அக்காத்தான் (HAKKATAN – சிறுவன்)
அசிகாது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர். யோகானானின் தந்தை. பாபி லோனிய அடிமைத்தனத்தினின்று எஸ்ரா வோடு எருசலேமிற்குத் திரும்பி வந்தவர் களில் இவரும் ஒருவர் (எஸ் 8:12)
அக்காயிக்கு (ACHAICUS – அக்காயாவைச் சேர்ந்தவன்)
கொரிந்தின் முதல் கிறிஸ்தவர்களில் ஒருவர் (1 கொரி 16:17). பவுல் கொரிந்தி யருக்கு எழுதும்போது எபேசு நகரில் இருந்தார். ஸ்தேவானா, போர்த்துனாத்து ஆகியோர். அவரோடு இருந்தவர்கள். 1 கொரி 7:1-இல் குறிப்பிடப்படும் கடிதத தைக் கொண்டு வந்தவர்கள் இம் மூவ ராகத்தான் இருக்கவேண்டும். கொரிந்திய ருக்கு எழுதப்பட்ட முதலாம் திருமுகத் தைக் கொண்டு சென்றவர்களும் இவர் களாகத்தான் இருக்கவேண்டும். இவர்கள் அப்போஸ்தலருடன் நல்ல உறவு கொண் டிருந்தனர் என்பது தெளி வாகிறது.
அக்கான் (AKAN கோணலான. வளைந்து)
ஏசாவின் குடும்பத்தைச் சேர்ந்த கோரியனான ஏசேரின் புதல்வர்களில் ஒருவர் (ஆதி 36:27). 1 நாள் 1:42-இல் இவர் யாக்கான் காண்க: யாக்கான். என்றழைக்கப்படுகிறார்.
அக்கிம் (ACHIM – யாவே நிறுவுகிறார். யாவே நிலை நாட்டுகிறார்)
யோசேப்பின் தூரத்து மூதாதையர். இவர் இயேசுவின் முதாதையர் பட்டியலில் மத்தேயுவால் மட்டுமே குறிக்கப் பெறு கிறார் (மத்1:14)
அக்கியோர் (ACHIOR-ஒளியின் சகோதரன்) அசீரியப் படைத்தளபதியான ஒலபெரினே யின் கீழ் அம்மோனியர் படைத்தலைவன் ஆவார். இவர் இஸ்ராயேல் மக்களைக் கடவுள் கட்டாயம் காப்பார் என்று ஒலபெரினேயுக்கு எச்சரிக்கை செய்தும் அவர்கள் மீது படையெடுப்பதைத் தடுக்க முயன்றார் (யாத் 5:50,86). வரலாறு பற்றிய அக்கியேரின் சமய விளக்கத்தை, ஒலபெரினேயின் மூத்த தலைவர்கள் புறக் கணித்து, அவரைக் கொல்ல எண்ணினர் (5:22-23). இஸ்ராயேலரோடு கொல்லப் படுவதற்காக அக்கியோரை இஸ்ராயேலரி டம் அனுப்பிவிட்டனர்.
யூதித் ஒலபெரினேயின் தலையைக கொணர்ந்து காட்டியபோது. அக்கியோர் அச்சத்தால் மயங்கித் தரையில் முகம் குப்புற விழுந்தார். பிறகு இறைவன் செய்துள்ள அரும்பெரும் செயல்களைக் கண்டு வியப்புற்று அக்கியோர் மென் மேலும் கடவுள் மீது ஆர்வத்தோடு உறுதி யான விசுவாசம் கொண்டவரானார். விருத்தசேதனம் செய்து கொண்டார்.
இஸ்ராயேல் மக்களோடு சேர்ந்து கொண்டார் (14:10). விருத்தசேதனம் பெற்ற வெகு சில அம்மோனியருள் இவரும் ஒருவர் (உபா 23:3- கட்டளையைக் காண்க)