அக்கறை, கவனம் (Care & Carefulness)
- அக்கறைபடுவதற்காக அறிவுரைகள்:-
அக்கறை என்பது முதலாவதாக ஒரு செயலையோ, பணியினையோ செய்து முடிப்பதற்காக ஒரு மனிதன் கொண் டுள்ள கவனமாகும். தனது எல்லா கடமை களுக்குமான மனிதனுடைய இத்தகைய புத்திசாலித்தனமான மற்றும் சுறுசுறுப் பான, கவனத்தை விவிலியம் வியந்து பரிந்துரை செய்கிறது. எடுத்துக்காட்டாக முதலில் வீடு (பழ 31:10-31), ஒருவரது பணி (சீரா 38:24-34), அல்லது சமூகக் கடமை கள் (50:1-4) முதலிய தாழ்வான பொறுப்பு களைப்பற்றி அக்கறைகொள்ளவேண்டும் விவிலியமானது, ஞானத்தைத் தேடுதல் (ஞான 6:17: சீரா 39:1-110 அல்லது ஒழுக்க முன்னேற்றம் (1 திமோ 4:15; தீத் 3:8; 1 கொரி 12:25) அப்போஸ்தலரின் ஆர்வம் (2 கொரி 11:28; 4:8 தொ) போன்ற ஆன்மீக கடமைகளை இன்னும் சற்று உயரிய இடத்தில் வைக்கின்றது. தம்முடைய பணி யினை நிறைவேற்றுவதற்காக, எந்தவித வரையறையுமின்றி தம்மையே அளித்த இயேசுவே இங்கு உயர்ந்த எடுத்துக் காட்டாக விளங்குகின் றார் (லூக் 12:50: 22:32). ஆண்டவருடைய செயல்களுக்கான அக்கறையானது எவ்வளவு உயர்ந்தது என்றால் தேவையான ஒரே பொருளின் மீது’ நேரடியாகக் கவனம் முழுமை யாகவும் அக்கறை செலுத்துவதற்சாக. கிறிஸ்துவின் அழைப்பிற்கேற்ப, அது உலக அக்கறைகளைத் துறந்துவிட நம்மை நடத்திச் செல்லக்கூடும் (1 கொரி 7:32-33: லூக்கா 10:41 ).
- அக்கறையும் விசுவாசமும்:-
விவிலி யமானது எல்லா பகுதிகளிலும் கவனக் குறைவையும், சோம்பலையும் கண்டிக் கிறது. ஆனால், மனிதன் ஆன்மீகக் கவனம் சிதைவுறுமாறு உலக அக்கறை களால் மூழ்கடிக்கப்படக்கூடிய ஆபத் தான பாதையில் மனிதன் தன்னையே ஈடு படுத்துவதையும் விவிலியம் அறிந்திருக் கிறது (லூக் 8:14; 16:13; 21:34). இயேசு இந்த அபாயத்தை வெளிப்படையாகவே கண்டி க்கிறார். இறையரசின் மீது மட்டுமே அக் கறை கொள்ளுமாறு அவர் தமது சீடர் களை அழைக்கிறார். உலகப்பொறுப்புகள் ஒரு கடமையாக இருப்பதால், அவர் களுக்கு தேவையான ஆவியின் விடுதலை கவனமின்மையால் வராது: மாறாக, இறைவனின் தந்தைக்குரிய அன்பின்மீது கொண்ட நம்பிக்கையினின்றே வரும் (மத் 6:25-34:16:5-12).
எதைப் பற்றியது ஆனாலும் அக்கறை யானது தன்மையிலேயே நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் உரிய அழைப்பாக விளங்குகின்றது. சில குறிப்பிட்ட சமயங் களில் நன்கு நிறைவேற்றப்பட்ட ஒரு செய லானது வரவிருக்கும் நாளைநோக்கிச் சிரிப்பதற்கு* ஒருவனை அனுமதிக்குமா னால் (பழ 31:25) அதில் ஈடுபட்டுள்ள அக்கறையானது. உறுதியற்ற நிலை, பயம், அங்கலாய்ப்பு ஆகியவற்றில் தன்னுடைய குறைபாடுகளை அவன் உணர்ந்து கொள் வதற்கான வாய்ப்பாகவே பெரும்பாலும் விளக்குகின்றது. இவ்வாறு தோற்று விக்கப்படுகின்ற துன்பமானது எல்லா மனிதருக்குமே பொதுவான ஒன்றாகும் (ஞான 7:4). உன்னதர் அனைத்தின் மீது அக்கறை கொண்டுள்ளார்” என்னும் விசு வாசத்துடன் (ஞான 5:15) தங்களது கவலை களின் சுமையானது. அது தங்களுடைய பாவங்களின் விளைவாகவே இருந்தா லும் (சங் 37:19; லூக் 15:16-20) அச்சுமை யினை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு மாறு அது அழைக்கின்றது (சங் 55:23; 1 பேதுரு 5:7). உண்மையில் “இவ்வுலகை அவர்கள் உபயோகிக்காதது போன்று” எல்லாத்தேவையான அவர்கள் இனி உலகை அக்கறையுடன் உபயோகிக்க முடியும் (1 கொரி 7:31). உண்மையில் எல்லா அக்கறைகளுக்கும் அப்பால், ‘அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவுக்குள் அவர்கள் உள்ளத் துக்கும் மனதுக்கும் அரணாயிருக்கும் ( பிலி 4.7)