அக்காது (AKKAD, ACCAD)
வடபாபிலோனியாவில் சின்னார் நாட்டின் ஒரு நகரம். நிம்ரோத்தின் ஆட்சிக்குட்பட்டது. பாபேல், எரேக்கு ஆகிய நகரங்களோடு சேர்த்துக் குறிக்கப் படுகிறது (ஆதி 10:0). முதலாம் சார் கோனின் (கி.மு. 2242-2186) தலைநகராக நிறுவப்பட்டது.இவரது அரசு மரபு மெச பொத்தாமியாவையும் சீரியாவின் ஒரு பகுதியையும் சிறிய ஆசியாவின் ஒரு பகுதியையும் உள்ளடக்கியது. நராம்-சின் என்பவரின் 56 ஆண்டு ஆட்சிக் காலத்தில் நகரும் பேரரசும் அரசியலிலும், கலாச் சாரத்திலும் சிறந்து விளங்கியது. சார்- காலி-சாரியின் காலத்தில் (கி.மு. 2100-ஜ ஒட்டி) அக்காது அழிக்கப்பட்டது. மீண்டும் கட்டப்படவே இல்லை.
அக்காது பொதுவாக வடபாபிலோனி யாவைக் குறிக்கும். அக்காது-சுமோ நாடு” என்ற சொற்றொடர் பாபிலோனி யாவைப் பொதுவாகக் குறிக்கும். அக்கா தியன் என்ற சொல், செமித்திய மொழி யைக்குறிக்கும் அக்காதிய மூலமொழியா கும். அசீரியர், பாபிலோனிய மொழிகள் அதன் பிரிவு மொழிகளாகும்.
அக்காதை இப்போது அடையாளங் காட்ட முடியாது. அது சிப்பார் அல்லது பாபிலோனுக்கு அருகில் இருக்கவேண் டும். ஒரு வேளை இக்காலத் தேல்-தெர் ஆக இருக்கலாம்.