அக்கிலா (AQUILLA – கழுகு)
- அக்கிலாவும் பிரிசிக்கில்லாவும் கொரிந்திலும், எபேசுவிலும் பவுலுடைய தோழர்களாக இருந்த கணவன் மனைவியர். பவுல் தனது மடல்களில் பிரிசிக்கில்லாவைப் பிரிசிக்கா என்று குறிப்பிடுகிறார்.
அ) முந்திய வாழ்க்கை:- அக்கில்லா என்பவர் போந்து என்ற ஆசியா மாகாணத்தைச் சேர்ந்த ஒரு யூதர் (அ.ப. 18:2). இவர் இத்தாலிக்குக் குடிபெயர்ந் தார். ஆனால் யூதர்கள் உரோமைப் பேரரசிலிருந்து வெளியேற்றப்பட்டபோது (கி.பி. 49) கிளாதியுவின் சட்டப்படி இவரும் தன்னுடைய மனைவியோடு உரோமையிலிருந்து வெளியேற்றப் பட்டார். பிரிசிக்கில்லாவின் குடும்பப் பெயர் கொடுக்கப்படவில்லையாதலால். இவள் ஒரு யூதப்பெண் அல்ல, உரோமைப் பெண் என்று தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இரண்டு மொழியைச் பெயர்களும் இலத்தீன் சேர்ந்தவை. உரோமைத் தொடர்புடையவையாகக் காணப்படுகின் றன. இவர்கள் இத்தாலியிலிருந்து வெளி யேற்றப்பட்டபொழுது கிறிஸ்தவர்களாக இருந்தார்களா அல்லது கொரிந்தில் கிறிஸ்தவர்களாக ஆனார்களா என்று சரியாகத் தெரியவில்லை. ஆளுநர் கல்லி யோவைப் பற்றியுள்ள வரலாற்றுக் குறிப்பு களைக் கொண்டும், புதைபொருள் கண்டு பிடிப்புகளைக் கொண்டும் இவர்கள் ஏறக் குறைய கி.பி 49-50 இல் இத்தாலியாவி லிருந்து வெளியேற்றப்பட்டு கொரிந் திற்குச் சென்றிருக்கலாம் என்று கருதப் படுகிறது (அ.ப. 18:12). அக்கிலாவும். பிரிசிக்கில்லாவும் கூடாரம் கட்டுபவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. இது கூடாரத்திற்கு துணி நெய்பவர்களாகவோ அல்லது தோலினால் கூடாரம் கட்டுபவர் களாகவோ இவர்களைக் குறிக்கலாம்.
ஆ) பவுலுடன் தோழமை:- பவுல் தனது இரண்டாம் போதகப் பயணத்தில் முதன் முறையாக கொரிந்திற்கு வந்தபொழுது இவர்கள் அந்நகர்வாசிகளாக இருந்தார் கள் (18:2). பவுலும் அவர்களும் ஒரே தொழிலையே செய்து வந்ததால், அவர் களுடன் உடனே தொடர்பு கொண்டார். அக்கிலா ஒப்பந்தக்காரனாகவும் பவுல் அவர் அடியில் வேலை செய்தும் இருக் கலாம். தன்னிடம் வேலை செய்பவர் தங்கும் அளவிற்கு வீட்டு வசதி இருந்தது (18:3). இவர்களுடைய தோழமை தொழிலில் மட்டுமல்ல, நற்செய்தி பரப்பு வதிலும் பவுலுடன் அநேகமாக போதகர் களாகவும், பங்காளிகளாகவும் ஆனார் बन (1) की 12:28).
பவுல் கல்லியோவின் முன்பு விசாரிக் கப்பட்ட பின்பு. கொரிந்தை விட்டுச் சென்றபொழுது (அ.ப.18:18-19) அக்கிலா வையும், பிரிசிக்கில்லாவையும் தன்னுடன் எபேசுவிற்கு அழைத்துச் சென்றார். இந்த மாற்றத்திற்குத் தொழில் சம்பந்தமான சில காரணங்களும் அவர்களுக்கு இருந்தி ருக்கலாம். பவுல் எருசலேமிற்குச் சென்ற பொழுது, அவர்கள் நற்செய்திப் பணி யைத் தொடர்ந்து நடத்தும்படி நகரி லேயே விடப்பட்டார்கள். புத்திசாலியும்.
ஞானஸ்நானத்தைப் பற்றி அதிகம் அறி யாதவருமான அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த அப்பொல்லோவை இவர்கள் எபேசுவில் சந்தித்தார்கள்.இவருக்கு மனத்தெளிவு அளித்ததில் சிறப்பாக “கிறிஸ்துவில்” “ஆவியின் கொடைகள்” ஆகிய கருத்துக்களைப் புரிந்துகொள்ள வைத்ததில் இவர்கள் கருவியாக இருந் कृष्ण (अ.. 18:25-26; 19:67). 1 16:19-இன்படி இவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் ஒரு கோவிலைக் கொண்டி ருந்ததாகத் தெரிகிறது. எவ்வளவு காலம் இவ்விருவரும் எபேசுவில் தங்கினார்கள் என்று தெரியவில்லை. பவுலுக்கு எதிராகச் செய்யப்பட்ட கலகத்தில் இவர் களுடைய பெயர்கள் சொல்லப்படவில்லை (அ.ப. 19:23-41). இருப்பினும் “பிரிசிக் கில்லாவும், அக்கிலாவும் என் உயிரைக் காக்க தங்கள் தலைகளைக் கொடுக்கவும் முன் வந்தார்கள்” என்று பவுல் கூறு கின்றார் (உரோ 16:3-4). பவுல் எபேசுவி லிருந்து கொரிந்திற்கு எழுதிய முதல் மடலில், அக்கிலா, பிரிகிக்கில்லாவின் வாழ்த்துக்களையும் சேர்த்து அனுப்பு கின்றார் (1 கொரி 16:19), கிளாதியுவின் இறப்புக்குப்பின் அவன் சட்டம் நடை முறையில் இல்லாததால், இவர்கள் இருவரும் உரோமைக்குச் சென்று. இவர்கள் தங்கள் வீட்டை மையமாக வைத்து ஒரு சபையைத் தொடங்கினர். உரோ 16:3-இல் பவுல் கூறும் வாழ்த்து தலில் இவர்கள் பெயர்தான் முதலில் வருகிறது. பவுலுக்காக இவர்கள் எவ்வித ஆபத்துக்களை அனுபவித்தார்களோ (16:4). பவுலும் “புறவினத்தார் நடுவிலுள்ள சபை கள் அனைத்தும்” இவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளன என்று பவுல் கூறுகிறார். 2 திமோ 4:19 இவர்களு டைய இருப்பிடத்தைப் பற்றி ஒன்றும் கூற வில்லை. தான் கொல்லப்படுவதற்குமுன் சிறையிலிருந்து இந்த வாழ்த்தைப் பவுல் அனுப்பியிருக்க வேண்டும்.
இ) பிற்காலப் பாரம்பரியம்:- அப்பொல் லோவிற்கு அறிவுரைக் கூறியதில் பிரிசிக்கில்லாவின் பெயர் முதலில் சொல்லப்பட்டிருப்பதால் (அ.ப. 18:26) இவள் தன்னுடைய கணவரைவிட திறமை யும் ஆர்வமும் உள்ளவளாக இருந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அநேகமாக இவள் உரோமைக் கிரேக்கப் பண்பாடுகளைக் கொண்டவளாக இருந்தி ருக்கலாம். பல வல்லுநர்கள். இவள் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்தின் ஆசிரியை எனக் கருதுகின்றார்கள்.
- போந்துவிலுள்ள சினோப்பே என்ற ஊரைச் சேர்ந்தவர். அதிரியானால் எருச லேமுக்குக் கொண்டுவரப்பட்டார். ஒரு கிறிஸ்துவர் ஆனார். ஆனால் பிறகு திருச் சபையிலிருந்து விலக்கப்பட்டார். பிறகு யூதமதத்தைத் தழுவி, ராபி அக்கிபாவின் சீடன் ஆனார். இவர் பழைய ஏற்பாட்டை உயர்ந்த கிரேக்க நடையில் மொழி பெயர்த்தார். இம்மொழிபெயர்ப்பு கி.பி 533-வரை செபக் கூடங்களில் அதிகாரப் பூர்வமான அனுமதி பெற்றிருந்தது.