அசரியா (மொத்தம் 29 அசரியா)

அசரியா (AZARIAH-யாவே உதவி செய்தார்)

  1. சாலமோனின் கீழ் உள்ள உயர் அதிகாரி. பெரிய குரு சாதோக்கின் புதல் வராவார். அகிமாசுவின் சகோதரராகவும் இருக்கலாம் (1 அர 4:2 காண்க: 2 சாமு 15:27).
  1. இவர் நாத்தானின் மகனாவார். சாலமோனின் ஆட்சிக்குட்பட்ட பன்னிரெண்டு மாகாணங்களின் அரச அலுவ லர்களுக்குத் தலைவராக இருந்தார (1 அர 4:5). சாபதுவின் சகோதரராவார். இவர் இறைவாக்கினர் நாத்தானின் மகனா (2 சாமு 12) அல்லது சாலமோ னின் அண்ணன் மகனா (2 சாமு 5:14) என்பது பற்றி அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகள் காணப்படு கின் றன.
  1. அசரியா யூதாவின் அரசர் அமசியாவின் மகனும் வாரிசுமாவார் (2 அர 14:21: 15:1.6-8. 17, 23. 27:1 நாள் 3:12). இவரு டைய மற்றொரு பெயர் ஊசியா என்ப தாகும்.
  1. யூதாவைச் சேர்ந்த ஒரு மனிதர். ஏத்தானின் மகன் செராகுவின் புதல்வர்களின் தலைமுறை அட்டவணையில் இடம் பெறுகிறார் (1 நாள் 2:8).
  1. யூதாவிலுள்ள ஒரு மனிதர். ஏகூவின் புதல்வரும், ஒபேதுவின் பேரனுமாவார். எரகுமேலின் புதல்வர்களின் தலைமுறை அட்டவணையில் சேசானின் எகிப்திய அடிமை வழியாக இடம் பெறுகிறார் (1 நாள் 2:38-39). இவரை கீழ் வரும் 14-இல் இருந்து வேறுபடுத்த வேண்டும்.
  1. அகிமாசுவின் புதல்வரும், சாதோக் கின் பேரனும் ஆவார் (1 நாள் 6:9). 
  1. பெரிய யோகானானின் குரு புதல்வரும், 6-இல் குறிக்கப்படுபவரின் பேரனுமாவார் (1 நாள் 6:10-16: எஸ் 7:3). இவர் அரசன் ஊசியா குருத்துவப் பதவி யைப் தனக்கே அபகரித்துக் கொண்டதை எதிர்த்தவராக இருக்கலாம் (2 நாள் 26:17-18).
  1. பெரிய குரு கிலிக்கியாவின் புதல்வரும். செராயாவின் தந்தையும் ஆவார் (1 நாள் 6:13-14). இவர் நாடு கடத்தப்படு தலுக்குச் சிறிது முன்பு வாழ்ந்த எஸ்ரா வின் மூதாதையர் ஆவார் (எஸ் 7:1). 
  1. கெகாத்தியர்களின் குலத்தைச் சேர்ந்தவர். சாமுவேலுக்கும் லேவியரான இசை வல்லுநர் ஏமானுக்கும் மூதாதைய ராவார் (1 நாள் 6:36). யோவேல் இவரது மகனாவார். இவர் 1 நாள் 6:24-இல் ஊசியா என்றழைக்கப்படுகின் றார்.
  1. கிலிக்கியாவின் ஒரு வழித்தோன்றல். நாடு கடத்தலுக்குப் பின் எருசலே மில் ஆலயத்தின் முக்கிய அதிகாரி (1 நாள் 9:11). ஒருவேளை நெக 11:11-இல் குறிக்கப்படும் செராயாவும் இவரும் ஒரு வரையே குறிக்கலாம்.
  1. இவர் சமயச் சீர்திருத்தங்களைச் செய்ய யூதாவின் அரசராகிய ஆசாவிற்கு உற்சாகமளித்த இறைவாக்கினர் (2 நாள் 15:1-8). இறைவாக்கினர் ஒதேதுவின் மகனாவார்.
  1. 13. யூதாவின் அரசராகிய யோச பாத்தின் புதல்வர்களில் இருவர் (2 நாள் 21:2-4). இவர்களின் தந்தைக்குப்பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற இவர்களது மூத்த சகோதரர் யோராம் இவர்களைத் தன் வாளுக்கு இரையாக்கினார். ‘அசரியா’ என்ற பெயர் யோசபாத்தின் புதல்வர்கள் பட்டியலில் இரண்டு முறை வருகிறது.
  1. அத்தலியாவைப் பதவியிலிருந்து நீக்கும் சதித்திட்டத்தில் தீவிரமாக பங்கு பெற்ற ஒரு அதிகாரி. இவர் யோராமின் மகனாவார் (2 நாள் 23:1).
  1. யூதாவைச் சேர்ந்த படைத்தலைவர். ஓபேதுவின் புதல்வர். அத்தலியாவைப் பதவி நீக்கிவிட்டு யோவாசுவை அரச ராக்க வேண்டும் என்ற சதித் திட்டத்தில் தீவிரமாகச் செயல்பட்டார் (2 நாள் 23:1). இவரை மேலே 5-ஆம் எண்ணில் குறிப் பிட்டி ருப்பவரோடு தொடர்புப்படுத்தக் கூடாது.
  1. எப்பிராயிம் மக்கள் தலைவர்களில் ஒருவர். யோகானானின் புதல்வர். சிறைப்பிடித்தவர்களை வேண்டி பெக்காவின் விடுவிக்க படையினை வலியுறுத்தியவர்களில் ஒருவர் (2 நாள் 23:12).
  1. எசக்கியாவின் காலத்தில் யோவேல் என்றழைக்கப்பட்ட கெகாத்தியர் குலத்தைச் சேர்ந்த ஒரு லேவியரின் தந்தையாவார் (2 நாள் 29:12). இவர் ஆலயத்தைச் சுத்தி செய்த அலுவலில் பங்கு பெற்றார். ஆனால் 9-வது எண்ணில் குறிப்பிட்டவரோடு தொடர்புடையவர் இல்லை.
  1. எகல்லலேலின் மகன். எசக்கியா காலத்திலிருந்த மெராரிய குலத்தைச் சேர்ந்த ஒரு லேவியர். ஆலயம் சுத்தி செய்தபோது உதவியவர் (2 நாள் 29:12).
  1. எசக்கியாவின்கீழ் இருந்த தலை மைக்குரு (2 நாள் 31:10.13). ஆலயத்தில் மக்கள் அளித்த பொருட்களைச் சேமித்து வைப்பதற்கென அறைகளைக் கட்டினார். இவர் சாதோக்கின் குடும்பத்தைச் சேர்ந்த வரும், ஆண்டவரது ஆலயத்தின் முக்கிய அதிகாரிகளின் தலைவரும் ஆவார் (1 நாள் 9:11: நெக 11:11; எரே 20:1). இவர் 27-இல் குறிக்கப்படுபவராக இருக்கலாம். 20. அசரியா என்பவர் தன்னுடைய வீட்டிற்குப் பின்னாலிருந்த எருசலேம் மதில் சுவரைப் பழுது பார்த்தவரும் மாசே யாவின் மகனுமாவார் (நெக 3:23-24).
  1. நாடு கடத்தப் பெற்றதற்குப்பின் உள்ள காலக் கட்டத்தில் இருந்த ஒரு தலைவர். அடிமைத் தனத்திலிருந்து விடு தலைப்பெற்று செருபாபேலோடு திரும்பி வந்தவர்களில் இவரும் ஒருவர் (நெக 7:7). இதற்கு இணையான பகுதியில் ‘செராயா’ என்று குறிப்பிடப்படுகிறார் (எஸ் 2:2: காண்க நெக 12:1).
  1. எஸ்ராவின் காலத்தின் சட்டத்தை மக்களுக்கு எஸ்ரா வாசிக்க. அதைப் புரி கின்ற விதத்திலே விளக்கிக் கூறிய ஒரு லேவியர் (நெக 8:7-8). இவர் எபிரேயத்தியி லிருந்து அரமேயிக்குக்கு மொழிபெயர்த்தி ருக்கலாம்.
  1. நெகமியாவின் காலத்தில் புதுப் பிக்கப்பட்ட இஸ்ராயேலின் உடன்படிக் கையில் கையொப்பமிட்ட குருக்களில் ஒருவர் (நெக 10:2).
  1. இவர் யூதா நாட்டுக் குருவாக அல்லது தலைவராக இருந்தவர் (நெக 12:33).
  1. ஓசாயாவின் மகன். இறைவாக்கி னர் எரேமியாவின் எதிரிகளில் ஒருவர் (எரே 42:2). எரே 42:1- இல் சில வாசகங் கள் இவரை எசனியா என்று குறியிடு

