தைகொள் நீதி 11 : 2
  • 4. ஆலோசனையை ஏற்றுக்கொள் – நீதி 13 : 10 (நீதி 15:32)
  • 5. கிறிஸ்துவே ஞானம் தருகிறவர் 1 கொரி 1:24 (1 கொரி 1: 31)
  • 6. ஆவியானவர் ஞானம் அருள்வார் (1 கொரி 12: 8) ஏசா 11 : 2
  • 7. ஜெபிக்கிறவனுக்கு ஞானம் கிட்டும் (ஞானம் பரத்திலிருந்து வரும் . யாக் 1:5 . 3: 17)

704. முத்தான முதலாம் சங்கீதம்! இந்த சங்கீதம் தரும் ஆசீர்வாதங்கள் :

  • 1. நாம் பாக்கியவான்கள்.
  • 2. நாம் கனி தருபவர்கள்.
  • 3. நாம் இலையுதிராதவர்கள்.
  • 4. நாம் காரியசித்தியுள்ளவர்கள். (நாம் செய்வதெல்லாம் வாய்க்கும்)

இந்த சங்கீதம் சுட்டிக்காட்டும் இரண்டு கூட்டம்.

  • 1. துன்மார்க்கன், 
  • 2. நீதிமான்கள்.

துன்மார்க்கன் யார்?

  • 1. சிறுமைப்பட்டவனை துன்பப்படுத்துகிறவன் சங்கீதம் 8. 10:2
  • 2. நீதிமான்களை பார்த்து பற்கடிக்கிறவன் சங்கீதம் 37: 12
  • 3. நீதிமான்களை அசட்டை செய்கிறவன் . சங்கீதம் 10: 3
  • 4. கடன் வாங்கி திருப்பி தராதவன் . சங்கீதம் 37: 21
  • 5. வேதத்தை விட்டு விலகுகிறவன் . சங்கீதம் 119: 53

நீதிமான் யார்?

  • 1. இரட்சிக்கப்பட்டவன் . சங்கீதம் 138: 15
  • 2. இராஜ பாதையில் நீதி 15 19 (நேர்மையான வழியில் செல்பவன்)
  • 3. உதாரமாய் கொடுப்பவன் -நீதி. 21:26
  • 4. மற்றவர்களை அவமானப்படுத்தாதவன் மத். 1:19
  • 5. ஊக்கமாய் ஜெபிப்பவன் யாக். 5: 16

705. கர்த்தர் நமக்கு கேடகமானவர். (ஆதி 15 : 1)

அவர் நமக்கு கேடகமானால்……

  • 1. காருண்யம் உண்டு . சங்கீதம் 5: 12
  • 2. இரட்சிப்பு உண்டு 2 சாமு 4 22 : 36
  • 3. விசுவாசம் உண்டு எபே. 6: 16
  • 4. சத்தியம் உண்டு சங்கீதம். 91: 4
  • 5. ஞானமும் திரவியமும் உண்டு பிர. 7 : 12

706. கர்த்தரில் பெலன் கொள்ளுங்கள். (. சங்கீதம் 84: 5)

  • 1. மகிழ்ச்சியாயிருப்பதே நமது பெலன் . நெகே8: 10
  • 2. பரிசுத்த ஆவியே நமது பெலன் . அப் 1:8
  • 3. கர்த்தருக்குக் காத்திருப்பதே நமது பெலன் ஏசா 40: 31
  • 4. அமரிக்கையும் நம்பிக்கையுமே நமது பெலன் ஏசா 30 : 15

707. நீதியின் பலிகளைச் செலுத்துங்கள். (. சங்கீதம் 4:5)

  • 1. விசுவாசமாகிய பலி பிலி. 2: 7
  • 2. ஆனந்த பலி . 27: 6
  • 3. ஸ்தோத்திர பலி சங்கீதம் 13: 15

708. ஆவியானவர் என்ன செய்கிறார்? (ரோமர் 8ஆம் அதிகாரம்)

  • 1. நம்மை குறித்து சாட்சிக்கொடுக்கிறார் வசனம் 16
  • 2. பெலவீனங்களில் உதவி செய்கிறார் வசனம் 26
  • 3. நமக்காக வேண்டுதல் செய்கிறார் வசனம் 26
  • 4. நம்முடைய சரீரங்களை உயிர்ப்பிக்கிறார் வசனம் 11

709.கண்ணி தெறித்தது!! (சங்கீதம். 124: 7)

வேடனுடைய கண்ணி சங். 91 : 3

  • இது சிக்க வைக்கும். மரண கண்ணிகள் நீதி 13:16
  • சாக வைக்கும்.

கண்ணிகள் எவை?

  1. மனுஷருக்கு பயப்படுவது கண்ணி .நீதி  29: 2
  2. பரிசுத்தமானதை விழுங்குவது கண்ணி .நீதி 20 : 25 (லேவி 27: 30)
  • தசமபாகம் -பரிசுத்தம் லேவி 27: 30
  • ஓய்வுநாள் – பரிசுத்தம் லேவி 23: 3
  1. நேர்ந்து கொண்டபின் யோசிப்பது கண்ணி- நீதி. 20:25 (பிரசங்கி 5: 5)
  2. அந்நிய தேவர்களைச் சேவிப்பது கண்ணி உபா.7: 16 (நியா 3: 2)
  3. ஐசுவரியவானாக விரும்புவது கண்ணி- Iதீமோ 6:9

 கண்ணிக்கு தப்பும் வழி எது?

  • 1. ஞானியின் போதகம் நீதி. 13:14
  • 2. தேவனுக்கு பயப்படுதல் – நீதி 14:27
  • 3. தன் ஆத்துமாவை காத்துக்கொள்ளுகிறவன் நீதி 22 : 5

710. உன் ஊழியத்தை நிறைவேற்று! (II தீமோத்தேயு 4:5)

ஊழியங்களில் வித்தியாசம் உண்டு 1 கொரி 12:5 விசுவாசிகள் செய்யத்தக்க சில குறிப்பிட்ட ஊழியங்கள் உண்டு. அதை மட்டும் நீங்கள் நிறைவேற்றுங்கள்.

 

நீங்கள் செய்யத்தக்க ஊழியங்கள் :

  • 1. அழைத்தவரின் புண்ணியத்தை அறிவியுங்கள். 1 பேது 2: 9 (சாட்சியாயிருங்கள் அப். 1: 8)
  • 2. புத்தி சொல்லுங்கள் எபி. 10: 25
  • 3. ஆஸ்திகளால் தாங்குங்கள் லூக். 8: 3
  • 4. பின்மாற்றக்காரர்களை திருப்புங்கள் யாக். 5: 20
  • 5. சரீர உழைப்பினால் தாங்குங்கள் ரோமர். 16 : 12 (சரீர பிரயாசம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *