அக்கிபா, அக்கூபு, அக்கெனாத்தோன், அக்கேமேனியர்

அக்கிபா (AKIBA)

யூத ராபிகளில் ஒரு தலைவர் (கி.பி. 50-136). ஆசிரியர்கள் எனப் பொருள்படும் தனாயீமியர்களின் இரண்டாம் தலை முறையைச் சேர்ந்தவராகக் குறிக்கப்படு கிறார். சட்டத்தை விளக்குபவர். யோசேப் பின் மகனான அக்கிபா, தனாயீமியர் களின் கூற்றுக்களை ஒன்று சேர்த்து வரிசைப்படுத்தும் வேலையைத் தொடங்கி னார். அதை அவரது சீடர் ராபி மேயீர் தொடர்ந்து நடத்தினார். இதனால் அக் கிபா, மிஸ்னாவில் செல்வாக்குக் கொண் டிருந்தார். இல்லேலுக்குப் பிறகு, அக்கிபா மிகப்பெரிய ஒழுக்க ஆசிரிய ராகக் கருதப்படுகிறார். அவரது போதகம் மிஸ்னாவில் அடிக்கடி எடுத்துக் கூறப்படுகிறது. சீமோன் -பார்- கோக்பாதான் மெசியா என்று உரிமை கொண்டாடியதை ஏற்று. உரோமைக்கு எதிராகச் அவர் செய்த கிளர்ச்சியை (132-135), அக்கிபா உற்சாகத் துடன் ஆதரித்தார். தோராவைப் படிப்ப தைத் தடை செய்யும் அதிரியானின் சட்டத் திற்குக் கீழ்படியாததற்கான தண்டனை யாக, இவர் கைதியாக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டார்.

அக்கூபு (AKKUB-வஞ்சகமான, துரத்துகிறவன்)

1.தாவீது அரசரின் தூர வழித்தோன்ற லான எலியோனாயின் மகன் (1 நாள் 3:24). 

  1. பாபிலோனியாவிலிருந்து நாடு திரும்பிய பின்பு. கோவிலின் வாயில் காக்கும் லேவியர் குடும்பங்களில் ஒன்றுக்குத் தலைவர் (எஸ் 2:42: நெக 7:45; 11:19; 12:25: 1 9:17).
  1. கோவில் ஊழியர்களின் குடும்பங் களில் ஒன்றுக்குத் தலைவர் (எஸ் 2:45), காண்க: நெத்தினிம்
  1. எஸ்ரா மக்கள் கூட்டத்திற்குமுன் வாசித்த சட்டத்திற்கு விளக்கம் அளித்த ஒரு லேவியர் (நெக 8:7).

அக்கெனாத்தோன் (AKHENATON -ஆத்தா னோடு எல்லாம் நன்றாக உள்ளது).

பதினெட்டாவது அரசகுலத்தைச் சார்ந்த பாரவோன். சமய, பண்பாட்டுப் புரட்சியை எகிப்தில் ஏற்படுத்தியவர் (கி.மு.1363-1347). இவர் முதன்முதலில் நான்காம் அமென்-கோதெப் என்று அழைக்கப்பட்டார். இப்பெயருக்கு “அம் மோன் (கடவுள்) மன நிறைவடைந்தார் என்பது பொருள். இவர் பழம்பெரும்  தெய்வத்தின் “ஆமோன்* என்ற பெயரைத் தவிர்த்து, “சூரியனின் வாழ்வு கொடுக்கும் சக்தி” என்ற பொருள்படும் ‘ஆதோன் என்ற புதிய தெய்வத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டார்.

கி.மு. 1370-இல் ஆசியாவில் எகிப்திய பேரரசானது ஒரு நூற்றாண்டை எட்டிப் பிடித்தது. எகிப்து நாடானது செல் வாக்கிலும், செல்வப் பெருக்கிலும் மற்ற நாடுகளைவிட முன்னணியிலிருந்தது. ஆனால் அயல்நாட்டுப் பண்பாட்டின் பாதிப்பால் எகிப்திய பண்பாடு பெரும் மாற்றம் கண்டது. (எ.கா.) மற்ற நாட்டு மக்கள் பற்றிய அக்கறை எகிப்திய தெய் வங்கள் எகிப்து நாட்டின் வளர்ச்சியில் மட்டும்தான் ஈடுபாடு கொண்டவர்கள் என்று நம்பிக்கையை மாற்றியமைக்கச் செய்தது.

மூன்றாம் அமென்-கோதெப் என்ற பாரவோன் (கி.மு 1398-1361) அரசு. சமயம், கலை, இலக்கியம் போன்ற துறை களில் புதிய மாற்றங்களை, அணுகுமுறை களைக் கையாள்வதை ஏற்றுக் கொண் டார். இவரது மகனும் கூட்டு அரசனுமான நான்காம் அமென்-கோதெப புதிய ஆட்சி முறையை ஏற்படுத்தும் நோக்குடன் புரட்சியில் புகுந்தார். உடனே நான்காம் அக்கெனாத்தோன் பழைய தலைநகரா கிய திபிசுவை விட்டு வெளியேறி தேல்- ஏல்- அமர்னாவுக்கு அருகிலுள்ள ஆக்கெ தாத்தோன் என்ற புதிய இடத்திற்குச் சென்றார். அங்கு மன்னனும், அவரது மனைவி நெப்பர்தித்தியாளும், இறைவழி பாடு. கலை போன்றவற்றில் மாற்றங் களைக் கொண்டுவர அயராது உழைத் தனர். இவர் ‘ஆத்தோன்” என்ற கடவுளின் மேல் கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாடு உலகிலேயே காலத்தால் முந்திய இறை யொருமைக் கொள்கை என்றழைக்கப் பட்டுள்ளது. இவ்வாறு ஒரே இறைவன் மேல் எகிப்தியர் செலுத்திய ஆழ்ந்த ஈடுபாடு மோசேயையோ அல்லது எந்த ஒரு எபிரேயனையோ நேரடியாக பாதித்த தற்கு ஆதாரங்கள் இல்லை. உள் நாட்டில் மறுமலர்ச்சியைக் கொண்டுவரவேண்டும் என்று இவரது ஆர்வம் சீரியா, பாரசீகம் போன்ற நாடுகள் எகிப்திய பேரரசிலிருந்து பிரிந்து தனி மாநிலங்களாக ஆவதற்கு வழி வகுத்தது என்று தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட கடிதங்களில் அறியப் படுகிறது. இவருக்குப் பின் வந்த இவரது மருமகன் துத்-அங்-ஆமோன் காலத்தில், முந்தைய புரட்சி அழிந்தது. எகிப்து பழைய நிலையை அடைந்தது. திபிசு மறுபடியும் தலைநகராக்கப்பட்டது.

முந்தைய இயக்கங்கள் பதிதமாகக் கருதப்பட்டாலும் அவை எகிப்திய சமயம், அறிவு சார்ந்த துறைகள், கலைத்துறை ஆகியவற்றில் நிலையான நல்ல மாற்றங் களை விட்டுச் சென்றன.

அக்கேமேனியர் (ACHAEMENIANS)

இரண்டாம் சைரசிலிருந்து (கி.மு. 559-530) வந்த பாரசீக அரச மரபுக்கு மற்றொரு பெயராகும். இந்த சைரசுதான். நாடு கடத்தப்பட்ட யூதர்கள், “ஆண்டவரின் ஆலயப் பாத்திரங்களை* (எஸ் 1:7) மீண்டும் எருசலேமுக்கு எடுத்துச் செல்ல அனும் தித்தவர். பேரரசின் பரந்த, பல்வேறுபட்ட வளங்கள் அக்கேமேனியரின் கலை தோன்றுவதற்கும் பெரிதும் உதவின

 

Have any Question or Comment?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page