அசாசேல் (AZAZEL-பாவப் பரிகாரக் கிடா
அசாசேல்’ என்ற வார்த்தை பாவப் பரிகாரப் பலி செலுத்தப்படும் நாளில் பாலை நிலத்திற்கு ஒட்டி விடப்பபடுகின்ற பாவங்களைச் சுமக்கும் வெள்ளாட்டுக் கிடாயைக் குறிக்கிறது (லேவி 16:18.10-26). இவ்வார்த்தைக்கு மூன்று விளக்கங்கள் தரப்படுகின்றன.
அ) பாவங்களைச் சுமக்கும் வெள் ளாட்டுக்கிடாயைக் குறிக்கிறது என்பது “எழுபது நூல்கள்”, வுல்கத்தா போன்ற வைகளின் கருத்தாகும். இதிலிருந்து வேறு பட்ட குறிப்புக்களில், இவ்வார்த்தை யானது ‘துரத்துதல்’ ‘நீக்குதல்’ என்ற பொருள்படுகின்ற அராபிய அசாலா என்று வார்த்தையோடு படுத்தப்படுகிறது. தொடர்பு
ஆ) பாவங்களைச் சுமக்கும் வெள் ளாட்டுக் கிடாயானது ஓட்டிவிடப்படு கின்ற பாலைநிலத்தை இவ்வார்த்தை குறிக்கிறது. இக்கருத்து யூத ராபிகளின் விளக்க நூல்களில் காணப்படுகிறது. ஒரு சிலர் ‘அசாசேல்’ என்ற இப்பெயரை ‘கரடுமுரடான’ என்று பொருள் கொள்ளப் படுகின்ற ‘அஸ்ஸா’ என்ற அராபியச் சொல்லோடு தொடர்புபடுத்திச்’ செங்குத் தான இடம் என்று பொருள்படுகின்ற பேத்து-கித்துதோ என்ற இடத்தை அடை யாளம் காட்டுகின்றனர்.
இ) பாலைநிலத்தில் குடியிருக்கின்ற சாத்தானைக் குறிக்கின்ற பெயராகும் என்பது இன்றைய விளக்கவுரையாளர் களால் ஏற்றுக் கொள்ளப்பட்டக் கருத்தா கும். ஆனால் எந்த ஒரு பண்பாட்டிலும் வெள்ளாட்டுக் கிடாய்கள் சாத்தானுக்குப் பலியிடப்படுவதில்லை. மேலும் லேவி 16-இல் ஆடு சாத்தானுக்குப் பலியிடப் படுவதாகக் கூறப்படவில்லை: மாறாக, இஸ்ராயேலின் பாவங்களைச் சுமந்து சென்று சாத்தானுக்கு அவமானமாக அனுப்பப்படுகிறது. மனித பாவங்கள் சாத்தானுக்குச் சொந்தமாகின்றன. ஆடு பாவங்களைச் சுமந்து செல்லும் வாகன மேயொழிய பரிகாரப்பலிப் பொருள் அல்ல.