அக்ரபா (AGRAPHA – எழுதப்படாதவை)
ஜே.ஜி. கோர்னர் என்பவரால் 18-ஆம் நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட சொல். இது கிறிஸ்துவினால் சொல்லப்பட்ட, ஆனால் திருமுறை நற்செய்திகளில் எழுதப்படாத வாக்குகளின் தொகுப்பைக் குறிக்கும். இந்தச் சொல்லின் பொருள் “எழுதப்படாதவை” என்பதாகும். கிறிஸ்து வின் போதனைகளில் சில எழுதப்பட வில்லை. ஆயினும் எழுதப்பட்ட கருத்துக் களுக்கு இணையாக இவை வாய் மொழி யாகச் சேகரிப்பட்டன. ஆனால் தன்மை யால் நமது எழுதப்பட்ட நற்செய்திகளுக்கு இணையானவை.
சிறிய போதனைகள் முதல் பெரிய படிப்பினைகள் வரை உள்ள இவ்விதப் பல தொகுப்புகள் உள்ளன. இவை கிறிஸ் துவின் வாழ்நாள் முதல் இன்று வரை இவை சேகரிப்பட்டுள்ளன. தொடக்கத் தில் அறிஞர்கள் உண்மையிலேயே இவை கிறிஸ்துவால் கூறப்பட்டவை என்று நம்பி னர். அவற்றின் மூலம், எழுதப்படாத தொடக்கக்கால வாய்மொழி நற்செய்தியா கும் என்றும், எழுதப்பட்ட திருமுறை நற் செய்திகளும் அவற்றையும் மூலமாகக் கொண்டிருந்தன என்றும் நம்பினர். ஆனால் இன்று இக்கருத்தை மிக எளி தாக ஏற்றுக் கொள்வதில்லை. அதனால் நமது தீர்மானங்கள் எல்லாம் அகவிய லானவையே. இத் தொகுப்புகளில் வரும் மத உண்மைகளை வெளிப்படுத்தும் நீண்ட உரையாடல்களும், திருமுறை சேராத அப்போஸ்தலர் பணி போன்ற வீரகாதைகளும் நீக்கப்படலாம். ஆனால் சொற்செறிவுடைய, நன்மை பயக்கும் வாக்கியங்கள் முற்றிலுமாக மறுக்க முடி யாதவை. பல வல்லுநர்கள் இவை திருமுறை நற்செய்திகளில் காணப்படும் கிறிஸ்துவின் தன்மையை ஒத்து இருக் கின்றன என்பதை ஏற்றுக்கொள் கின்றனர். இவை திருமுறை நற்செய்தி களில் இல்லை என்று முடிவாகத் தீர்மானிக்க முடியாது. ஆனால் இவற்றில் சிலவே காலத்தாலும் தரத்தா லும் இயேசுவுக்குச் சாற்றிக் கூறப்படக் கூடியன என்பது. திருமுறை நற்செய்தி ஆசிரியர்கள் தாங்கள் சேகரித்த பாரம பரியத்தில் ஒரு சிலவற்றை மட்டுமே எழுதாமல் விட்டனர் என்று காட்டுகிறது.
அக்ராபாவில் பல கூற்றுக்களில் போத னைகள் வெறுமனே விரிவாக்கப்பட்டுள் ளன. மிகைப்படுத்தப்பட்டுள்ளன அல்லது மாற்றப்பட்டுள்ளன அல்லது திருமுறை நற்செய்திகளில் வரும் சொற்களின் தொகுப்பாக அமைந்துள்ளன. இப் பண்பு களைப் பிற்காலத்தில் திருத்தியமைக்கப் பட்ட திருமுறைசாராத நற்செய்திகளில் காணலாம். உ.ம்:பணக்கார ஆட்சியாளன் கதை: தாலந்து உவமை: மத் 18:22 வேறு வடிவமைப்புகளில் காணப்படுகின்றது. “உன்னுடைய சகோதரன் வார்த்தையால் பாவம்செய்து. மனம் வருந்தினால் அவனை ஒருநாளில் ஏழுமுறை ஏற்றுக் கொள். ஆம். நான் உங்களுக்குச் சொல் கிறேன். எழுபது முறை ஏழு. ஏனெனில் இறைவாக்கினர்களும் பரிசுத்த ஆவியி னால் அபிசேகம் செய்யப்பட்ட பின் பாவம் நிறை சொற்களைக் கூறினர்.
இதுபோன்ற பல “அக்ரபாக் கூற்றுக் கள்* நற்செய்திக் கைப்பிரதிகளில் காணப் படுகின்றன. குறிப்பாக லூக் 14:8-11-க்கு இணையாண பகுதியில் காணப்படுகிறது. வேறுசில: கோடெக்ஸ் பெஸே-யில் மத் 20:28. அல்லது ஓய்வு நாளில் வேலை செய்த மனிதனிடம் கிறிஸ்து கூறியது. “நீ செய்வது இன்னதென்று அறிந்திருந்தால் நீ பேறு பெற்றவன். நீ அறியாமலிருந் தால் சபிக்கப்பட்டவன். சட்டத்தை மீறுப வனாகின்றாய். இது அதே கைபிரதியில் லூக் 6:4-2 காணப்படுகின்றது. இவற்றில் நாம் சந்திக்கும் பிரச்சினை வாசகப் பேத திறனாய்வினைச் சார்ந்த தாகும். ஏனெனில் கிறிஸ்துவின் பல வார்த்தைகள் இன்று பல பிரதிகளில் அச்சிடப்பட்டி ருப் பினும் (உ.ம்: மத் 6:13; மாற்கு 16:15-18; லூக் 23:34) இவற்றின் தன்மை, வாசக அளவில், இவை பிற்சேர்க்கை என்பதையும், அதனால் அக்ரபாவைச் சேர்ந்தவை என்பதையும் சுட்டுகின் றன.
மேலும் தனிப்பட்ட நற்செய்திக் கைப் பிரதிகளில் காணப்படும் சில வாக்கு களைத் தவிர, சில கூற்றுகள் புதிய ஏற் பாட்டு நற்செய்திகளில் கிறிஸ்து கூறிய தாகக் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் நற்செய்திகளுக்குப் புறமே சில கூற்றுகள் இயேசு கூறியதாகத் தரப்படுகின்றன. “பெறுவதினும் தருவதே இன்பம் (அ.ப. 20:35). இறுதி உணவின் போது கிறிஸ்து கூறியதாக பவுல் குறிப்பிடும் வார்த்தைகள் (1 கொரி 11:24-25). அக்ரபா எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு: இதையடுத்து பவுல் குறிப்பிடும் வாக்கியம் அப்போஸ்தலர் சட்டத்தில் அப்படியே இடம் பெறுகிறது. “எனவே நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்தில் பருகும் போதெல்லாம் ஆண்டவர் வரும் வரையில் அவரது மரணத்தை அறிக்கையிடுகிறீர்கள்*.
பெரும்பான்மையான அக்ரபா கூற்று கள் திருமுறைக்குப் புறம்பான இலக்கியங் களில் இருந்து வருகின்றன. இப்படிப் ULL சில நூல்கள்: இயேசுவின் “ஒக்சிரிங்கசு* கூற்றுகள், திருச்சபையின் தந்தையர்கள், தோமையாரின் நற்செய்தி என்ற நூல், 1940-இல் செனோபோஸ் கயோனில் கண்டுபிடிக்கப்பட்ட மறையி யல் ஞானக் கோட்பாட்டைச் சார்ந்த நூல். பாபிலோனிய யூதர்களின் சட்டம். தால்மூது, இஸ்லாமிய நூற்கள்; இவை போன்றவற்றிலிருந்து வளர்ச்சியடைந் திருக்கலாம். ஆனால் பெரும்பாலும் இந் நூல்கள் தோன்றிய காலத்தையோ இடத்தையோ குறிப்பிடவில்லை.
இப்படிப்பட்ட கூற்றுகள்அடங்கிய பல நூல்கள் இருந்தாலும் சிலவே உண்மைத் தன்மையுடையன. பெரும்பாலானவை. திருமுறை நற்செய்திகளில் வரும் கூற்று களை விரிவாக்குகின்றன அல்லது மாற்றி அமைக்கின்றன. பெரும்பாலானவை, குறிப்பாக, திருமுறை சேராத நற்செய்தி களில் காணப்படுபவை திருமுறை நற் செய்தி வாக்குகளோடு. ஒப்பிடப்படும் போது, வடிவிலும் பொருளடக்கத்திலும் தாழ்ந்தவையாக உள்ளன. ஒரு வேளை இவை பக்திமிக்க கள்ள வேலையாக இருக்கலாம்.