அகுஸ்து

அகுஸ்து (AUGUSTUS – போற்றத் தகுதி உடையவர், மதிப்பிற்குரிய, உயர்த்தப்பட்ட) 

அகுஸ்து என்பது இயேசு பிறந்த பொழுது (லூக் 2:1) மத்திய தரைக்கடல் நாடுகளை ஆண்டுவந்தவரும் உரோமைப் பேரரசை நிறுவியவருமான கையு யூலியஸ் சீசர் அக்டாவியான் என்பவருக்கு உரோ மானிய ஆட்சிப் பேரவையினால் வழங்கப் பட்ட சிறப்புப் பெயராகும். இவ்வார்த்தை யானது “மதிப்பிற்குரிய* என்று பொருள் படும். இவருக்குப் பின்னால் உரோமை நகரை ஆட்சிபுரிந்த அனைத்து மன்னர் களும் இப்பெயரால் அழைக்கப்பட்டனர்.

அகுஸ்து சீசர் கி.மு. 63-இல் செப்டம் பர் திங்கள் 23-ஆம் நாள் பிறந்தார். இவரை இவரது மாமனார் யூலியு சீசர் தனது மகனாகவும் தனது உடைமை களுக்கு உரிமையாளராகவும் தத்தெடுத் துக்கொண்டார். இவருக்கு இராணுத்தி லும், அரசியலிலும் பயிற்சி கொடுத்தார். சீசர் இறந்தபின், கையு அக்டாவியன் என்ற தன் பெயருடன் தனது மாமனார் பெயரையும் சேர்த்து வைத்துக்கொண் டார். முதன் முதலில் தனது மாமனாரின் தலைமை மெய்க்காப்பாளராய் விளங்கிய மாற்கு அந்தோனியோடு தனது உறவை முறித்துக் கொண்டு, சீசரின் படைகள் தனக்கு ஆதரவளிக்க வழிதேடினார். பின் உரோமானிய அரசப்பேரவை அவருக்கு முழு ஆதரவு கொடுத்தது. ஆனால் விரை வில் அதனோடு கொண்டி ருந்த தொடர்பை முறித்துக்கொண்டு, கி.மு. 43-இல் உரோமை நகரைக் கைப்பற்றி னார். உடனே மாற்கு அந்தோனியையும், லெப்பிதஸ்ஸையும், தன்னோடு சேர்த்துக் கொண்டு 300 பேரவை உறுப்பினர்களை யும். இரண்டாயிரம் வீரர்களையும் சாவுக்கு உட்படுத்தினார். இம்மூவரும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு உரோமைப் பேரரசின் அதிகாரத்தைப் பங்கிட்டுக் கொண்டனர். மேலும் சீசரைக் கொலை செய்தவராகிய புருட்டஸ் என்பவரின் படைகளுக்கு எதிரரக போரிட்டு அவர்களைத் தோல்வியுறச் செய்தார். அக்காவியனின் சகோதரி அக்டாவி யாளை மாற்கு அந்தோனி மணந்து கொண்டார். அதன்பின் லெப்பிதஸ்ஸை ஆப்பிரிக்காவுக்கு அனுப்பிவிட்டு, மற்ற இருவரும் சிசிலியை ஆண்ட மக்கள் கட்சித் தளபதியின் படைகளைத் தோற் கடித்தனர்.

கி.மு. 41-க்குப்பின் அந்தோனி தனது கவனம் முழுவதையும் கிழக்குப் பகுதியில் செலுத்தி, பார்த்தியர்களுக்கு எதிராகப் போர்புரிந்து தோல்வியுற்றார். எனவே அவர் அலக்சாந்திரியாவுக்குச் சென்று ஓய்வு எடுத்தார். அங்கிருந்தபொழுது எகிப்து நாட்டு அரசி கிளியோபத்திரா வுடன் காதல் உறவு கொண்டார். கி.மு. 35-இல் தனது மனைவி அக்டாவியாளை நீக்கிவிட்டு, கிளியோபத்திராவை திரு மணம் செய்துகொண்டார். எனவே கி.மு. 31-இல் அகுஸ்து சீசர் கிளியோபத்திரா விற்கு எதிராகப் போர் புரிந்து எகிப்து நாட்டைக் கைப்பற்றி உரோமை ஆட்சிப் பகுதியுடன் இணைத்துக் கொண்டார்.