கின்றன. 26. தானியேலின் தோழர்களில் ஒருவ ரான ஆபதுநெகோவின் மூல எபிரேயப் பெயர் (தானி 1:6.7.11.19; 2:17: 3:25.88 (1:2.66); மக் 2:59).

  1. ஊசியாவின்கீழ் உள்ள தலைமைக் குரு (2 நாள் 26:17.20) அரசன் குருவின் பணியை ஆற்றுவதை எதிர்த்த குருக்களின் தலைவராக இருந்தவர். இவர் 19-இல் குறிக்கப்பட்டவராக இருக்கலாம்.
  1. அடிமைத் தனத்திலிருந்து வந்த பின் எருசலேமில் வாழ்ந்தவர்களாகக் கூறப்படுகின்றவர்களின் பட்டியலில் இவர் ஒரு குருவாகக் கருதப்படுகின்றார். சிலிக்கியாவின் மகனாவார். ஆண்டவரது ஆலயத்தின் தலைமைக் குருவாகவும் எண்ணப்படுகின்றார் (1 நாள் 9:11). இவர் 8-இல் குறிக்கப்பட்டவராக இருக்கலாம். நெக II:II-ல் இவர் செராயா என்றழைக் கப்படுகிறார். ஒருவேளை இதுவே சரி யான வாசகமாக இருக்கலாம் 
  1. யூதா மக்கபேயுவின் படையில் ஒரு அதிகாரி (1 மக் 5:18.56.60). யூதா இல்லாத காலங்களில் படைத்தலைவராகப் பொறுப் பேற்றிருப்பவர். கோர்க்கியா என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *