அகியா

அகியா (AHIJAH -யாவேயின் சகோதரன்)

  1. சவுல் காலத்தில் சீலோவில் குருவாக இருந்தவர்

அகிதூபுவின் மகனாவார். குருவாகிய ஏலியின் மகனாகிய பினகாசின் பேரனுமாவார் (1 சாமு 14:3). கிபயாவில் தங்கியிருந்த சவுலின் படை வீரர்களோடு சேர்ந்து அவருக்குப் பணி புரிந்தார். ஏபோதை அணிந்திருந்தார். உடன்படிக்கைப் பெட்டகத்தைக் கண் காணிக்கும் பொறுப்புப் பெற்றிருந்தார். இந்த ஏபோதும், உடன்படிக்கைப் பெட்டகமும் இறைவனது விருப்பத்தை அறிவதற்குரிய அடையாளங்களாகப் பயன்படுத்தப்பட்டன (1 சாமு 14:18-19. 41-42). தலைமைக்குருக்கள் பெயர் பட்டிய லில் இப்பெயர் இடம் பெறவில்லை (1 நாள் 6:50-53: எஸ் 7:2-5). இவர் அகிமே லக்கின் மூத்த சகோதரராகவும் முதியவ ராகவும் இருந்திருக்கலாம். பிள்ளை யில்லாது இறந்திருக்கலாம் அல்லது நோபு என்ற ஊரிலுள்ள குருவாகிய அகிதூபுவின் மகனாகிய அகிமெலக்கு என்பதுதான் இவருடைய உண்மையான பெயர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர் (1 சாமு 21-22).

  1. சீலோவின் இறைவாக்கினரான அகீயா

முதலில் இஸ்ராயேலரின் முதல் அரசராகிய எரொபயாமின் சார்பாளராக வும், பின்பு எதிர்ப்பார்ப்பாளராகவும் இருந்தார் (1 அர 11:14: 12:15; 15:29; 2 நாள் 10:15). எரொபயாம் பத்துக்குலத்தவர்களுக் குத் தலைவராகப் போகின்றார் என்று அகியா வாக்களித்து, அவரைச் சாலமோ னுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் படித் தூண்டிவிடுகிறார் (1 அர 11:29 தொ).

இதனை உணர்த்துவதற்காகத் தான் அணிந்திருந்த புதிய சால்வையை எடுத்து. பன்னிரண்டு துண்டுகளாக்கிப் பத்துத் துண்டுகளை அவருக்கு அளிக்கின்றார். இதைக் கேள்வியுற்ற சாலமோன் எரொ பயாமைக் கொல்ல வழி தேடுகின்றார். ஆனால் அவர் ஓடி ஒளிந்து கொள்கின் றார். சாலமோனின் இறப்பிற்குப்பின் எரொபயாம் மன்னனாகிறார். ஆனால் சாலமோனைவிட எரொபயாம் ஒழுக்கத் தில் சிறந்தவராக இல்லை. மேலும் அவரது மகன் நோயுற்றிருக்கும் பொழுது ஆண்டவரின் விருப்பம் என்ன என்று இறைவாக்கினர் அகியாவிடம் கேட்டறிய தனது மனைவியை மாற்றுடையில் அனுப்புகின்றார். அகியா அவளை இனம் கண்டுகொண்டு. எரொபயாமின் மகனது திடீர் இறப்பினையும், அவரது பாவங் களின் விளைவாக அவரது சந்ததியின் அழிவினையும் எடுத்துக் கூறுகின் றார். (1 அர 14:1-20: 15:29-30). 2 நாள் 9:29-இல் சாலமோனின் செயல்கள் பற்றி எழுதிய வர்களுள் அகியா ஒருவராகக் குறிக்கப் படுகிறார்.

குருவாகிய ஏலியின் மகனாகிய பினகாசின் பேரனுமாவார் (1 சாமு 14:3). கிபயாவில் தங்கியிருந்த சவுலின் படை வீரர்களோடு சேர்ந்து அவருக்குப் பணி புரிந்தார். ஏபோதை அணிந்திருந்தார். உடன்படிக்கைப் பெட்டகத்தைக் கண் காணிக்கும் பொறுப்புப் பெற்றிருந்தார். இந்த ஏபோதும், உடன்படிக்கைப் பெட்டகமும் இறைவனது விருப்பத்தை அறிவதற்குரிய அடையாளங்களாகப் பயன்படுத்தப்பட்டன (1 சாமு 14:18-19. 41-42). தலைமைக்குருக்கள் பெயர் பட்டிய லில் இப்பெயர் இடம் பெறவில்லை (1 நாள் 6:50-53: எஸ் 7:2-5). இவர் அகிமே லக்கின் மூத்த சகோதரராகவும் முதியவ ராகவும் இருந்திருக்கலாம். பிள்ளை யில்லாது இறந்திருக்கலாம் அல்லது நோபு என்ற ஊரிலுள்ள குருவாகிய அகிதூபுவின் மகனாகிய அகிமெலக்கு என்பதுதான் இவருடைய உண்மையான பெயர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர் (1 சாமு 21-22).

  1. சீலோவின் இறைவாக்கினரான அகீயா, 

முதலில் இஸ்ராயேலரின் முதல் அரசராகிய எரொபயாமின் சார்பாளராக வும், பின்பு எதிர்ப்பார்ப்பாளராகவும் இருந்தார் (1 அர 11:14: 12:15; 15:29; 2 நாள் 10:15). எரொபயாம் பத்துக்குலத்தவர்களுக் குத் தலைவராகப் போகின்றார் என்று அகியா வாக்களித்து, அவரைச் சாலமோ னுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் படித் தூண்டிவிடுகிறார் (1 அர 11:29 தொ).

இதனை உணர்த்துவதற்காகத் தான் அணிந்திருந்த புதிய சால்வையை எடுத்து. பன்னிரண்டு துண்டுகளாக்கிப் பத்துத் துண்டுகளை அவருக்கு அளிக்கின்றார். இதைக் கேள்வியுற்ற சாலமோன் எரொ பயாமைக் கொல்ல வழி தேடுகின்றார். ஆனால் அவர் ஓடி ஒளிந்து கொள்கின் றார். சாலமோனின் இறப்பிற்குப்பின் எரொபயாம் மன்னனாகிறார். ஆனால் சாலமோனைவிட எரொபயாம் ஒழுக்கத் தில் சிறந்தவராக இல்லை. மேலும் அவரது மகன் நோயுற்றிருக்கும் பொழுது ஆண்டவரின் விருப்பம் என்ன என்று இறைவாக்கினர் அகியாவிடம் கேட்டறிய தனது மனைவியை மாற்றுடையில்

  1. இவர் இஸ்ராயேலின் அரசராவார்.

பாசாவின் தந்தையாவார்.இசக்கார் குலத்தின் உறுப்பினராவார் (1 15:27.33:21:22:20 9:9). அர

  1. யூதா குலத்தைச் சேர்ந்த எரகுமே லின் புதல்வர்களில் ஒருவர் (1 நாள் 2:25).
  1. பென்யாமின் குலத்தைச் சேர்ந்த பெலாவின் மகன் (1 நாள் 8:7). 8:4-இல் இவர் அகோவா என்றழைக்கப்படுகிறார்.
  1. தாவீதின் வலிமைமிக்க வீரர்களில் ஒருவர். பெலோனியர் என்றும் அழைக் கப்படுகிறார் (1 நாள் 11:36).
  1. தாவீது அரசர் காலத்தில் இருந்த ஒரு லேவியர். ஆலயத்தில் சில கருவூலங் களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டி ருந்தார் (1 நாள் 26:29).
  1. சீசாவின் மகனாகிய அகியா சால மோனது செயலராகவோ, எழுத்தாள ராகவோ இருந்தார் (1 அர: 4:3).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *