அசனாத்து (ASENATH – நெயித் என்ற கடவுளுக்குரியது)
ஒனின் குருவாகிய போத்திபராவின் மகள். பாரவோன் மன்னன். யாக்கோ பின் மகன் யோசேப்புக்கு இவளை மனைவியாகக் கொடுத்தார். இவள் மூலம் யோசேப்புக்குப் பிறந்தவர்கள் மனாசே, எப்பிராயிம் என்பவர்கள் ஆவர். (ஆதி) 41:45.50-52: 46:20)
கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் கிரேக்கப் போலிநூலில் இவளது புற இனத் தன்மையை மாற்றி விளக்கம் அளித்தனர். இவளைச் செக்கேம்-தீனா ஆகியோரின் மகள் என்று கூறி அவளை ஒரு எபிரேயப் பெண்ணாக்கினர். அவளை போத்திபரா தத்து எடுத்துக் கொண்டார். மற்றொரு பாரம்பரியம், இவளை எகிப்தியள் ஆக்கியது. ஆனால் அவள் யோசேப்பால் யாவே வழிபாட்டுக்கு மதமாற்றப்பட்டாள்.