அகிரிப்பா (AGRIPPA)
யூதேயாவின் இரண்டு அரசர்களின் பெயர்.
- முதலாம் அகிரிப்பா அல்லது ஏரோது அகிரிப்பா (கி.மு. 10-கி.பி.44) என்பவர் யூதேயாவின் அரசர் (கி.பி. 41-44). அரித்தோபுலின் மகன். பெரிய ஏரோது. அசமோனிய மரபைச் சேர்ந்த மரியம்னே ஆகியோரின் பேரன். ஏரோது அந்திப்பாவின் ஒன்றுவிட்ட அண்ணன் மகன்.
இவர் தன்னுடைய குழந்தைப் பருவத் தையும், இளமைப் பருவத்தையும் உரோ மையில் கழித்தவர். அங்கு அவர் ஊதாரித்தனமாக வாழ்ந்தார். தன் தாயின் நண்பர்களின்மூலம் இந்த அரச போக வாழ்க்கையை அடைய முடிந்தது. குறிப்பாகத் தன்னுடைய தாயின் மரணத் திற்குப் பிறகு கடன்கொடுத்தவர்களின் தொல்லையைத் தாங்கமுடியாமல் உரோ மையைவிட்டு வெளியேற வேண்டியதா யிற்று. ஒரு நிலையில் இவர் தற்கொலை செய்துகொள்ளவும் நினைத்தார். ஆனால் தன்னுடைய மனைவியினுடையவும், அவரு டைய சகோதரன் ஏரோது அந்திப்பாவினு டையவும் உதவியால் திபேரியாவிலுள்ள கடைகளை மேற்பார்வையிடும் வேலை கிடைத்தது. இந்த வேலை நிரந்தரமாக உதவி செய்யவில்லை. ஏனெனில் அவரு டைய மனைவியின் இரு சகோதரர்கள் தங்களுக்குள் சண்டைபோட்டுக் கொண் டார்கள். ஆகவே வேலையை ராஜிநாமா செய்துவிட்டார். பின்பு அந்தியோக்கியா விலுள்ள உரோமை ஆளுநருடன் நட்புக் கொண்டார். அவர் உதவி செய்தார். பல ஆண்டுகளுக்கிடையில் உரோமைக்குச் சென்று மறுபடியும் அரச வீட்டினரோடு உறவு கொண்டார். அவருடைய ஊதாரித் தனமான வாழ்க்கை அவரைக் கடனாளி யாகவே வைத்திருந்தது. அவருடைய கட்டுப்பாடற்ற பேச்சினால் அவர் சிறை யில் தள்ளப்பட்டார். ஆறு மாதங்களுக்குப் பின் திபேரியு இறந்த பின்பு சிறையி லிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
தன்னுடைய நெருங்கிய நண்பன் கலி குலா திபேரியுவுக்கு அடுத்து அரசனான பின் அகிரிப்பாவிற்கு நல்ல காலம் பிறந் தது. அவர் உடனே சிறையிலிருந்து விடு தலை செய்யப்பட்டதுமன்றி, பிலிப்பு, இலி சானியா ஆகியோரின் பகுதிகளின்மேல் சிற்றரசராக நியமிக்கப்பட்டார். கி.பி. 39-இல் ஏரோது அந்திப்பா ஆட்சி செய்த பகுதியும் இவருக்குக் கொடுக்கப்பட்டது. கி.பி. 41-இல் கலிகுலா கொலை செய்யப் ULL பிறகு கிளாதியு என்ற புதிய மாமன்னரிடமிருந்து யூதேயா. சமாரியா ஆகிய பகுதிகளையும் பெற்றார். இவ்வா றாகத் தன்னுடைய தாத்தா முன்பு ஆண்டு சென்ற பகுதிகளுக்கு அகிரிப்பா இப் பொழுது அரசனானார். அரசவை அங்கத்தினரும் ஆனார். மேலும்
கடைசியாக பாலஸ்தீனத்திற்கு அரச னானபொழுது அவருடைய நன்னடத்தை (உண்மையாகவோ. நடிப்போ தெரியாது) தன்னுடைய குடிமக்களான யூதர்களின் நல்ல எண்ணத்தைப் பெற்றுத்தந்தது. பரி சேயரின் நல்லெணத்தை இவர் பெற்றார். யூத மாநிலங்களில் அம்மக்களின் சட்டங் களையும், பாரம்பரியங்களையும் அனு சரிப்பதில் கவனம் செலுத்தினார். கோவி லுக்கு நன்கொடைகளைத் தாராளமாகக் கொடுத்தார். தன்னுடைய பக்திச் செயல் களை எல்லோரும் காணும்படி செய்வ தில் கவனம் செலுத்தினார்.
தன்னுடைய தாத்தா செய்தது போலவே. யூதர்கள் அல்லாதவர்கள் வாழும் பகுதிகளில் அவர்களுடைய அனு தாபத்தைப் பெறுவதற்காக கட்டிட வேலைகளை மேற்கொண்டார். அ.ப. 2-இன் படி யூதர்களைப் பிரியப்படுத்தும் படி இவர் சில ஆதிக் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினார். செபதேயுவின் மகனான யாக்கோபுவைச் சிரைச் சேதம் செய்தார். பேதுருவைச் சிறையில் இட்டார். உரோ மை அரசு இவருடைய நிர்வாகத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தது. சீரியா நாட்டுத் தூதுவரின் தூண்டுதலால் இவருடைய இரண்டு பேராசைமிக்க வேலை ஏற்பாடுகள் உரோமை அரசால் நிறுத்தப்பட்டன.
இவரது மக்கள் இவரை ஒரு கடவுள் என்று அறிக்கையிட்ட சில காலத்திற்குள் கி.பி. 44-இல். இவர் திடீரென செசரியா வில் காலமானார். இவருடைய மரணத் தைப்பற்றி இரண்டு வரலாறுகள் உள்ளன. அவற்றில் ஒன்று அ.ப. 12:19-23 ஆகும்.
- இரண்டாம் அகிரிப்பா அதாவது மார்கஸ் யுலியு அகிரிப்பா (கி.பி. 27-100) முதல் அகிரிப்பாவின் மகன்.
தந்தையைப் போலவே இவர் உரோ மையில் தன்னுடைய கல்வியை முடித் தார். தன் தந்தை இறந்தபொழுது இவர் 17 வயதினர். தன்னுடைய தந்தையைத் தொடர்ந்து அரசபீடம் ஏற கிளாதியு அனுமதி வழங்கினாலும், அவருடைய ஆலோசகர்கள் இதற்கு மாறாக ஆலோ சனை கூறினார்கள். ஆகவே யூதேயா, ஆளுநர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கி.பி. 50-இல் கிளாதியு, கால்க்கிசின்
நாட்டை (இக்கால லெபனோன்) அகிரிப் பாவுக்குக் கொடுத்தார். சிறிது காலத் திற்குப் பின்பு சிறிய பாகத்திற்குப் பதி லாக பெரிய பகுதியாக ஏரோது பிலிப்பு வின் பகுதிகளாகப் பத்தனேயா. திரக் கோனீது, காலனீத்து, அபிலேன் ஆகிய பகுதிகள் 53-இல் அகிரிப்பாவுக்கு அளிக் கப்பட்டன. பின்பு நீரோ காலத்தில் (54- இல்) கலிலேயா. பெரயாவின் சில பகுதி களும் ஏரோதுக்குக் கொடுக்கப்பட்டன. இவர் எருசலேமிலுள்ள அசமோனிய அரண்மனையைப் பெரிதாக்கினார். செச ரியாவில் பல கட்டடங்களை எழுப்பினார்.
இவருடைய சகோதரி பொனீக்கா வோடு இவர் கொண்டிருந்த தவறான நெருங்கிய உறவு துர்மாதிரிகையாக இருந்தது. மதத்தில் ஆர்வம் அற்றவரா கவே வாழ்ந்தார். இதை யூதர்கள் வெறுத்தனர். சில சமயம் சிதறிக்கிடந்த யூதர் களுக்குச் சார்பாக இவன் பேசினாலும், பெரும்பாலும் உரோமையர்களுக்குப் பிர மாணிக்கமாய் இருந்தார். குருத்துவத் தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டார். ஒருவேளை இந்தச் சமய அதிகாரத்தினால்தான் பெஸ்து பவுலின் தற்காப்புரையைக் கேட்க இவரைக் கேட்டி ருக்கலாம் (அ.ப. 25:13-26:32). ஆலயக் காரி யங்களில் இவர் அதிகாரம் செலுத்திய தால். எருசலேம் குருக்கள் இவரை வெறுத்தனர். கி.பி. 66-70-இல் உரோமை ருக்கும் யூதர்களுக்குமிடையே நடந்த போரில் இவர் உரோமையர் பக்கமே பிரமாணிக்கமாய் இருந்தார். போரின் முடிவில் இவர் தீத்துவோடு உரோமை சென்றார். அங்கு உரோமைப் படைத் தலைவனாக நியமிக்கப்பட்டார். இவருக் குப்பின் சந்ததியிருந்ததாகத் தெரிய வில்லை. இவரே ஆட்சி செய்த ஏரோதர் களில் கடைசியானவர். கி.பி.100-ஐ ஒட்டி இறந்தார். இதற்குப்பின் இவருடைய அரசு சீரியா மாநிலத்தின் ஒரு பகுதியாக்கப்பட்டது