அக்காயா (ACHAIA – தொந்தரை, மனக்குழப்பம்)
அக்காயா நாடு கோமேரின் பாடலி லேயே காணப்படுகிறது. எரோடொத்தஸ் குறிப்பிடுகிறார். அது பெலொப்போனே யசில் இருப்பதாகக் கூறுகிறார்.
இப்பெயர் பெலொப்போனேயிசின் ஒரு பகுதியைக் குறிக்க மூலத்தில் பயன் பட்டது. பிற்காலத்தில் கிரிசின் தென் பகுதி முழுவதையும் குறித்தது. கிரிசின் சுதந்திர ஆட்சிக் காலத்தில் அக்காயா நாட்டுக் குழு முக்கியம் வாய்ந்த அரசியல் சக்தியாகத் திகழ்ந்தது. இக்குழுவில் ஏதன்சும் கொரிந்தும் சேர்ந்திருந்தன. கொரிந்து தலைமை தாங்கியது. கி.மு. 146-இல் கொரிந்து நகரம் உரோமையர் களால் அழிக்கப்படும்வரை. இக்குழு செல்வாக்குக் கொண்டிருந்தது. உரோ மையர் ஆட்சிக்குட்பட்டி ருந்தபோது. இப் பகுதி, மக்கதோனியாவுக்குத் தெற்கிலுள்ள ஓர் உரோமை மாகாணமாகியது. ஓர் ஆளுநர் ஆண்டார்.
பவுல், தனது இரண்டாவது மூன்றா வது வேதபோதகப் பயணத்தில் அக்கா யாவைப் பார்க்கச் சென்றார் (அ.ப. 19:21-ஐக் காண்க) அப்போது கல்லியோ அக்காயாப் பகுதிக்கு ஆளுநராக இருந் தார் (18:12). 18:27-வின்படி அப்பொல்லோ இப்பகுதிக்குப் போக விரும்பினார். இந்தப் பகுதியில் முதலில் மனம் திரும்பி யவர்களில் ஸ்தேவானாவும் ஒருவர் (1 கொரி 16:15). அக்காயாவும் மக்கதோனி யாவும் எருசலேமில் வறுமையில் தவித்த திருச் சபைக்குப் பொருள் உதவி செய்தன (உரோ 15:26:2 கொரி 9:2). மக்கதோனியா வில் தெசலோனிக்கா திருச்சபை. அக் காயப் பகுதியிலுள்ள திருச்சபைக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் காட்டப்படுகிறது. (1 தெச 1:7-8). கொரிந்தியருக்கு எழுதப் பட்ட 2-ஆம் திருமுகம் அக்காயா முழுவதி லுள்ள இறை மக்களையும் நோக்கி எழுதப்பட்டதாகும் (2 கொரி 1:1; 11:10).