கி.பி. 14-வரை உரோம் பேரரசை ஆண்டுவந்தார். கி.மு. 27-இல் “அகுஸ்து” என்ற சிறப்புப் பெயர் இவருக்கு வழங் கப்பட்டது. படைகளையும் அயல்நாட்டுக் காரியங்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு. உள்நாட்டுக் காரியங் களை ஆட்சிப் பேரவையின் பொறுப்பில் கொடுத்தார். அதனுடைய எண்ணிக்கை யையும் குறைத்தார். கி.பி. 27-இல் தன் பதவிகளையெல்லாம் ராசினாமா செய்ய முன் வந்தார். ஆனால் ஆட்சிப் பேரவை அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக அவருக்கு அகுஸ்து” என்ற பட்டத்தை வழங்கியது. ஆட்சிப் பேரவை, உரோமை. இத்தாலியா, படைப்பாதுகாப்புத் தேவைப் படாத பகுதிகளையும் கவனித்துக் கொண் டது. மற்ற பகுதிகளையும், அயல் நாட்டுக் காரியங்களையும் அக்டாவியன் தனக்கே பொறுப்பான ஆளுநர்கள் வழியாக ஆட்சி செய்தார். உண்மையில் எல்லா அதிகாரத் தையும் தன்னிடமே கொண்டிருந்தாலும், தோற்றத்திற்கு இவர் தான் தனியாக இருந்து தன் மனம் போனபடி ஆட்சி புரியாமல் அரசப் பேரவையின் வழியாக ஆட்சிப் பொறுப்பை நடத்தினார். இவர் மக்களார்வத் தலைவர் அல்லது நடுவர். மாநிலங்களில் ஆளுநர்களின் வழியாக நேரடியாக ஆட்சி செய்தார். இவர்கள் அகுஸ்துவுக்கு மட்டுமே பொறுப்பானவர் கள். பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் பொழுதும், திட்டங்களை வகுக்கும்பொழு தும், இவர் தனித்திருந்து செயல்படா மல், அரசப் பேரவையில் கலந்துரையாடி முடிவு எடுத்தார். இவர் அரசபட்டத்தை விரும்பவில்லை; நிராகரித்துவிட்டார். இவற்றால் முதல் “குடிமகன்” என்ற பேற் றையும் உரிமையையும் பெற்றார். உரோ மையின் அரசியல் பெயரளவிற்குக் குடியர சாக இருந்த போதிலும் அகுஸ்து சர் வாதிகாரியாகவே விளங்கினார். அவர் காலத்திற்குமுன் பேரரசில் புகுந்த பல ஊழல்களைக் களைந்தார். இதனால் மக்களின் அன்பைப் பெற்றார். இவர் காலத்தில் உரோமைப் பேரரசு மிகுந்த உயர்நிலை அடைந்ததால், அது பொற் காலம் எனப்புகழ்பெற்றது. கி.பி. 14-இல் அகுஸ்து காலமான திலிருந்து அவர் மரபினர் பலர் உரோமைப் பேரரசர் களாக ஆண்டனர். இவர்கள் சீசரின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாகையால் சீசர் என்னும் பெயர் பேரரசர்களின் பட்டப்பெயராக மாறிற்று. இவருக்குப் பின், இவரது மருமகன் திபேரியு ஆட்சிப் பொறுப்பினை ஏற்றார்

புதிய ஏற்பாட்டில் பெயர் குறிப்பிடப் படும் பேரரசர்களுள் இவரும் ஒருவர். இவரது ஆட்சிக் காலத்தில்தான், வரி சேகரிப்பதற்காக. உலக முழுமையும் மக்கள் தொகைக் கணக்கிடும்படி இவர் விட்ட சுட்டளைக்கேற்ப இயேசு பெத்ல கேமில் பிறந்தார் (லூக் 2:1). தொடக்கத் தில் பெரிய ஏரோது அந்தோனிக்கு ஆதரவு அளித்தார். ஆனால் பின்பு பெரிய ஏரோதுக்கு அகுஸ்து புரவலனாக இருந்து, அவரை யூதர்களின் அரசனாக உறுதிப்படுத்தினார்.

புதிய ஏற்பாட்டில் பெயர் குறிப்பிடப் படும் பேரரசர்களுள் இவரும் ஒருவர். இவரது ஆட்சிக் காலத்தில்தான், வரி சேகரிப்பதற்காக. உலக முழுமையும் மக்கள் தொகைக் கணக்கிடும்படி இவர் விட்ட சுட்டளைக்கேற்ப இயேசு பெத்ல கேமில் பிறந்தார் (லூக் 2:1). தொடக்கத் தில் பெரிய ஏரோது அந்தோனிக்கு ஆதரவு அளித்தார். ஆனால் பின்பு பெரிய ஏரோதுக்கு அகுஸ்து புரவலனாக இருந்து, அவரை யூதர்களின் அரசனாக உறுதிப்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *