அக்காதியன் (AKKADIAN)
பொதுவாக கி.மு. 2000 முதல் 500 வரை மெசபொத்தாமியாவில் பேசப்பட்ட மொழி இவ்வாறு அழைக்கப்படுகிறது. கீழ்த்திசை செமித்திக் வகுப்பைச் சேர்ந் தது. இது முன்பு அசீரிய மொழி என்று அழைக்கப்பட்டது. ஏனெனில் இதனுடைய இலக்கிய ஞாபகச் சின்னங்கள் முதலில் அசீரிய மொழியில்தான் கண்டுபிடிக்கப் பட்டன. இம்மொழி மெசபொத்தோமி யாவில் கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. செமித்திய மக்களின் ஆதிக்கம் அதிகரித்தபோது. இம்மொழி சுமேரிய மொழியை அகற்றி, அரமேயிக் மொழி அதன் இடத்தை எடுத்துக் கொள் ளும் வரை, மக்களின் பொது மொழி யாகத் திகழ்ந்தது. இது பாபிலோனியா, அசீரியா ஆகிய இரண்டு முக்கிய பிரிவு மொழிகளில் காணப்படுகிறது. இது சுமே ரியா ஆப்பு வடிவ எழுத்துக்களால் எழுதப்பட்டது. செமித்திக்கு மொழியில் உள்ள மெய்யெழுத்துக்களுக்கு சுமேரியா ஆப்பு வடிவ எழுத்துக்களில் அடையாளங் கள் இல்லாமையால் பல சுமேரிய வார்த் தைகளை இது ஏற்றுக்கொண்டது. கி.பி. 1835-இல் இருந்து பல அக்காதிய ஏடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, விளக்கப்பட் டுள்ளன. பழைய ஏற்பாட்டு உலகைப் பற்றிப் புரிந்துகொள்ள தனிச்சிறப்பான ஒரேமூலம் மட்டுமன்றி, இம்மொழி எபி ரேய மொழியைப் புரிந்துகொள்ள முக்கிய உதவியாகவும் அமைந்துள்ளது.