அங்கவீனம்
சமயச் சூழ்நிலையில், குருவிடமோ அல்லது பலியிடப்பெறும் விலங்கிடமோ காணப்படும் அங்கக் குறைகளாகும்
கூடாரத்திலும், பிற்காலத்தில் ஆலயத் திலும் வழிபாட்டு சடங்குகள் முடிந்த அளவு நிறைவாகச் செய்யப்பட வேண்டும் என்பதால், அங்கவீனமுடைய குரு பிர சன்ன அப்பத்தை ஒப்புக்கொடுக்கத் தடை செய்யப்பட்டிருந்தது (லேவி 21:17). ஆனால் அவர் அந்த அப்பத்தை உண்ணலாம் (21:22). பிற்கால இறைவாக்குகளில், வர விருக்கும் மீட்பர் இத்தகைய குறைபாடு களிலிருந்து, குறிப்பாகக் குருடர்களையும், செவிடர்களையும், விடுவிப்பார் (ஏச 29:18: 35:5-6:42:7).
புதிய ஏற்பாட்டில், திருச்சபை எக் குறையுமின்றி ஆண்டவர் திருமுன் துலங்க வேண்டும் (எபே 5:27). மாசுமறுவற்ற செம்மறியென கிறிஸ்து அழைக்கப்பெறு கிறார் (1 பேதுரு 1:19). அவருடைய மாசற்ற முழுமையின் வழியாகத் தூய்மைப்படுத்து தல் நிறைவேறுகிறது (எபி 9:13-14).