அங்கலாய்ப்பு (ANGUISH)

அங்கலாய்ப்பு (ANGUISH)

இவ்வுலக உயிர்களால் உண்டாக்கப் படும் பயத்தைப் போன்றோ அல்லது குறிப்பிட்ட குறிக்கோள் மற்றும் உண்மை யான பணி ஆகியவற்றின் மீதான தனிப் பட்ட அல்லது அதிகப்படியான கவனிப் பால் ஏற்படும் கவலை போன்றோ இல் லாமல், அங்கலாய்ப்பானது ஒருவரது அடி மனதிலிருந்து உருவாகின்ற மன அமைதியற்ற உணர்வினையே குறிக்கின் றது. இத்தகைய நிலை சாவை எதிர் கொள்ளும்போது அல்லது பொதுவாக எதிர் காலத்தைப்பற்றி எழும் ஒரு உறுதி யற்ற உணர்வேயாகும். விவிலியத்தில் குறிப்பாக கிரேக்க மொழி பெயர்ப்பில், இந்நிலையை விவரிக்கப் பல சொற்கள் பயன்பட்டுள்ளன. 2 சூழ்நிலைகளில் விவரிக்கப்படுகின்றன (2 மக் 3:14-15; 15:19; லூக் 22:44; ஒசே 13:8:2 மக் 8:20; ஞான 11:5; லூக் 21:25; 1 சாமு 23:8; 2 சாமு 20:3; லூக் 8:37; மத் 4:24; லூக் 4:38; உப 28:53; 2 கொரி 4:8:6:4.12).

  1. தமது மக்களுடன் யாவே செய்து கொண்ட உடன்படிக்கையானது. உறுதி மொழிகளின் ஆண்டவருடைய பிரசன்னத் தை உறுதிப்படுத்துகின்றது: ஆனால், அது மனிதன் சட்டத்தைக் கடைப் பிடிப்ப தில் காட்டும் பிரமாணிக்கத்தைப் பொருத் தது. ஆகவே இந்த உறுதிப்பாடு நடப்பில் மறைந்துவிடும் அபாயம் எப்போதும் உள்ளது.

யாபோக்குக் கரையை அடையும் யாக் கோபு ஒன்றும் இயலாத ஒரு சூழ்நிலை யில் தான் இருப்பதைக் காண்கிறார் (ஆதி 32:8). ஆனால், தனது தந்தையுடனும் (22:16 தொ) தன்னுடனும் (28:14) இறைவன் மீண்டும் மீண்டும் செய்த உடன்படிக்கை களைத் தனக்குப் பின்னணியாகக் கொண்டுள்ளார். ஆயினும், தனது சகோத ரன் ஏசாவைச் சந்திப்பதற்கு முன்னர், அவருக்கு அங்கலாய்ப்பினை உருவாக்கும் ஒரு சூழ்நிலையை எதிர்கொள்கிறார். ஆண்டவரின் தூதருடன் போராடித் தரையில் விழுந்த பின்னர், இறைவன் அவருடன் உள்ளார் என்னும் உறுதி மொழியை தூதரிடமிருந்து பெறுகிறார் (32:23-33) 

சூரைச் செடியின் கீழ் அமர்ந்துள்ள எலியா, இறப்பதற்கும் தயாரான மனக் கசப்பில் இருக்கிறார் (1 அர 14:3 தொ). மக்களின் பொது பதிதம் பற்றி (தவறாக) உறுதியாக அறிந்த நிலையில் அவர் தனது வாழ்வினைத் தோல்வியெனக் கருதுவது சரியல்லவா? ஆனால், பிற் காலத்தில் இயேசுவிற்கு கெதுசமனியில் நடந்தது போன்று, ஆண்டவரது தூதரால் வலிமைபடுத்தப்பட்டு, அவரைச் சரியான பாதையில் செலுத்தும் இறைவனுடைய சந்திப்புவரை, அவரது பாதையில் தொடர்ந்து நடத்தப்படுகின்றார் (19:5-18).

எல்லா மக்களும் இருளில் மூழ்கி யிருக்கும்போது அவர்கள் அங்கலாய்ப் ? (18:22 : 5:30: 24:19). உடன்படிக்கையின் காப்பாளராக இருக் கின்ற நிலையில், மக்கள் பஞ்சத்தினால் துன்புறும்போது தனது இதயமே தன்னைக் கைவிட்டது போன்ற நிலையில், எரேமியா இக்கவலையில் மூழ்கிவிடுகி றார் (எரே 8:18.21). அவர் மட்டுமே துன் புறும்போது அவரது உணர்ச்சிகள் வேறு விதமாக உள்ளன. தான் வேதனைக்குட் படுத்தப்பட்ட போது தான் பிறந்த நாளி னையே சபிக்கும் அளவிற்குச் சென்றாலும் (15:10; 20:14). தனக்காகப் பழி வாங்கித் தன்னைப் பாதுகாப்பவரில் ஒரு தீர்வினை அவர் கண்டடைகிறார் (11:20; 20:12).

யோபுவின் நிலையினை எடுத்துக் கொண்டால், தனிநபர் மீட்பு என்னும் ஊன்றிவிட்ட கருத்து வெளிப்படையாகத் தெரிகிறது. அச்சத்தால் மேற்கொள்ளப் பட்ட அவர் அழுகிறார் (யோபு 3:24); “நான் அஞ்சியது எனக்கு வந்துற்றது. நான் கண்டு நடுங்கியது எனக்கு நேரிட்டது” (3:25); அவரது ஆன்மா கசப்புற்றதால் அவர் இவ்வாறு பேசுகின்றார் (10:1; 7:11). இறைவன் அனுப்பும் வேதனைக்காக அஞ்சி நடுங்குகிறார் (31:23), இறுதியாக, இச்சொற்களை உபயோகிக்காமலே. அவருடைய இயலாத சூழ்நிலையினின்று அவரை காப்பாற்றக்கூடிய இறைவனை நோக்கி நீதிமான் தனது அங்கலாய்ப்பில் கூக்குரலிடுகிறார் (சங் 22: 31: 35; 38; 57; 69: 88:102)

இந்த எல்லா நிலைகளிலும், மரணம் காத்திருப்பதால், தனிநபர் மைய இடத் தைக் கொண்டுள்ளார். இறைவனுடைய காரியம் அவருடையதில் இணைந்திருப்ப தால், அவரது அங்கலாய்ப்பில் இரு முகத் தெளிவின்மை காணப்படுகிறது. மோசேயும், முதலில் தனது பிரச்சி னைக்கு ஒரே தீர்வாக மரணத்தையே காண்கிறார் (எண் 11:11-15); ஆனால், தொடரும் நிகழ்ச்சிகளில் அவரது அங்க வாய்ப்பிற்குக் காரணம் மக்களின் பதிதமே என்பது தெளிவாகிறது. வாழ்வின் நூலி லிருந்து மக்களின் பெயர் அடிக்கப்படும் போது, தனது பெயரையும் அழிக்குமாறு இறைவனை மன்றாடும்போது, தனது பாவமிக்க சகோதரர்களுடன் தனக்குள்ள ஒன்றிப்பை வெளிப்படுத்தினாலும் இறை வனுடைய வெற்றி கொள்ளும் அன்பின் மீது உறுதியாக உள்ளார் (யாத் 32:31 தொ).

  1. ஒவ்வொரு மனிதனுடைய இதயத்தி லும் இத்தகைய அங்கலாய்ப்பு உணரப் பட்டாலும், இயேசுவின் வருகையோடு அதன் கருத்து மாறுபடுகிறது. தமது மரணத்தை எதிர்கொள்ளும் அங்கலாய்ப் பினை மட்டுமன்றி. ஐயப்பாடு, உறுதியற்ற நிலை ஆகிய பயங்கர உணர்வையும் அவர் தன் மீது ஏற்றுக்கொள்கிறார். ஒலிவ தோட்டத்தில் அவர் அச்சம். திகில், துயரம், மனக் கலக்கம் ஆகியவற்றால் ஆட்கொள்ளப்படுகிறார் (மாற் 14:33 தொ). அவருடைய அங்கலாய்ப்பு எல்லாக் காலத்தையும் சேர்ந்த நீதிமான்கள் அனை வருடைய அங்கலாய்ப்பினையும் ஒன்று சேர்த்துக்கொள்கிறது (சங் 41:6.12: 42:5). அவர் கூக்குரலிட்டுக் கண்ணீர் விடு கிறார். தன்மைச் சாவிலிருந்து மீட்க வல்லவரிடம் அவர் செபிக்கிறார் (எபி 5:7); இறுதியாக, தந்தையின் விருப்பத் திற்கே தனது விருப்பத்தையும் கொண்டு வருகிறார் (மாற் 14:36 ), இரத்த வியர்வை சிந்தும் வரை போராடுபவரைப் பலப் படுத்த மீண்டும் ஒருமுறை ஆண்டவரின் தூதர் வருகிறார். இதற்குப்பின், வெற்றி கொண்டவராய் தமது முடிவை எதிர் கொள்ள ஆயத்தமாகிறார் (லூக் 22:41-45).

இயேசு மனித அங்கலாய்ப்பின் ஆழத் தை அனுபவித்ததன் மூலம் தமக்குக் கீழ்ப்படி கிறவர்கள் அனைவருக்கும் முடி வில்லா மீட்பின் காரணராகிறார்* (எபி 5:9); அவர் ஒரு புதிய திருப்ப இயலாத சகாப்தத்தை துவக்குகிறார். விசுவாசிகள் தாம் வாழும் இக்காலத்தின் பண்பினைத் தனக்கு உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நம்பியிருக்கும் செயலானது. கடந்த காலத்தில் நடைபெற்றுவிட்டது (7:27); ஆனால், அது காலத்திற்கு வெளியே நின்று வரலாற்றின் ஏற்றத் தாழ்வுகளின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது (திரு வெளி 1:5). இயேசு என்னும் ஆளில் அங்க லாய்ப்பானது அடக்கப்படவில்லை; அதற் குரிய இடத்தைப் பெறுகிறது: ஏனெனில், இப்போது முதல் நம்பிக்கையானது உறுதி யானதாகவும் மரணமானது பலனளிப்ப தாகவும் உள்ளது.

  1. விசுவாசியின் மனதில் ஆழம் மற்றும் பரப்பு என்னும் இரு நிலைகளில் அங்கலாய்ப்பினை அனுபவிக்கலாம். “உயிர் வாழ பெருமூச்சுவிட்ட நிலையில், தன் மேல் நம்பிக்கை வைக்காமல், இறந் தோரை உயிர்ப்பிக்கும் கடவுள் மீது மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டுமென (பவுல்) இதன்மூலம் அறிந்து கொண்டார்” (2 கொரி 1:9; 5:4). கலாபனையோ? வேத னையோ? எதுவுமே (தன்னை) கிறிஸ்து வின் அன்பினின்று பிரிக்கமுடியாது” என உண்மையாகவே பவுல் அறிந்திருந்தார் (உரோ 8:35.39). கிறிஸ்துவில் மரணம் வெற்றிக் கொள்ளப்பட்டது என்னும் உறுதியான நிலையில் இந்த அங்கலாய்ப்பு ஏற்றுக் கொள்ளப்படுகிறது (2 கொரி 15:54 தொ). இயேசுவின் வேதனையுடன் இணைக்கப்படும் போது மரணமானது ஒரு பொருளையும், மீட்பு மதிப்பீட்டையும் பெறுகிறது: எங்களுள் சாவும். உங்களுள் வாழ்வும் செயலாற்று கிறது” (2 கொரி. 4:1).

ஆனால். அங்கலாய்ப்பானது இன்னும் ஆழமான நிலையில் மீண்டும் தோன்றலாம். இந்நிலையில் மனிதனு டைய மரணத்தையும் தன் சொந்த மீட்பை யும் பற்றி பவுல் அக்கறை கொள்ள வில்லை. ஏனெனில் இவை விசுவாசத்தி னால் பெறப்பட்டுவிட்டன என்று அறிந்தி ருந்தார் (உரோ 5:1-5: 8:24). ஆனால் மற்றவர்களின் மீட்பையும் மற்ற மக்களின் விடுதலையும் பற்றி அங்கலாய்ப்பு தோன்றுகிறது. மோசேயைப் போன்று. தனது சகோதரர்களுக்காக சாபத்துக்கு உட்பட விரும்புவதாக பவுல் இப்பொரு ளிலேயே கூறுகின்றார் (9:3); தான் துன்புற, கிறிஸ்துவோடு சேர்ந்து துன்புற அவர் விரும்புகிறார் (8:17). உண்மையில், இறுதி வரை உலகம் ஏங்கிக்கொண்டே இருக் கின்றது (8:18-23) ; அதன் மற்றொரு கூறின் அடிப்படையில் நம்பிக்கை எழுகிறது: ஆவியின் மூலமாக, இது உறுதியானதாக மட்டுமில்லாமல் மாறாத்தன்மையையும் எதிர்பார்ப்பையும் கொண்டதாக உள்ளது (8:24-25). இயேசு தனது பலியின் முன்னனுபவத்தால் முழுமையாக ஆட் கொள்ளப்பட்டதைப் போன்று (லூக் 12:50). அப்போஸ்தலரும் கிறிஸ்துவின் அன்பி னால் முழுமையாக மேற்கொள்ளப்படு கிறார் (2 கொரி 5:14), வேதனை மற்றும் கலக்கத்தின் விளிம்பில் அவரை நாம் கண்டாலும் (2 கொரி 6:4), நம்பிக்கை இழந்தவராகவோ, நசுக்கப்பட்டவராக வோ அவர் இல்லை (4:8), கிறிஸ்துவின் வேதனையானது நிலைத்திருக்கும். உலகமுடிவுவரை

இவ்வாறு கிறிஸ்தவன் தனது விசுவா சத்தின் மூலம் மரணம் மற்றும் மீட்பு பற்றிய எண்ணத்தின் மீது ஏற்படும் அங்கலாய்ப்பினை மேற்கொள்ள முடியு மெனில், கிறிஸ்துவினுடைய உடலின் எல்லா உறுப்பினர்களுடனும் கொண் டுள்ள ஒன்றிப்பின் விவரிக்க முடியாத அங்கலாய்ப்பிலும் வாழலாம். உறுதி யானது மற்றும் உறுதியற்றது ஆகிய இரண்டும் ஒரே மட்டத்திலும் இல்லை; ஒரே பொருளைப் பற்றியும் குறிப்பிடவு மில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *